சூப்பர் 12 சுற்று: வங்காளதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சு தேர்வு

ஹோபர்ட், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை (குரூப்2) எதிர்கொள்கிறது. ஹோபர்ட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்செய்துள்ளது. அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related Tags : சூப்பர் 12 சுற்று … Read more

140 எம்.பி.க்கள் ஆதரவு; இங்கிலாந்து பிரதமர் ஆவாரா ரிஷி சுனக்…?

லண்டன், இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் 5-ந்தேதி லிஸ் டிரஸ் பொறுப்பேற்று கொண்டார். அது முதல் டிரஸ்சுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டன. கடந்த 10 நாட்களில் இங்கிலாந்து அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. டிரஸ்சின் அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருந்த குவாசி வார்தெங் கடந்த 14-ந்தேதி நீக்கப்பட்டு, ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள், உள்துறை மந்திரியான இந்திய வம்சாவளி பெண் சுவெல்லா பிரேவர்மென் கடந்த 19-ந்தேதி இரவில் திடீரென பதவி … Read more

பாதுகாப்புப்படையினருடன் தீபாவளி கொண்டாட கார்கில் சென்றார் பிரதமர் மோடி…!

லடாக், நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, பிரதமர் மோடி ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 2014-ம் ஆண்டு சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016-ம் ஆண்டு இமாச்சலபிரதேச எல்லையிலும் பணியாற்றிய ராணுவ வீரர்களுடன் … Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசம்- நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்

ஹோபர்ட், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஹோபர்ட்டில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை (குரூப்2) எதிர்கொள்கிறது. முதல் சுற்றில் பெற்ற 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள நெதர்லாந்து அணி, சூப்பர்12 சுற்றிலும் ஒரு சில அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் முனைப்புடன் தயாராகியுள்ளது. இவ்விரு அணிகளும் சர்வதேச … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61.18 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 301 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

ஸ்ரீஹரிகோட்டா, வெற்றிகரமாக பறந்தது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்துள்ள பிரமாண்டமான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 (எல்.வி.எம்.3-எம்2), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று அதிகாலையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒன்வெப் இந்தியா-1 நிறுவனத்தின் 36 தகவல் தொடர்பு செயற்கைகோள்களை இந்த ராக்கெட் விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது. அந்தவகையில் இந்த வகை ராக்கெட்டின் முதல் வணிக பயணம் இதுவாகும். இந்த நிகழ்ச்சிக்குப்பின், … Read more

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி-பி.எம். கிங்ஸ் அணி வெற்றி

நீலகிரி கோத்தகிரி கோத்தகிரியில் நடந்த மாவட்ட அளவிலான ‘ சி ‘ டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் பி.எம்.கிங்ஸ் கிரிக்கெட் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. டிவிஷன் கிரிக்கெட் போட்டி நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சி டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் பி.எம் கிங்ஸ் கிரிக்கெட் … Read more

சோமாலியா: ஓட்டலில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் – 9 பேர் பலி

கிஸ்மாயு, கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. மேலும், பொதுமக்கள், ராணுவத்தை குறிவைத்து அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அந்நாட்டின் கிஸ்மாயு நகரில் உள்ள ஓட்டலில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின், ஒட்டல் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,994- பேருக்கு கொரோனா

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,994- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,994- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை … Read more

சூப்பர் 12 சுற்று: இலங்கை அணிக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது அயர்லாந்து

ஹோபர்ட், ஹோபர்ட்டில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ) தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்தை சந்திக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் தேர்வு செய்தது . முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் டவிக்கெட் இழப்பிற்கு 8 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து.அந்த அணியில் அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய ஸ்டிர்லிங் 25 பந்துகளில் 34 ரன்களும் … Read more