உக்ரைன் போர் விவகாரம்: அமெரிக்க, ரஷிய மந்திரிகள் திடீர் பேச்சு

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி இன்றுடன் 8 மாதம் முடிகிறது. இந்த நிலையில் அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினும், ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்குவும் நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்ரைன் போர் விவகாரம் குறித்து பேசினார்கள். இந்த தொலைபேசி உரையாடலின்போது, உக்ரைன் போர் நிலவரம் குறித்துத்தான் விவாதிக்கப்பட்டது என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். மே 13-ந் தேதிக்கு பின்னர் … Read more

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து: பலி 15 ஆக உயர்வு; யோகி ஆதித்யநாத் இழப்பீடு அறிவிப்பு

ரேவா, மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதியருகே சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றும் லாரியும் மோதி கொண்டன. இந்த விபத்தில் பயணிகள் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் 20 பேர் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இருந்து கோரக்பூர் நோக்கி அந்த பஸ் சென்று கொண்டிருந்து உள்ளது. பஸ்சில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேச … Read more

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய இளம்வீரர் லக்சயா சென் காலிறுதியில் தோல்வி..!

டென்மார்க், டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ் பிரனாயுடன் மோதினார். இந்த போட்டியில் லக்சயா சென், 21-9, 21-18 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் லக்சயா … Read more

கனடாவில் கைத்துப்பாக்கி வாங்கவும், விற்கவும் தடை..!

ஒட்டாவா, கனடாவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனை, வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடுமுழுவதும் தடைவிதிக்கப்படுவதாகவும், இது உடனடியாக அமல் படுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா நாடாளுமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதித்து வருகின்றனர், புதிய கைத்துப்பாக்கி முடக்கம் ஒரு “உடனடி நடவடிக்கை” என்று ட்ரூடோ நிர்வாகம் கூறிவந்தது. இந்த மசோதா தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ … Read more

இன்று நள்ளிரவு விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜி.எஸ்.எல்.வி. மாா்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய … Read more

பயிற்சியின் போது பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத்தின் தலையை பதம் பார்த்த பந்து – ஆஸ்பத்திரியில் சிகிச்சை

மெல்போர்ன், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெல்போர்னில் மோதுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். கடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் டாப் வரிசை பேட்ஸ்மேன்களை பாகிஸ்தான் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி திணறடித்தார். அவரது பந்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொள்வதற்கு ஏற்ப கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியில் கவனம் செலுத்தினார். … Read more

கெர்சன் நகரில் 4 பேர் பலி; அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டு

கீவ், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரானது 8 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இந்த படையெடுப்பின் ஒரு பகுதியாக உக்ரைனின் 4 முக்கிய பகுதிகளை ரஷியா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதன்படி, டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜியா ஆகிய 4 பகுதிகளை கைப்பற்றிய ரஷியா அவற்றை தன்னுடன் இணைத்து கொண்டது. இதனை, ரஷிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது. … Read more

மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்?- சுப்ரீம் கோர்ட்டு வேதனை

புதுடெல்லி நாட்டில் முஸ்லிம்களை குறிவைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்கவும், அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவைச் சேர்ந்த ஷாகீன் அப்துல்லா தாக்கல் செய்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், வெறுப்பு பேச்சு வாடிக்கையாகிவிட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி. பர்வேஷ் வர்மா, முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என … Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

சிட்னி, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதும் முதல் ஆட்டத்திற்கு வருணபகவான் வழிவிடுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சூப்பர்12 சுற்று ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்றுடன் முதல் சுற்று நிறைவடைந்தது. முதல் சுற்று முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறி மற்ற 8 அணிகளுடன் இணைந்தன. சூப்பர்12 சுற்றில் 12 அணிகள் … Read more

பாகிஸ்தான்; உணவு பாதுகாப்பின்மை நெருக்கடியில் 16% சதவீத மக்கள்: உணவு மற்றும் வேளாண் அமைப்பு தகவல்

லாகூர், பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூனில் இருந்து பெய்து வரும் தொடர் கனமழை எதிரொலியாக பல்வேறு நகரங்களிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், விளைநிலங்கள், வீடுகள், கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களுக்கு இடம் பெயர்ந்தனர். அந்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்புக்கு பலியானார்கள். கால்நடைகளும் பரவலாக உயிரிழந்தன. இதுதவிர, தோல் நோய், மலேரியா உள்ளிட்ட பல்வேறு வியாதி தாக்குதலுக்கும் ஆளானார்கள். இதற்கு பருவகால மாற்றம் ஒரு காரணம் என கூறப்பட்டது. இந்த சூழலில், … Read more