2024ல் வெற்றியைத் தேடும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் எனப் பெயர் பெற்ற விஜய் கூட அவரது கட்சிப் பெயரில் 'வெற்றி' என்பதை சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துவிட்டார். பெயரில் உள்ள வெற்றி 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கிடைக்குமா என்பதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், தமிழ் சினிமாவில் ஒரு வெற்றியைப் பெற இந்த 2024ம் ஆண்டில் இரண்டரை மாதங்கள் ஆன பிறகும் கூட தவிக்க வேண்டியதாக இருக்கிறது. “மலையாளப் படங்கள் ஓடுதுங்கறாங்க, … Read more

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மகள் திருமணம்

தமிழில் 'வசந்த மாளிகை, தனிக்காட்டு ராஜா, தெய்வப் பிறவி, மைக்கேல் ராஜ், கைநாட்டு' உள்ளிட்ட படங்கள் தெலுங்கில் ஏராளமான படங்கள், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலும் படங்களைத் தயாரித்தவர் மறைந்த தயாரிப்பாளர் டி.ராமா நாயுடு. அவரது இரண்டாவது மகன் வெங்கடேஷ் தெலுங்கில் சீனியர் நடிகர்களில் ஒருவர். சென்னையில் பிறந்து லயோலா கல்லூரியில் படித்து வளர்ந்தவர் வெங்கடேஷ். அவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன். மூத்த மகளுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகள் ஹயவாஹினிக்கு ஐதராபாத்தில் இன்று … Read more

Only education can change human behavior! | கல்வி மட்டுமே மனித நடத்தையில் மாற்றம் ஏற்படுத்தும்!

சமீபத்தில், சென்னை யில் நடந்து முடிந்த புத்தகக் காட்சி அரங்கில், தொகுப்பாளினியாக கவனத்தை ஈர்த்த திருநங்கை ஜெஸ்சி: எனக்கு சொந்த ஊர், திருத்தணி அருகே இருக்கும் ராமகிருஷ்ணராஜு பேட்டை. நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே இந்தக் கிராமத்தில் தான். பள்ளிப் படிப்பின்போது எனக்கு மனரீதியான மாற்றம் வந்தது. ஆனால், அதை யாரிடம், எப்படிச் சொல்வது, என்ன செய்வது என்று புரியாமலேயே கடந்தேன். பல விஷயங்களுக்கு பயந்து, மாணவனைப் போலவே பேன்ட், சட்டை அணிந்தேன், தலை சீவினேன், … Read more

சத்தமில்லாமல் படப்பிடிப்பை முடித்த கவின்

நடிகர் கவின் தற்போது இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' படத்திலும், சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் 'கிஸ்' என்ற புதிய படத்திலும் நடித்து வருகிறார். இது அல்லாமல் இயக்குனர் நெல்சன் முதல் முறையாக தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வந்தார். இப்படத்தை நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார். இதற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார் என தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இதன் படப்பிடிப்பு சென்னை, மைசூர் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு … Read more

Former Chief Ministers daughter Kavitha is in 7-day ED custody | மாஜி முதல்வர் மகள் கவிதாவுக்கு 7 நாள் ஈ.டி., காவல்

புதுடில்லி,: டில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை, வரும் 23ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்குப் பதிவு டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மதுபான தயாரிப்பு, வினியோகம் மற்றும் விற்பனையில், 2021 – 22ம் ஆண்டு புதிய கொள்கை … Read more

தமிழில் மீண்டும் பிஸியான தேவிஸ்ரீ பிரசாத்

தமிழில் இனிது இனிது காதல் இனிது என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தெலுங்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். அதையடுத்து தமிழில் ஆறு, அலெக்ஸ் பாண்டியன், கந்தசாமி, புலி, சிங்கம், சிங்கம் 2, திருப்பாச்சி, வில்லு என பல படங்களுக்கு இசையமைத்தார். கடைசியாக சாமி 2 படத்திற்கு இசையமைத்தார். அதன்பிறகு கடந்த 6 ஆண்டுகளாக தமிழ் படங்களுக்கு இசையமைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் தமிழில் புதிய படங்களில் கமிட்டாகி பிஸியாகி வருகிறார். அந்த வகையில், ஹரி … Read more

Indian couple, daughter killed in mysterious fire accident in Canada | கனடாவில் மர்ம தீ விபத்து இந்திய தம்பதி, மகள் பலி

ஒட்டாவா : கனடாவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களின் மகள் என, மூன்று பேர் தீயில் கருகி பலியாகினர். வட அமெரிக்க நாடான கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தின் பிராம்ப்டன் நகரில் வசிப்பவர் ராஜிவ் வரிக்கோ, 51. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், தன் மனைவி ஷில்பா கோதா, 47, மகள் மாஹேக், 16, ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு, … Read more