சர்வதேச ஜூனியர் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

ஜோஹார், 6 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது ஜோஹார் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 5-5 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணியில் பூவன்னா 7-வது நிமிடத்திலும், அமன்தீப் 50-வது நிமிடத்திலும், அரிஜீத் சிங் 53-வது நிமிடத்திலும், ஷர்தாநந்த் திவாரி 56-வது மற்றும் 58-வது … Read more

ரயில் இணைப்பு உட்கட்டமைப்பை ஏற்படுத்த பாகிஸ்தான்-சீனா இடையே ஒப்பந்தம்

கராச்சி, பாகிஸ்தானில் 82 ஆயிரத்து 415 கோடி ரூபாய்க்கு ரயில் இணைப்பு உட்கட்டமைப்பை ஏற்படுத்த பாகிஸ்தான்-சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. வர்த்தக முக்கியத்துவம் பெற்ற அரபிக்கடலுடன் நேரடி தொடர்பை கொண்டிருக்க சீனா-பாகிஸ்தான் பொருளாதார சாலை திட்டத்தை 5 லட்சத்து 10 ஆயிரத்து 790 கோடி ரூபாயில் சீனா மேற்கொள்கிறது. பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தையும், சீனாவின் மேற்கு பகுதியையும் இணைப்பதற்கு பாகிஸ்தானில் பல்வேறு உள்கட்டுமான பணிகளை சீனா மேற்கொள்கிறது. இப்போது இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக கராச்சி நகரிலிருந்து … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,574 – பேருக்கு கொரோனா

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,574 – பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரத்து 662- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,161- ஆக உள்ளது. அதேபோல், கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 2 ஆயிரத்து 852- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா … Read more

தேசிய பளுதூக்குதல்: மராட்டிய வீராங்கனை அகாங்ஷா புதிய சாதனை

காசியாபாத், கேலோ இந்தியா தேசிய ரேங்கிங் பெண்கள் பளுதூக்குதல் போட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் நடந்து வருகிறது. இதில் 40 கிலோ எடைப்பிரிவில் மராட்டிய வீராங்கனை அகாங்ஷா யாவஹரே ‘ஸ்னாச்’ முறையில் 60 கிலோ ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 71 கிலோ என்று ஒட்டுமொத்தத்தில் 131 கிலோ எடை தூக்கி மூன்று பிரிவிலும் புதிய தேசிய சாதனைகளை படைத்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். தினத்தந்தி Related Tags : National Weightlifting Maharashtra Akanksha தேசிய பளுதூக்குதல் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 61.39 கோடியை தாண்டியது.

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.91 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,591,728 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் … Read more

காஷ்மீரில் திருக்குர்ஆனை அவமதிக்கும் விதமாக தண்ணீரில் தூக்கி வீசிய முஸ்லீம் நபர் கைது!

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள கோஜ்வாடா பகுதியில் ஒரு நபர் திருக்குர்ஆனை தண்ணீரில் வீசினார். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இர்ஷாத் அகமது மிர், இரவோடு இரவாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவரின் மனம் சமநிலையில் இல்லை என்று ஸ்ரீநகர் போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக நவ்வட்டா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லீம் மதத்தின் புனித நூலான திருக்குர்ஆனைப் புண்படுத்துவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. குர்ஆனின் புனிதத்தன்மை அவமதித்ததன் … Read more

சர்வதேச செஸ் போட்டி – சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை, மீரா நினைவு சர்வதேச ரேபிட் ரேட்டிங் செஸ் போட்டி சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரியில் இன்றும், நாளையும் நடக்கிறது. மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் சுமார் 400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. தினத்தந்தி Related Tags : International Chess Tournament Chennai சர்வதேச செஸ் போட்டி சென்னை

சுத்தியலால் தாக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரின் கணவர் பால் பெலோசிக்கு தலையில் அறுவை சிகிச்சை!

வாஷிங்டன், அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு, தைவானுக்கு பயணம் செய்து, சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானவர். நான்சி பெலோசியின் வீடு, சான் பிரான்சிஸ்கோவில் உள்ளது. நேற்று காலையில், அந்த வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசி சுத்தியலால் கை, கால்கள், தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். சம்பவத்தின்போது, நான்சி பெலோசி, வீட்டில் இல்லை. காயமடைந்த பால் பெலோசி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். … Read more

சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு – பிரதமர் மோடி

சூரஜ்கண்ட் அரியானாவின் சூரஜ்கண்டில் நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள் 2 வது நாள் மாநாடு நடைபெற்றது. இதில் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என கூறினார். மேலும் அவர் பேசும் போது அவர் கூறியதாவது;- சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு, ஆனால் இவை தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தவும் பல்வேறு மாநில … Read more

பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கும் சட்டத்தில் புதிய ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

பாரிஸ், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2035ஆம் ஆண்டு முதல், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையை திறம்பட தடை செய்யும் சட்டத்தின் படி புதிய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்தவும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கார் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் வாகனங்களில் இருந்து வெளியாகும் ‘கார்பன் டை ஆக்சைட்’ வாயு வெளியேற்றத்தை 2035க்குள் 100 சதவீதம் … Read more