நிலவில் நாசாவின் ஆதிக்கத்திற்கு சவாலாக களமிறங்க சீனா திட்டம்

பீஜிங், பூமியில் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில், இடப்பற்றாக்குறையை போக்கும் வகையில் பூமி தவிர்த்து வேறு கிரகங்களில் மனிதர்கள் வசிப்பதற்கான சூழலை தேடும் ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில், நிலவு மற்றும் பூமியின் அருகேயுள்ள செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வியலுக்கான சூழல் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் தேடல் நீண்டுள்ளது. இதன்படி, அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவுக்கு கடந்த 1972-ம் ஆண்டில் விண்வெளி வீரர்களை அனுப்பியது. அதன்பின் கடந்த 50 ஆண்டுகளாக நிலவுக்கு … Read more

இளம்பெண்ணை கொலை செய்து கடற்கரையில் புதைத்து இந்தியா தப்பிய குற்றவாளி; 4 ஆண்டுகளுக்கு பின் கைது – பரபரப்பு பின்னணி

புதுடெல்லி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ராஜ்விந்தர் சிங் (வயது 38). ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற ராஜ்விந்தர் 2018-ம் ஆண்டு அந்நாட்டின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மனைவி, 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதனிடையே, 2018 அக்டோபர் 21-ம் தேதி ராஜ்விந்தருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவதம் முற்றிய நிலையில் கோபத்துடன் ராஜ்விந்தர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கையில் பழம் மற்றும் பழம் வெட்ட கத்தியுடன் குயின்ஸ்லாந்தின் கரின்ஸ் நகரில் உள்ள வெங்ஹடி கடற்கரைக்கு … Read more

முதல் ஆக்கி போட்டி : ஆகாஷ்தீப் ஹாட்ரிக் கோல் வீண் – இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

அடிலெய்டு, இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. பரபரப்பான இந்த போட்டியில் 5-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் ஆகாஷ்தீப் சிங் ஹாட்ரிக் கோல் அடித்தார் .ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார் . ஆஸ்திரேலியா சார்பில் பிளேக் கோவர்ஸ் (2 கோல் அடித்தார் . லாச்லன் ஷார்ப் , நாதன் … Read more

78 வயதில் வந்த ஆசை…! பாலியல் குற்றச்சாட்டில் 'ஸ்குவிட் கேம்' நடிகர்!

சியோல் நெட்பிளிக்ஸ் ஒடிடிட் தளத்தில் பிரபலமான தொடரான ‘ஸ்குவிட் கேம்’-இல் நடித்தவர் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த ஓ யோங்-சு. இவர் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில், தன்னை தகாத முறையில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 78 வயதான ஓ யோங்-சு ஸ்குவிட் கேம் தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார். இந்த விருதை பெற்ற முதல் … Read more

குஜராத் தேர்தல்: 20 லட்சம் வேலை வாய்ப்புகள் ; 2036 ஆம் ஒலிம்பிக் போட்டி- பா.ஜ.க தேர்தல் அறிக்கை

காந்திநகர் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி காந்திநகரில் தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * 2036 ஆம் ஆண்டு மாநிலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக ‘குஜராத் ஒலிம்பிக் மிஷன்’ தொடங்கப்படும். * பயங்கரவாத அமைப்புகள் மற்றும் இந்திய எதிர்ப்பு சக்திகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் சிலீப்பர் … Read more

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்-இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

ஸ்பெயின், ஸ்பெயினில் நடைபெற்றுவரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறி உள்ளது. அரையிறுதிப் போட்டியில் குரேஷியா உடன் ஆஸ்திரேலியா மோதியது. இதன் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் தனாஷி, குரேஷிய வீரர் கோரிக்கிடம் தோல்வி அடைந்தார். என்றாலும் அடுத்த ஆட்டத்தில் குரேஷிய வீரர் மரின் சிலிச்சை, ஆஸ்திரேலிய வீரர் டிமினார் வீழ்த்தினார். இரட்டையர் பிரிவிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் வெல்ல, 2க்கு 1 என்ற கேம் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தினத்தந்தி Related … Read more

மெக்சிகோவில் 2 அங்குல வாலுடன் பிறந்த அதிசய குழந்தை

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டின் வடகிழக்கில் ஊரக பகுதியில் அமைந்த மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார். கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை வழியே பிரசவம் நடந்து உள்ளது. இதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. பிறந்த குழந்தையின் பின்புறத்தில் 2 அங்குல நீளத்தில் வால் ஒன்று காணப்பட்டு உள்ளது. உருளை வடிவில் காணப்படும் அந்த வாலானது, தோல் மற்றும் முடி கொண்டு மூடப்பட்ட நிலையில் இருந்து உள்ளது. இதன்பின்னர் அதனை மருத்துவர்கள் அறுவை … Read more

வாரணாசி கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து

வாரணாசி, உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இன்று காலை 34 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய ஒரு பெண் உட்பட இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இன்று காலை 07.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. படகு கங்கை ஆற்றில் கெடாகாட் அருகே சென்று கொண்டிருந்த போது கவிழ்ந்தது. படகில் அதிக பாரம் ஏற்றப்பட்டதாகவும், இதனால் படகிற்குள் தண்ணீர் … Read more

அந்த ஒருநாள்…! எனக்கு எப்போதும் ரொம்ப ஸ்பெஷல் – விராட் கோலி உருக்கம்

புதுடெல்லி, டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இருப்பினும் இந்த தொடரில் விராட் கோலி 4 அரை சதங்களுடன் 296 ரன்களை எடுத்து டி20 உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா சந்தித்தது. இதில் கோலி … Read more

ஆன்லைன் காதலரை சந்திக்க ஆவலுடன் 5 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி…

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் நாடு. இதற்காக மேயர் உள்ளிட்ட உயர்ந்த அரசியல் பதவியில் உள்ளவர்கள் கூட கொல்லப்படும் சூழல் காணப்படுகிறது. கடத்தல் கும்பலை ஒழிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. இந்த நிலையில், மெக்சிகோ நாட்டில் இருந்து பிளாங்கா ஒலிவியா ஆரில்லேனோ கட்டிரெஸ் (வயது 51) என்ற பெண், ஆன்லைன் வழியே ஜூவான் பேப்லோ ஜீசஸ் வில்லாபுர்தே என்ற ஆடவரை தொடர்பு கொண்டுள்ளார். இந்த தொடர்பு நாளடைவில் காதலானது. … Read more