பயிற்சியாளருடன் மோதல்: உலகக்கோப்பையில் இருந்து பாதியில் வெளியேறுகிறாரா..! ரொனால்டோ விளக்கம்

தோஹா: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணியின் கேப்டனும், கோல் மெஷின் என அழைக்கப்படும் தலைசிறந்த வீரருமான கிறிஸ்டியானா ரொனால்டோ (வயது 37), களமிறக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார். அதிலும் அவருக்கு பதிலாக 21 வயது இளம்வீரர் ரேமோஸ் களமிறக்கப்பட்டார். இத்தனைக்கும் லீக் போட்டிகள் அனைத்திலும் … Read more

கென்ய பள்ளிகளில் மதிய உணவு திட்டம்; இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு குழு

நைரோபி, இந்தியாவில் செயல்படும் மதிய உணவு திட்டம் பற்றி அறிந்து கொண்டு அவற்றை தங்களது நாட்டில் அமல்படுத்தும் நோக்கில் கென்யா நாட்டில் இருந்து குழு ஒன்று வருகை தந்துள்ளது. இந்த குழுவில் அந்நாட்டின் நைரோபி நகர துணை கவர்னர் ஜேம்ஸ் ஜோரோஜ் முசிரி, தலைமை கல்வி அதிகாரி ரூத் ஆவுவர் மற்றும் நாடுகளுக்கு இடையேயான தொடர்புகள் துறை இயக்குனர் ஜாய்ஸ் கின்யான்ஜூய் உள்ளிட்ட உயர் பதவிகளை வகிப்பவர்கள் வருகை தந்தனர். இதுபற்றி துணை கவர்னர் ஜேம்ஸ் கூறும்போது, … Read more

இமாச்சலபிரதேச முதல்-மந்திரியாக சுக்விந்தர் சிங் சுக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்

சிம்லா, 68 இடங்களை கொண்டுள்ள இமாசலபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின. இமாசலபிரதேச மாநிலத்தில் 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் என்ற சரித்திரம், இந்த முறையும் மாறவில்லை; தொடருகிறது. குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, … Read more

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் பி.டி.உஷா..!

புதுடெல்லி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் தில்லியில் வருகிற டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் இறுதி வாரத்திலேயே முடிவடைந்தது. கடந்த மாதம் 27ம் தேதி 58 வயதான பி.டி.உஷா இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். … Read more

ஐ.நா.வின் மனிதநேய உதவி தடைக்கு விலக்கு அளிக்கும் தீர்மானம்; புறக்கணித்த இந்தியா… ஏன்?

ஐ.நா. சபை, ஐ.நா.வில் 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து நாடுகள் வரைவு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. இதன்படி, மனிதநேயம் சார்ந்த உதவிகளுக்கான முயற்சிகளுக்கு தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் இந்த தீர்மானம் அமைந்து இருந்தது. இந்த தீர்மானத்திற்கு 14 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. எதிராக ஒருவரும் வாக்களிக்கவில்லை. எனினும், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா அதனை புறக்கணித்து உள்ளது. இதனால், பெரும்பான்மை பெற்ற நிலையில் வரைவு … Read more

மனதை கல்லாக்கி மகள்கள் மீது தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற தாய்…! காரணம் என்ன?

கோலார், கர்நாடக மாநிலம் முலபாகிலு நகரில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் குடும்பத் தகராறில் தனது இரு மகள்கள் மீது தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் ராமசமுத்திரத்தில் உள்ள குருபனஹள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஜோதி. இந்த நிலையில் ஜோதி நேற்று காலை குடும்பத் தகராறில் தனது மகள்களுடன் அஞ்சனாத்ரி மலை உச்சிக்கு வந்துள்ளார். தனது மகள்கள் மீது தீ வைத்துள்ளார். பின்னர் தன் மீதும் தீ வைத்துக் கொள்ள … Read more

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : முகமது ஷமி, ஜடேஜா விலகல் ?

மிர்புர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. வங்காளதேச அணிக்கு எதிரான … Read more

விரைவில் 150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கம் – எலான் மஸ்க் அதிரடி

சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் விரைவில் 150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்,அதாவது பல வருடங்களாக டுவீட் அல்லது டுவிட்டரில் உள்நுழைவு இல்லாத … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி – திருப்பதியில் வெளுத்து வாங்கும் கனமழை – பக்தர்கள் கடும் அவதி

‘மாண்டஸ்’ புயல் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை பெய்வதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. . புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை … Read more

2வது டெஸ்ட் : முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 511 ரன்கள் குவித்து டிக்ளேர்

அடிலெய்டு, ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்து 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .பின்னர் டிராவிஸ் ஹெட், லபுசேன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சதமடித்து அசத்தினர். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 89 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்தது. லபுசேன் 120 ரன்னும், … Read more