தன்னை கடித்த பாம்பை கடித்த சிறுவன்; பாம்பு இறந்தது

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு வடகிழக்கே 350 கிமீ தொலைவில் உள்ள ஜாஷ்பூர் மலைவாழ் பகுதி உள்ளது. இங்கு பாஹடி கோர்வா என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதியில் 70 வகையான பாம்புகள் காணப்படுவதால், இந்த பகுதியை உள்ளூர் மக்கள் நாகலோகம் என்றும் அழைக்கிறார்கள்.சத்தீஸ்கர் மாவட்டத்தில் பாம்பு கடித்தால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை உள்ளது. ஜாஷ்பூரை ஒட்டிய பகுதியில் 70க்கும் மேற்பட்ட வகை பாம்புகள் காணப்படுகின்றன, இதில் நான்கு வகையான நாகப்பாம்புகள் மற்றும் … Read more

இங்கிலாந்து அணியினர் விளையாடிய விதம் அருமையாக இருந்தது – கேன் வில்லியம்சன்

பிரிஸ்பேன், 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பிரிஸ்பேனில் நடந்த ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-நியூசிலாந்து (குரூப்1) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஜோஸ் பட்லரும், அலெக்ஸ் ஹாலெசும் களம் புகுந்தனர். ஹாலெஸ் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். பட்லர் 8 ரன்னில் வழங்கிய கேட்ச் வாய்ப்பை, வில்லியம்சன் அந்தரத்தில் பறந்து பிடித்தபடி பந்தை நழுவ விட்டார். இந்த … Read more

இஸ்ரேல் பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – மீண்டும் பிரதமராவாரா பெஞ்சமின் நேட்டன்யாஹூ..?

ஜெருசலேம், இஸ்ரேலில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ. இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் அவரது லிகுட் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றபோதும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெறவில்லை. வலதுசாரி கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த நிலையில், கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு பெஞ்சமின் நேட்டன்யாஹூ தலைமையிலான அரசு சிறுபான்மை அரசாக மாறியது. இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போதும் பெஞ்சமின் நேட்டன்யாஹூவால் … Read more

தொங்கு பாலம் விபத்து- குஜராத் முழுவதும் இன்று துக்க நாள் அனுசரிப்பு

ஆமதாபாத், குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. ஆனால் திறக்கப்பட்ட 5 நாட்களில் பாலம் திடீரென நேற்று முன்தினம் இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பால விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். … Read more

டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

அடிலெய்டு, ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. தொடரில் இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன.மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேச அணியை சந்திக்கிறது.இதில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில், நெதர்லாந்து ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. 3 புள்ளியுடன் அரை இறுதிக்கு செல்ல லேசான வாய்ப்பில் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61.53 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 59 லட்சத்து 09 ஆயிரத்து 246 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை … Read more

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம்: முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

ராய்ப்பூர், ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், அங்கு முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தனக்குத்தானே நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த விவகாரம், அவருடைய பதவிக்கு வேட்டாக மாறி உள்ளது. அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க கோரிக்கை வைத்தது. அதன்பேரில் விசாரணை நடத்தி, அவரது எம்.எல்.ஏ. பதவியை பறிக்க பரிந்துரை செய்து … Read more

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் புதிய சாதனை…!

பிரிஸ்பேன், 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பிரிஸ்பேனில் நடந்த ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-நியூசிலாந்து (குரூப்1) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஜோஸ் பட்லரும், அலெக்ஸ் ஹாலெசும் களம் புகுந்தனர். ஹாலெஸ் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். பட்லர் 8 ரன்னில் வழங்கிய கேட்ச் வாய்ப்பை, வில்லியம்சன் அந்தரத்தில் பறந்து பிடித்தபடி பந்தை நழுவ விட்டார். இந்த … Read more

இலங்கை: அரசு விமான நிறுவன பங்குகளை விற்க மந்திரி சபை ஒப்புதல்

கொழும்பு, அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத அளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அங்கு அரசு நிறுவனங்கள் பலவும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. அந்த வகையில் அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடும் நஷ்டத்தில் தடுமாறுகிறது. எனவே அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தேர்தெடுக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் விற்று, உரிமையை கைமாற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடங்க அதிபர் ரணில் … Read more

இந்திய இளைஞர்களின் திறமையை உலகமே வியக்கிறது – பிரதமர் மோடி

புதுடெல்லி, கர்நாடகாவில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆற்றிய உரையில், திறமை மற்றும் தொழில்நுட்பம் என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது பெங்களூருதான். பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் உள்ள இடம் அது. இது இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவமான சங்கமமாக இருக்கும் இடம். உலகளவில் நெருக்கடியின் காலம் என்றாலும், உலகெங்கிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் இந்தியாவை ஒரு பிரகாசமான இடமாக விவரிக்கின்றனர். நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த நமது அடிப்படைகளில் … Read more