வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் முர்ரே காலமானார்

பிரிட்ஜ்டவுன், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் முர்ரே தனது 72 வயதில் காலமானார். இவரது மறைவு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 1973 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய டேவிட் முர்ரே, விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். அந்த சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி கண்ட சிறந்த விக்கெட் கீப்பராக டேவிட் முர்ரே திகழ்ந்தார். அவர் … Read more

ஏவுகணை விஞ்ஞானிகளுடனான ஆலோசனைக்கு மகளுடன் வந்த கிம் ஜாங் அன்..!

சியோல், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதல் முறையாக தனது மகளை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தினர். தனது நாட்டைப்போலவே தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் ரகசியம் காத்து வரும் வடகொரியா அதிபர் கிம் ஜான் அன், முதல் முறையாக தனது மகளான ஜூ ஏவுடன் வருகை தந்தது உலக அளவில் கவனம் பெற்றது. வடகொரியாவின் எதிர்கால அரசியல் தலைவராக மகளை அறிமுகப்படுத்த தயார் செய்வதற்கான முன்னோட்டமாக கிம் ஜாங் அன் மகளுடன் … Read more

காங்கிரஸ் கட்சியில் யாரிடமும் வருத்தமோ, கோபமோ இல்லை – சசி தரூர்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் எம்.பி.யான சசிதரூர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மல்லிகார்ஜூனகார்வே தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைவரானார். இதனிடையே, சசிதரூர் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் சசிதரூர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு கட்சியின் மூத்த தலைவர்கள், சிவில் சமூகத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார். மேலும், பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். … Read more

ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பாடல் பாடி நடனமாடிய தோனி- வைரல் வீடியோ

துபாய், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ளார். துபாயில் நடந்த தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் எம்.எஸ்.தோனி நேற்று தனது மனைவியுடன் கலந்து கொண்டார். நியூசிலாந்தில் டி20 தொடரை கைப்பற்றிய கையுடன் ஹர்திக் பாண்டியா, தோனி உடன் துபாயில் இணைந்துள்ளார். தற்போது இந்த விழாவில் பாண்டியாவுடன் இணைந்து தோனி நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தோனியின் மனைவி சாக்சி … Read more

எங்கு போனாலும் இடிக்கிறது… பெரிய மார்பை குறைக்க நிதி திரட்டி வரும் பெண்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கில் வசித்து வருபவர் ஜாஸ்மின் மெக்லெட்சி (வயது 33). கேக், ரொட்டி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது கணவர் பால் வில்லியம்ஸ் (வயது 51). இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளது. கணவர் தரையில் விரிப்பு, கம்பளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். ஜாஸ்மின் சிறு வயதில் பள்ளிக்கு போகும்போதே உடல் பருமனுடன் காணப்பட்டு உள்ளார். அவருடன் படிக்கும் சக மாணவிகள் உடல் பருமனை விட அவரது பெரிய மார்பை … Read more

மும்பை விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

மும்பை, எத்தியோப்பியா நாட்டில் உள்ள அடிஸ் அபபா நகரில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையம் சென்ற அதிகாரிகள் எத்தியோப்பியா விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பயணிகள் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களின் உடைமைகளில் தீவிர சோதனை நடத்தினர். … Read more

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது

ஹாமில்டன், நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதால் டாஸ் … Read more

சீனாவில் தொடர்ந்து 4-வது நாளாக புதிய உச்சம்; 40 ஆயிரம் நெருங்கிய கொரோனா பாதிப்பு

பீஜிங், சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. எனினும், கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட முன்பே பரவலை சீனா கட்டுப்படுத்தி இருந்தது. இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 3,709 பேருக்கு அறிகுறி காணப்படுகிறது. … Read more

மத்தியப் பிரதேசம்: துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை

போபால், மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் தங்கநகைக் கடன் வழங்கும் வங்கியில் பீகாரைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து கட்னி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.கே ஜெயின் கூறும்போது, மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்து ஆயுதம் ஏந்திய 6 கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் … Read more

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டிக்கு கனடா முன்னேற்றம்

மாட்ரிட், ஸ்பெயினில் நடைபெற்றுவரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா முன்னேறி உள்ளது. மலாகா நகரில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியும் ஸ்பெயினும் மோதின. ஒற்றையர், இரட்டையர் என 2 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. முதலில் நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் இத்தாலியின் லோரென்சோ சோனேகோ 7-6 (7-4) 6-7 (5-7) 6-4 என்ற செட் கணக்கில் டெனிஸ் ஷபோவலோவை தோற்கடித்தார். பின்னர் உலகின் ஆறாவது நிலை வீரரான பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம், லோரென்சோ முசெட்டியை 6-3 … Read more