முகத்தில் உதை, பெல்ட்டு, செருப்பால் அடி: மதுபோதையில் நடுரோட்டில் பெண் மீது தாக்குதல் நடத்திய இளம் பெண்கள்

போபால், மத்தியபிரதேசம் இந்தூர் மாவட்டம் தனு மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இளம்பெண் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். அந்த இளம்பெண் கடந்த 4-ம் தேதி அதிகாலை 1 மணியளவில் என்ஐஜி சந்திப்பு பகுதியில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றார். அப்போது, கேளிக்கை விடுதியில் மதுக்குடித்துவிட்டு போதையில் வந்த இளம்பெண்கள் 4 பேர் அந்த பெண் மீது திடீரென சரமாரி தாக்குதல் நடத்தினர். 4 இளம்பெண்களும் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினர். செருப்பு, பெட்டை … Read more

கேலோ இந்தியா கைப்பந்து: தமிழக பெண்கள் அணி சாம்பியன்

சென்னை, கேலோ இந்தியா விளையாட்டு போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான கைப்பந்து போட்டி இமாசலபிரதேசத்தில் உள்ள ரோரு நகரில் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், இந்திய விளையாட்டு ஆணையம் உள்பட 7 அணிகள் பங்கேற்றன. இதன் 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவின் இறுதி சுற்றில் தமிழ்நாடு-இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 3-0 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை … Read more

ஐரோப்பாவில் கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் பலி; உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா, ஐரோப்பிய நாடுகளில் நடப்பு ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குனர் ஹான்ஸ் ஹென்றி குளூஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இதுவரை கிடைத்த தகவலின்படி, ஐரோப்பாவில் நடப்பு ஆண்டின் கோடை காலத்தில் 3 மாதங்களில், கடும் வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் … Read more

10% இடஒதுக்கீடு தீர்ப்பு சமூகநீதி போராட்டத்துக்கு பின்னடைவு; முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

சென்னை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடு வழக்கில் இன்று வெளியான தீர்ப்பு, சமூகநீதியை வென்றடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களோடு கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ம் … Read more

இளம்பெண் பாலியல் வன்கொடுமை: இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஆஸ்திரேலிய கோர்ட்டு ஜாமின் மறுப்பு

சிட்னி, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா. இவர் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் தொடரில் இருந்து வெளியேறினார் இதனிடையே, குணதிலாகா ஆன்லைன் ‘டேட்டிங் ஆப்’ மூலம் 29 வயது இளம்பெண்ணுடன் பழகியுள்ளார். அந்த பெண்ணை கடந்த 2-ந் தேதி சிட்னியில் ரோஸ் பே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு வரவைத்துள்ளார். அங்கு அப்பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக … Read more

டுவிட்டரை தொடர்ந்து மெட்டா… பெருமளவு ஊழியர்களை இந்த வாரம் பணி நீக்கம் செய்ய திட்டம்

வாஷிங்டன், உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் உலகின் மிகவும் பிரபல சமூகவலைதள நிறுவனமான டுவிட்டரை சமீபத்தில் வாங்கினார். இதனையடுத்து, டுவிட்டரில் அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 7 ஆயிரத்து 500 ஊழியர்களில் 50 சதவிகித ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி கடந்த 5 ம் தேதி டுவிட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், டுவிட்டர் ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் … Read more

பெண்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய போலீசார் – உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டம் ஜலால்பூர் பகுதியில் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த அம்பேத்கர் சிலை மர்மநபர்களால் இன்று உடைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். இதனால், பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, … Read more

ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிக்சர் 'ஷாட்' குறித்து சூர்யகுமார் யாதவ் என்ன கூறினார்?

மெல்போர்ன், 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒரே நாளில் குரூப்2-ல் மூன்று முக்கியமான ஆட்டங்கள் நடந்தன. ஆஸ்திரேலிய நேரப்படி இரவில் மெல்போர்னில் அரங்கேறிய கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜிம்பாப்வேயை சந்தித்தது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். நெதர்லாந்திடம் தென்ஆப்பிரிக்கா பணிந்ததால் இந்த ஆட்டத்திற்கு முன்பாகவே இந்தியஅணியின் அரைஇறுதி வாய்ப்பு உறுதியாகி விட்டது. … Read more

வங்கி கணக்கில் சம்பளத்துடன் விழுந்த ரூ.10 கோடி; திடீர் கோடீசுவரரான காவல் அதிகாரி

கராச்சி, பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஆமீர் கோபங். இவரது வங்கி கணக்கில் சம்பளத்துடன் அடையாளம் தெரியாத வழியில் இருந்து ரூ.10 கோடி விழுந்து உள்ளது. ஆனால், இதனை பற்றி அவர் அறியவில்லை. திடீரென வங்கியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து பேசியவரிடம், உங்களது வங்கி கணக்கில் ரூ.10 கோடி விழுந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனார். இதுபற்றி கோபங் … Read more

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 26-ந்தேதி பாதிப்பு 830 ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த 11 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி இருந்தது. நேற்று பாதிப்பு 1,132 ஆக இருந்த நிலையில் 11 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு இன்று மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 61 ஆயிரத்து 516 ஆக … Read more