அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை – கடன்களுக்கான வட்டி விகிதம் 0.75 சதவீதம் உயர்வு!

வாஷிங்டன், அமெரிக்காவில் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.75 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.முக்கிய வட்டி விகிதங்கள் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் நோக்கம் அதிகபட்ச வேலை வாய்ப்பு மற்றும் பணவீக்கத்தை நீண்ட காலத்திற்கு 2 சதவீதத்தில் அடைவதாகும். இந்நிலையில், அமெரிக்காவில் நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 8.2 சதவீதமாக குறைந்துள்ளது.இது ஆகஸ்ட் மாதம் 8.3 சதவீதமாக இருந்தது. எனினும் பணவீக்கம் 2 சதவீதத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை … Read more

பச்சிளங்குழந்தையை மீட்டு தாய்ப்பால் கொடுத்து பாதுகாத்த போலீஸ் அதிகாரி ரம்யாவுக்கு ஐகோர்ட்டு பாராட்டு!

திருவனந்தபுரம், கேரளாவில் கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு பெண் போலீஸ் அதிகாரி ரம்யா பாலூட்டி பாதுகாத்த சம்பவம் அவருக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டை பெற்றுத்தந்தது. இந்த நிலையில், கேரள ஐகோர்ட்டு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் பெண் போலீஸ் அதிகாரி ரம்யாவை பாராட்டியுள்ளார்.சிவில் போலீஸ் அதிகாரி ரம்யா காட்டிய இரக்கத்தை அவர் வெகுவாக பாராட்டினார். அவரிடம் ஒப்படைக்க மாநில காவல்துறைத் தலைவருக்கு சான்றிதழை அனுப்பியுள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி ரம்யாவுக்கு … Read more

உலக இளையோர் டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் பாலமுருகன் 2 பதக்கம் வென்றார்

சென்னை, உலக டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் இளையோர் ‘கண்டன்டர்’ போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 15 வயதுக்கு உட்பட்ட பிரிவின் இறுதிஆட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பாலமுருகன் 11-4, 11-13, 7-11, 6-11 என்ற செட் கணக்கில் புயர்டோரிகா வீரர் என்ரிக்ஸ் ரியாஸ்சிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். இதேபோல் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவின் அரைஇறுதியில் பாலமுருகன் 7-11, 11-9, 11-5, 7-11, 11-13 என்ற … Read more

அமெரிக்க ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது: எதிர்க்கட்சியினரை குற்றம்சாட்டிய ஜனாதிபதி ஜோ பைடன்

வாஷிங்டன், அமெரிக்காவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். அமெரிக்காவில் எந்தவொரு ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் அவரது 4 ஆண்டு பதவிக்காலத்தின் மத்தியில் (2 ஆண்டுகளுக்குபின்) நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும். இது இடைக்கால தேர்தல் (‘மிட்டேர்ம் போல்ஸ்’) என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு ஜோ பைடன் ஜனாதிபதியாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், அவருடைய பதவிக்காலத்தில் மத்தியில், வரும் 8-ந் தேதி நாடாளுமன்ற கீழ்சபையில் உள்ள (பிரதிநிதிகள் சபை) மொத்த இடங்களான … Read more

லஞ்ச ஒழிப்பு துறையின் புகார் மேலாண்மை அமைப்பின் இணைய முகப்பு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி, மத்திய லஞ்ச ஒழிப்பு துறையின் புகார் மேலாண்மை அமைப்பின் இணைய முகப்பை பிரதமர் மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு புதிய இணைய முகப்பை பிரதமர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: இன்று பாதுகாப்புத் துறையில் நாம் சுயசார்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், மோசடிகளுக்கான வாய்ப்பும் முடிவுக்கு வந்துவிட்டது. ஊழல் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகள் ஒரு பணி முறையில் விரைவாக முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் … Read more

மேக்ஸ் ஓ டாவ்ட் பெரிய சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்படுகிறார் – நெதர்லாந்து கேப்டன்

அடிலெய்டு, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி நெதர்லாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் … Read more

உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டு 1.40 கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா அதிர்ச்சி தகவல்!

நியூயார்க், உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டோர் அகதிகளாக இருப்பதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி கவலை தெரிவித்தார்.நேற்று நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் பிலிப்போ கிராண்டி பேசியதாவது:- உக்ரைன் போர் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 14 மில்லியன் உக்ரேனியர்கள் ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் இத்தகைய அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் இடம்பெயர்வு நடப்பது இதுவே முதல்முறை. உக்ரேனியர்கள் உலகின் மிகக் கடுமையான குளிர்காலங்களில் ஒன்றை இந்த … Read more

குஜராத் சட்டசபை தேர்தல் : டிசம்பர் 1 – 5 என 2 கட்டங்களாக நடைபெறும்…!

புதுடெல்லி குஜராத் சட்டசபை தேர்தல் தேதி அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். * 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் 2023 பிப்ரவரி மாதம் 18ம் தேதி முடிவடைகிறது. * குஜராத் தேர்தலில் 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். * ஆண் வாக்காளர்கள்: 2.53 கோடி; பெண் வாக்காளர்கள்: 2.37 கோடி மூன்றாம் பாலினம்: 1,41. * 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், திருநங்கைகளின் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது. நாடு … Read more

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வியாடெக், கார்சியா அபாரம்

டெக்சாஸ், மொத்தம் ரூ.41 கோடி பரிசுத்தொகைக்கான பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்து வருகிறது. தரவரிசையில் ‘டாப்-8’ இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் அவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ரவுண்ட் ராபின் முறையில் மோதுகிறார்கள். இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை ‘டிராசி ஆஸ்டின்’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-3 என்ற நேர் செட்டில் டாரியா … Read more

ஆஸ்திரேலியாவில் உயிரியல் பூங்காவில் இருந்து 5 சிங்கங்கள் தப்பியதால் பரபரப்பு

சிட்னி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா உள்ளது. நேற்று காலை இந்த உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்படுவதற்கு முன்பு ஊழியர்கள் வழக்கம்போல் விலங்குகளை ஆய்வு செய்து வந்தனர். அப்போது கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிங்கங்கள் மாயமாகி இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ந்து போயினர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது 5 சிங்கங்களும் கூண்டில் இருந்து வெளியேறி தப்பியோடியது தெரியவந்தது. இதனால் பெரும் பதற்றம் உருவானது. எனினும் சிங்கம் தப்பிய சமயத்தில் உயிரியல் பூங்காவில் … Read more