"சானியா மிர்சாவுக்கு சோயப் மாலிக் துரோகம்" பிரிவுக்கு முக்கிய காரணம் என்ன …?

புதுடெல்லி ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 2010 ஆம் ஆண்டு 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி தற்போது முறைப்படி விவாகரத்து செய்துவிட்டதாக கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது. சானியா மிர்சா கடந்த சில நாட்களாக இந்தியாவில் வசித்து வருகிறார்.இந்த தம்பதிகளுக்கு இஷான் என்ற மகன் உள்ளார். சானியா மிர்சா … Read more

மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – வாடிக்கையாளர்கள் 9 பேர் சுட்டுக்கொலை!

மெக்சிகோ சிட்டி, மத்திய மெக்சிகோவில் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர். அபாசியோ எல் ஆல்டோ நகரில் செயல்பட்டு வரும் ஒரு உள்ள மதுபான விடுதி கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து, உள்ளே இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மதுபான விடுதியில் இருந்த ஐந்து ஆண்களும் நான்கு … Read more

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலா?இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதில்

மும்பை, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதன் அடிப்படையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளது. இது குறித்து நேற்று புனே வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் பதிலளித்து கூறியதாவது:- நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விவகாரம் தேர்தல் ஆணையத்தின் அதிகார எல்லைக்குள் வராது. இது தொடர்பாக நாடாளுமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும். … Read more

2வது அரையிறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

அடிலெய்டு, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மல்லுக்கட்டுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளும் கிட்டத்தட்ட சரிசம பலத்துடனே தென்படுகிறது. அதனால் … Read more

மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் பலி…!

மாலே, மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தானது, அருகில் உள்ள வீடுகளுக்கும் மளமளவெனப் பரவியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 10 பேரில் 9 பேர் இந்தியர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாலேயில் உள்ள அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், … Read more

ரஷிய போரால் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் உணவு நெருக்கடி; ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, டெல்லியில் தேசிய ராணுவ கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதன்பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது, ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த பல்வேறு நாடுகளில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. போரின் விளைவால் ஏற்பட்டு உள்ள எரிபொருள் நெருக்கடியையும் உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. அதில் இந்தியாவும் அடங்கும். சர்வதேச எரிபொருள் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறால், அதிக விலை கொடுத்து … Read more

இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் விளையாட விரும்புகிறோம்… பாக். வீரர் பேட்டி

சிட்னி, டி20 உலக கோப்பை பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் 3-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. சிட்னி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு 153 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 5 பந்து எஞ்சி இருந்த நிலையில் 153 ரன் இலக்கை … Read more

ராஜினாமா செய்த இங்கிலாந்து மந்திரி: பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு !

லண்டன், இங்கிலாந்தின் ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார். பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை விடுவிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதற்கிடையே, எந்த துறைகளும் ஒதுக்கப்படாத இணை மந்திரி காவின் வில்லியம்சன், சக எம்.பி., ஒருவரை துன்புறுத்தும் வகையில், மொபைல் போனில் செய்திகள் அனுப்பியதாக புகார் எழுந்தது. ஊடகங்களில் செய்திகள் வெளியானதால் சில மூத்த அதிகாரிகளும் புகார் … Read more

திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது. தினமும் 25 ஆயிரம் … Read more

இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் பாகிஸ்தான் ரசிகை நம்பிக்கை

புதுடெல்லி 20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 153 என்ற இலக்கை துரத்தியதில் அவர்கள் 7 விக்கெட்டுகள் மற்றும் 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றனர். பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தனர். இந்த் போட்டியில் பெரிதும் வைரலானது பாகிஸ்தான் ரசிகை ஒருவர்.பாகிஸ்தான் ரசிகையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இரண்டாவது அரையிறுதியில், நவம்பர் 10, வியாழன் … Read more