அணுக்கருக்களை இணைப்பதன் மூலம் மாசில்லா அதிக ஆற்றலை உருவாக்கும் மின்சக்தி விஞ்ஞானிகள் சாதனை

கலிபோர்னியா, கலிபோர்னியாவில் உள்ள விஞ்ஞானிகள் அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியுள்ளனர். விஞ்ஞான முன்னேற்றத்தின் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாகவும், மனித வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் இருக்கும், அணுக்கரு இணைவு மூலம் மாசில்லா அதிக ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ஆராச்சியாளர்கள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர். அணுக்கருவை பிளவுபடுத்துவதற்குப் பதிலாக இரண்டு அணுக்கருக்களை இணைப்பதன் மூலம் தற்போது அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நுட்பமான பிளவு, பிளவு ஆகியவற்றிலிருந்து வேறுபடுகிறது. இணைவு ஆராய்ச்சியின் நோக்கம் சூரியனில் … Read more

இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி சட்டக்கல்லூரி மாணவி மனு தாக்கல்: அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை

புதுடெல்லி, இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சட்டக்கல்லூரி மாணவி வழக்கு தொடர்ந்து இருந்தார். நாட்டில் சாதி வாரியாக இடஒதுக்கீடு என்பது அமலில் இருந்து வருகிறது. இதனை ரத்து செய்யக்கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிவானி பன்வர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இடஒதுக்கீடு முறை என்பது சாதிய பாகுபாடுகளை வளர்க்கிறது என்பது போலவும் அதில் குறிப்பிட்டு இருந்த்தார். இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு … Read more

நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை அறிவித்தது ஐசிசி..!

துபாய், ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கணையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் மாத சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் டி20 கேப்டன் கேப்டன் ஜோஸ் பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நவம்பர் மாத சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தானின் சித்ரா அமீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பையில் அதிரடி காட்டியதுடன் இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.94 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 கோடியே 40லட்சத்து 036 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 62 … Read more

இடஒதுக்கீடு முறைய ரத்து செய்ய கோரி மாணவி மனு தாக்கல் – விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

புதுடெல்லி, நாட்டின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய உத்தரவிட கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த மனுவை இன்று பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், விளம்பர நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்து, திரும்ப பெற அனுமதியளித்து, மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் பொதுநல மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் மனுதாரருக்கு … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பாகிஸ்தானின் தோல்வி…இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசம்..! தற்போதைய நிலை என்ன ?

மும்பை, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு தகர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.அந்த அணி இறுதிப்போட்டி வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகி … Read more

நாசாவின் 'ஓரியன்' விண்கலம் பூமிக்கு திரும்பியது

வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப ‘ஆர்டெமிஸ்’ என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல ‘ஓரியன்’ என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது. சோதனை முயற்சியாக ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்ட நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, கடந்த மாதம் 16-ந் தேதி ‘ஆர்டெமிஸ்-1’ ராக்கெட் மூலம் ‘ஓரியன்’ விண்கலம் … Read more

எல்லையில் வாலாட்டிய சீன ராணுவம் – விரட்டி அடித்த இந்திய ராணுவம்…!

இட்டாநகர், லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருகிறது. இந்தியா- சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கவும் இருதரப்பும் … Read more

எங்கள் நாட்டிற்காக விளையாட வாருங்கள்… அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைக்கு சஞ்சு சாம்சன் அளித்த பதில்

திருவனந்தபுரம், இந்திய கிரிக்கெட்டில் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமாக வலம் வருபவர் சஞ்சு சாம்சன். மிகவும் திறமை வாய்ந்த வீரரான இவர், அண்டர் 19 கிரிக்கெட் காலத்தில் இருந்த ரசிகர்களிடையே பெயர் பெற்றவர். ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவர், கடந்த ஐபிஎல் போட்டியில் அந்த அணியை இறுதிப்போட்டி வரை கொண்டுவந்தார். இந்திய அணிக்காக 2015ஆம் ஆண்டிலேயே அறிமுகமான சஞ்சு சாம்சன், இந்த 7 ஆண்டுகளில் வெறும் 16 டி20 போட்டி, 11 … Read more

இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை…!

கொழும்பு, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடந்த மாதம் 28-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்து, 24 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து 24 பேரும் சிறையிலில் அடைக்கப்பட்டனர். இந்த … Read more