விண்வெளி திட்ட பொருட்களை உள்நாட்டில் உருவாக்க ஒப்பந்தம்

திருவனந்தபுரம், விண்வெளி திட்டங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து உலோகப் பொருட்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின், தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: விண்வெளி துறையில், இந்தியா முன்னோடியாக விளங்கி வருகிறது. இந்தத் துறையில் மேலும் வளர்ச்சிகளை அடைவதற்கான முயற்சிகள் … Read more

அயோத்தியில் பிரியங்கா சோப்ரா சாமி தரிசனம்

இந்திய நடிகையாக இருந்து தற்போது ஹாலிவுட்டிலும் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் பிரியங்கா சோப்ரா. அவ்வப்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இருக்கிறார். தற்போது அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்ட பிரியங்கா சோப்ரா 2018ம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மால்டி மேரி என்ற மகள் உள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பிறகு அந்த கோவில் இந்திய சுற்றுலா மற்றும் ஆன்மிக ஸ்தலத்தில் … Read more

சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் பெற்ற அல்லு அர்ஜுன்

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், 'புஷ்பா' படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். தற்போது 'புஷ்பா 2' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற உள்ளது. அங்கு படப்பிடிப்புக்காக வாகனங்களை ஓட்ட வேண்டிய காட்சிகளில் அல்லு அர்ஜுன் நடிக்க வேண்டி உள்ளதாம். அதற்காக எந்தவிதமான சட்ட சிக்கல்களும் வந்துவிடக் கூடாது என சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பித்திருந்தார் அல்லு அர்ஜுன். அந்த லைசென்ஸை கைரதாபாத் ஆர்டிஓ … Read more

பச்சை நிற உடை உத்தரவை திரும்ப பெற்றது ‘சொமேட்டோ’

புதுடில்லி, சைவ உணவுகளை வினியோகிக்கும் ஊழியர்களுக்கு பச்சை நிற சீருடை வழங்கிய பிரபல, ‘ஆன்லைன்’ உணவு வினியோக நிறுவனமான, ‘சொமேட்டோ’வுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த உத்தரவு திரும்ப பெற்றப்பட்டது. ஆன்லைன் உணவு வினியோக நிறுவனமான, ‘சொமேட்டோ’வில் பணியாற்றும் வினியோக பணியாளர்களுக்கு, சிவப்பு நிற சீருடை வழங்கப்பட்டு இருந்தது. இதில், சைவ உணவுகளை மட்டும் வினியோகம் செய்யும் பணியாளர்களை தனியாக பிரித்து அவர்களுக்கு பச்சை நிறத்தில் புதிய சீருடையை, ‘சொமேட்டோ’ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. … Read more

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரை திட்டி வீடியோ வெளியிட்ட ரோபோ சங்கர்

நடிகர் ரோபோ சங்கர் திரைப்பட சூட்டிங்கிற்காக ஊட்டி சென்றுள்ளார். அங்கே சூட்டிங் ஸ்பாட்டில் தான் படும் கஷ்டங்களை வீடியோவாக வெளியிட்டுள்ள ரோபோ சங்கர், 'ஊட்டில காலையில 6 மணிக்கு சூட்டிங் கூப்பிடுறார் ஆடம்ஸ். நான் இங்க ஊசி போட்டு வந்து உட்கார்ந்து இருக்கேன். இங்க என்னடனா காலையில் 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரை சூட்டிங் எடுக்கனுமாம். படத்தோட டைட்டில கேட்டாலும் சொல்ல மாட்றான். சாப்பாட்ட வாயில வைக்கும் போது தான் கூப்பிடுறான். ஏன் … Read more

ராஜமவுலிக்கு பரிசு கொடுத்து வாழ்த்திய 83 வயது ஜப்பான் ரசிகை

ராஜமவுலி இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்தாண்டு ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொண்டு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை இசையமைப்பாளர் மரகதமணிக்கு பெற்று தந்தது. அதுமட்டுமல்ல உலக அளவில் அங்கே வருகை தந்திருந்த பல நாட்டு பிரபலங்கள் அனைவரையும் அந்த படம் வசீகரித்தது. மேலும் அதைத் தொடர்ந்து பல நாடுகளில் அந்த படம் மொழிமாற்றம் செய்தும் திரையிடப்பட்டது. குறிப்பாக ஜப்பானில் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் … Read more

'மரியான்' மாதிரி இருக்குமா 'ஆடுஜீவிதம்' ?

பிளஸ்ஸி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலா பால் மற்றும் பலர் நடித்துள்ள மலையாளப் படம் ‛தி கோட் லைப் – ஆடுஜீவிதம்'. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக மார்ச் 29ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதை, பரத்பாலா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், தனுஷ், பார்வதி மற்றும் பலர் நடிப்பில் 2013ல் வெளிவந்த 'மரியான்' படம் போல இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. … Read more