2022-ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு 'பிரியாணி' – ஸ்விகி வெளியிட்ட தகவல்
புதுடெல்லி, பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவு வகைகளை பட்டியலிட்டு வெளியிடுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பட்டியலை ஸ்விகி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது. ஸ்விகி பட்டியலில் பிரியாணி 7-வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.28 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. … Read more