சீனாவில் லாக்டவுனுக்கு பயந்து தொழிற்சாலை வேலியை தாண்டி குதித்து சொந்த ஊர்களுக்கு தப்பியோடிய ஊழியர்கள்!

பீஜிங், சீனாவின் செங்க்சோவ் பகுதியில் ஆப்பிள் நிறுவத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவத்தின் மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 3 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்ட, நகர நிர்வாகங்கள் தீவிர கொரோன தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதன் படி கடுமையான ஊரடங்கு அவ்வப்போது அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஐ-போன் … Read more

கர்நாடகா: பகத்சிங் வேடத்தில் நடிக்க ஒத்திகை பார்த்தபோது கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் சாவு…!

பெங்களூரு, கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா டவுன் கவுளகோட் பேரங்கானை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பாக்யலட்சுமி. இவருக்கு சஞ்சய் கவுடா என்ற மகன் இருந்தான். இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி (நாளை) தனியார் பள்ளியில் நடக்கும் கன்னட ராஜ்யோத்சவா விழாவில் சஞ்சய், பகத்சிங் வேடம் அணிந்து நடிக்க இருந்தான். இதற்காக அவன் ஒத்திைகயில் ஈடுபட்டு வந்தான். நேற்றுமுன்தினம் சஞ்சய் வீட்டில் … Read more

உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சங்கர் முத்துசாமிக்கு வெள்ளிப்பதக்கம்

சாண்டேன்டர், உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி 14-21, 20-22 என்ற நேர் செட் கணக்கில் குவ் குவான் லின்னிடம் (சீன தைபே) தோற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். சென்னையைச் சேர்ந்த சங்கர் முத்துசாமி உலக ஜூனியர் பேட்மிண்டனில் பதக்கம் வென்ற 10-வது இந்தியர் ஆவார். தினத்தந்தி Related Tags : Shankar Muthusamy … Read more

அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என்பதற்கான 'புளூ டிக்' குறியீட்டை பயன்படுத்த மாதம் ரூ.1600 வசூலிக்க திட்டம்..?

சான்பிரான்சிஸ்கோ, டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கின் வசம் வந்த நிலையில், போலியான கணக்குகளை நீக்க அதிரடியான மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியனது. அதன்படி, டுவிட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற … Read more

140 பேரை பலி கொண்ட மோர்பி தொங்கு பாலம்; பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

ஆமதாபாத், குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சிதிலம் அடைந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, மக்களின் பயன்பாட்டுக்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26-ந் தேதி பாலம் திறந்துவைக்கப்பட்டது. இந்தநிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை 6.30 மணி அளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த … Read more

சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு முதன்முறையாக சாம்பியன் பட்டம்: சாத்விக்-சிராக் ஜோடி சாதனை!

பாரிஸ், பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த தொடரில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி கொரியாவின் சோய் சோல் கியூ மற்றும் கிம் வோன் ஹோ ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியில் சாத்விக்- சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் சோய்-கிம் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்று … Read more

பிரேசில் அதிபர் தேர்தல்: இடதுசாரி தலைவர் லுலு டா சில்வா வெற்றி

பிரேசிலியா, உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ மீண்டும் போட்டியிட்டார். அவர் உள்பட மொத்தம் 9 பேர் அதிபர் பதவிக்கான போட்டியில் களத்தில் இருந்தனர். எனினும் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து விட்டு வந்துள்ள … Read more

ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும் மறுபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது – பிரதமர் மோடி

ஆமதாபாத், குஜராத்தின் கேவாடியாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:- குஜராத் பால விபத்து நிகழ்வால் எனது இதயம் வலியுடன் காணப்படுகிறது. ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும் மறுபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது. தான் இங்கிருந்தாலும் தனது மனம் மோர்பியாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்தால் குழப்பமடைந்த சக்திகள் இன்றும் உள்ளன. அவர்கள் நம்மை உடைக்கவும் பிரிக்கவும் முயற்சி செய்கிறார்கள். ஜாதியின் பெயரால் நம்மை எதிர்த்துப் போராட கதைகள் உருவாக்கப்படுகின்றன. மாநிலங்களின் பெயரால் நம்மை … Read more

துபாயில் மினி மாரத்தான் போட்டி; தமிழக வீராங்கனை 2-வது இடம்

துபாய், துபாயில் தொடங்கியுள்ள பிட்னெஸ் சேலஞ்ச் உடற்பயிற்சி சவால் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சர்வதேச நிதி மையத்தில் இருந்து நேற்று மாய் துபாய் மினி மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. மொத்தம் 5 கி.மீ. தொலைவுக்கு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெண்களுக்கான அனைத்து பிரிவுகளிலும் தமிழகத்தை சேர்ந்த லிடியா ஸ்டாலின் 2-ம் இடத்தை பெற்று சாதனை புரிந்தார். போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தினத்தந்தி Related Tags : Dubai Mini Marathon … Read more

அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி – இந்திய அரங்கம் இன்று திறப்பு!

அபுதாபி, அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம், உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனம் சார்பில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரிசக்தித்துறை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவுக்கு, ஐக்கிய அரபு அமீரக அரசு … Read more