வாழ்வா-சாவா நெருக்கடியில் வெஸ்ட் இண்டீஸ்: ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்

ஹோபர்ட், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் சுற்றில் இன்று பி பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் நிகோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் 42 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீசுக்கு இது வாழ்வா-சாவா ஆட்டமாகும். இதிலும் தோற்றால் சூப்பர்12 சுற்று வாய்ப்பை ஏறக்குறைய … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.98 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 7 லட்சத்து 7 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

இரண்டு கூட்டாளிகளின் உதவியுடன் மாமியார் வீட்டில் கொள்ளையடித்த மருமகள்

பக்வாரா, பஞ்சாபில் சமீபத்தில் திருமணமான இளம்பெண் ஒருவர் தனது மாமியார் வீட்டில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை இரண்டு இளைஞர்களின் உதவியுடன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்த வரீந்தர் மிஸ்ரா, என்பவரின் வீட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வரீந்தர் மிஸ்ராவின் இளைய மகனுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது. இருவரும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். … Read more

டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரக வீரர் 109 மீட்டர் தூரம் சிக்ஸ் அடித்து அசத்தல்..!

சிட்னி, 8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 … Read more

ஆப்கானிஸ்தான்: கை, கால்களை கட்டிப்போட்டு 27 பேரை சுட்டுக்கொன்ற தலீபான்கள்

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே அமைந்துள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலீபான்களுக்கு எதிரான கிளர்ச்சி படை செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சி படைக்கும் தலீபான்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடந்த சண்டையில் கிளர்ச்சி படையினர் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 100-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் தலீபான்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட நபர்கள் … Read more

பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம் – ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்…!

காந்தி நகர், குஜராத்தின் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பல அரசியல் தற்போது முதலே பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கையில் இறங்கிவிட்டன. இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். அவர் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர், நிறைவு பெற்ற வளர்ச்சி திட்டங்களை தொடங்கி … Read more

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வெற்றி

கரூர் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கரூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 பேர் கலந்து கொண்டு விளையாடினர். இப்போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் பிரசாந் 46 முதல் 48 கிலோ எடைப்பிரிவில் முதலிடத்தையும், மகாலட்சுமி என்ற மாணவி 52 கிலோ எடை பிரிவில் 3-வது இடமும் பிடித்து சாதனை படைத்தனர். இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவ-மாணவிக்கு கல்லூரி முதல்வர் … Read more

இங்கிலாந்தின் முன்னாள் விமானப்படை வீரர்களை பணியமர்த்தும் சீனா

லண்டன், இங்கிலாந்தின் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற விமானிகளை சீனா பெரும் தொகையை கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் விமானப்படை வீரர்கள் தங்களது நிபுணத்துவத்தை சீன ராணுவத்துக்கு வழங்க அவர்களை பயிற்சியாளர்களாக சீனா பணியமர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அப்படி இதுவரை சுமார் 30 முன்னாள் இங்கிலாந்து ராணுவ விமானிகள் சீன வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்தில் பணிபுரிவதற்கு … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,542- பேருக்கு கொரோனா

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,542 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,32,430 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 26,449- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,919- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் … Read more

ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்

மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆரோன் பின்ச், ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்த்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அடுத்த கேப்டன் யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடடம் இருந்தது இந்த நிலையில் பேட் கம்மின்ஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுளளார் . ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் தற்போது கம்மின்ஸ் செயல்பட்டு வருகிறார்வரும் நவம்பர் … Read more