ஜார்கண்ட்: வாய்த்தகராறு முற்றி நாற்காலிகள் வீச்சு…முன்னாள் முதல் மந்திரி, எம்எல்ஏ கோஷ்டி மோதல்

ஜார்கண்ட், பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், சத்பூஜா எனப்படும் சூரிய திருவிழா இந்த பருவகாலத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். ஜார்க்கண்ட் மாநிலம் சித்கோரா மாவட்டத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் சூரியகோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக கிழக்கு ஜாம்ஷெட்பூர் எம்.எல்.ஏ. சர்யூ ராய் ஆதரவாளர்கள் உதவிக் குடில்களை அமைத் திருந்தனர். விழா மேடைக்கு முன்பாக அமைக்கப்பட்ட இந்தக் குடில்களுக்கு அருகில், பாஜகவில் உள்ள முன்னாள் முதல் மந்திரி ரகுபர் தாஸ் ஆதரவாளர்கள் ஆடல்பாடலுக்கு ஏற்பாடு … Read more

சூப்பர் 12 சுற்று: ஜிம்பாப்வேக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

பிரிஸ்பேன், டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேச அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சவுமியா சர்கார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நஜ்முல் ஹொசேன் சிறப்பாக விளையாடி 71 ரன்கள் … Read more

மகளை கடித்த நண்டை உயிருடன் விழுங்கிய தந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

பீஜிங், சீனாவின் ஜெஜியாங் நகரை சேர்ந்தவர் லுா(39). இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு உயிருள்ள நண்டுகளை வாங்கி வந்துள்ளார். அப்போது, நண்டு அவரது மகளை கடித்துள்ளது. இதனால் குழந்தை வலியால் அலறி துடித்துள்ளது. பின்னர் ஆத்திரம் அடைந்த லுா, குழந்தையை கடித்த அந்த நண்டை பிடித்து உயிருடனேயே கடித்து தின்று விழுங்கியுள்ளார். இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு லுாவிற்கு கடும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் … Read more

உலகளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பு – ஐ.நா பயங்கரவாத எதிர்ப்பு கூட்டத்தில் மந்திரி ஜெய்சங்கர் கவலை!

புதுடெல்லி, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. பயங்கரவாதிகளால் இணையம், புதிய கட்டண முறை மற்றும் டிரோன்கள்(ஆளில்லா விமானங்களை) பயன்படுத்தப்படுவதை தடுத்தல் மற்றும் கையாள்வது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக கவனம் செலுத்தப்படும். இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் கிளேவர்லி உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பலர் இந்தியாவில் நடைபெறும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இந்த நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் கூட்டத்தின் … Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து-இலங்கை இன்று மோதல்

சிட்னி, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில் சிட்னியில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்து- … Read more

டுவிட்டரை வாங்கியது ஏன்…? எலான் மஸ்க் விளக்கம்

வாஷிங்டன் உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வந்தார். இதையடுத்து, டுவிட்டரை வாங்கப்போவதாக கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் அறிவித்தார். இது தொடர்பாக நடந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் செய்தார். பின்னர் டுவிட்டரை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் டுவிட்டரில் இருக்கும் … Read more

ராஜஸ்தானில் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் மகள்கள் ஏலத்தில் விற்பனை: பாஜக ஆட்சியில் நடந்த சம்பவம் – அசோக் கெலாட்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடன் தொடர்பான பிரச்னைகள் மற்றும் சொத்து தகராறுகளைத் தீர்ப்பதற்காக, சாதிப் பஞ்சாயத்துகள் நடத்தப்படுகிறது. அவ்வாறு பஞ்சாயத்துகள் நடத்தப்படும் போது, கொடுத்த கடனை திருப்பி தராத குடும்பத்தினரின் பெண் குழந்தைகளை ஏலம் விடுகின்றனர். அதுமட்டுமின்றி, சொத்து தகராறில் தோற்கும் தரப்பின் மகள்கள் ஏலம் விடப்படுகின்றனர். இந்த ஏலத்தை சட்டப்பூர்வமாக்க முத்திரைத் தாள்களும் பயன்படுத்தப்படுகின்றன.இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், மும்பை, டெல்லி … Read more

சர்வதேச ஜூனியர் ஆக்கி: மலேசியா-ஜப்பான் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது

ஜோஹார், 6 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது ஜோஹார் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. மலேசியா-ஜப்பான் அணிகள் இடையிலான திரில்லிங்கான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஜப்பான் தரப்பில் மசடோ கோபாயாஷி (34-வது நிமிடம்), கேப்டன் இகுமி சாகி (47-வது நிமிடம்) தலா ஒரு கோலும், மலேசியா அணியில் முகமது மமத் (39-வது நிமிடம்), ஷமி இர்பான் சுஹாமி (43-வது நிமிடம்) தலா ஒரு … Read more

சிரிக்கும் சூரியன் நாசா வெளியிட்ட வினோத புகைப்படம்

வாஷிங்டன் நாசாவின் சன் டுவிட்டர் கணக்கில் பகிரபட்டு உள்ள ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம் பெற்று உள்ளது. இது சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி, நமது சூரியன் சிரிப்பது போல் காட்சி அளிக்கிறது. இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்றுகிறது. எப்போதும் சிறிது சிமிட்டுகிறது, மூன்றாவது துளை அதன் கீழே மையத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற குழியை உருவாக்குகிறது. புற ஊதா … Read more

பாஜக அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தி, எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது – மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

புதுடெல்லி, மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மத்திய பாஜக அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்தி எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளோம். பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விலை குறைக்கப்படவில்லை. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அவர்களால் அதனை செய்ய முடியவில்லை. பொய்யான வாக்குறுதிகளை தான் அவர்கள்(காங்கிரஸ்) அளிக்கிறார்கள். ரூபாய் நோட்டுகளில் கடவுள்கள் … Read more