இந்திய ஒற்றுமை பயணத்தின் ஜம்மு-காஷ்மீர் ஒருங்கிணைப்பாளராக ஜி.ஏ. மிர் நியமனம்

ஜம்மு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆளும்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் நடைபயணத்தை நடத்தி வருகிறார். ராகுல் காந்தியின் நடைபயணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் ஜம்மு-காஷ்மீரில் நுழைய உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஜம்மு-காஷ்மீர் பொறுப்பாளரும், எம்பியுமான ரஜினி பாட்டீல் … Read more

பகல்-இரவு டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை 77 ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா…!

அடிலெய்டு, ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு ஆட்டம்) அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 511 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்து இருந்தது. தேஜ்நரின் சந்தர்பால் 47 ரன்களுடனும், ஆண்டர்சன் பிலிப் ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் … Read more

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது

வாஷிங்டன், நிலவை ஆய்வு செய்வதற்காக நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் நவம்பர் 25ம் தேதி முதல் சந்திரனை சுற்றி ஆய்வு செய்தது. மிக அருகில் நிலவின் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியது. இந்த நிலையில் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவில் தனது பணிகளை முடித்துக் கொண்டு அதன் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி கடந்த வாரம் பூமிக்கு திரும்ப தொடங்கியது. இன்று இரவு 11.10 … Read more

இமாசலபிரதேச முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு பதவி ஏற்பு – பிரதமர் மோடி வாழ்த்து

சிம்லா, இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை சென்ற 8-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து, சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) சுக்விந்தர் சிங் சுக்குவும் (வயது 58), துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில், இமாசலபிரதேச … Read more

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது

மும்பை, பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. இந்த நிலையில் இந்தியா … Read more

ரஷியா ட்ரோன் தாக்குதல்: ஒடேசா நகர மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் கவலை

கீவ், தனது அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகள் துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. அதே வேளையில் ரஷியாவும் போரில் இருந்து பின்வாங்குவதாக … Read more

யோகா, ஆயுர்வேதம் உலகிற்கு புதிய நம்பிக்கை – பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, கோவாவின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காஜியாபாத் தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் மற்றும் டெல்லியில் உள்ள பனாஜியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் ஆகிய 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- ஆயுர்வேதம் என்பது சிகிச்சை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. யோகா & ஆயுர்வேதம் உலகிற்கு புதிய நம்பிக்கை. ஆயுர்வேதத்தின் முடிவும் விளைவும் எங்களிடம் இருந்தது, ஆனால் சான்றுகளின் … Read more

இஷன் கிஷன் ஆடிய இன்னிங்ஸ்க்கு எனது இரட்டிப்பு வாழ்த்துக்கள் – சச்சின் டெண்டுல்கர்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி பெற்று தொடரை சொந்தமாக்கியது. இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. … Read more

ஜி-7 நாடுகளின் எண்ணெய் விலை உச்சவரம்பு முடிவுக்கு இந்தியா ஆதரவில்லை; ரஷியா வரவேற்பு

மாஸ்கோ, உக்ரைனில் ராணுவ நடவடிக்கை பெயரில் ரஷியா போர் தொடங்கியது முதல் சர்வதேச அளவிலான எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ரஷியாவை வழிக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட நாடுகள் பொருளாதார தடை விதித்தும் பலனில்லை. இதனால், ரஷிய இறக்குமதி எண்ணெய்க்கு விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது என்று கடந்த செப்டம்பரில் ஜி-7 நாடுகள் முடிவு செய்தன. இதன்படி, இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றியமும் அப்படியே ஏற்கிறோம் என கூறியது. இதனை தொடர்ந்து, ஜி-7 … Read more

பணமோசடி வழக்கு: டெல்லி ஐகோர்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சத்யேந்திர ஜெயின் மேல்முறையீடு

புதுடெல்லி, தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின். கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரின் குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது. ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயினை கடந்த மே … Read more