மிக இளம் வயதில் பிரதமராக ரிஷி சுனக் – வாழ்த்து தெரிவித்த லிஸ் டிரஸ்

லண்டன், இங்கிலாந்து பிரதமராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு, கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கன்சர்வேட்டி கட்சி தலைவராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்படுவதாக, இங்கிலாந்தில் பிரதமர் தேர்தல் நடத்தும் “1922 குழு” என்ற அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இங்கிலாந்தை பொறுத்தவரை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பவரே, நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில், இங்கிலாந்தின் மிக இளம் வயது பிரதமராக 42 வயதேயான ரிஷி சுனக் தேர்வாகியுள்ளார். இந்நிலையில், லண்டனில் … Read more

16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சி சம்பவம்

அகர்தலா, திரிபுரா மாநிலம் உனாகோட்டி மாவட்டம் குமார்ஹட் பகுதியில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போலீசில் அளித்த புகாரில், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் பெண் தன் மகளை கடந்த 19-ம் தேதி உனாகோட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தன் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். … Read more

சூப்பர் 12 சுற்று: நெதர்லாந்துக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

ஹோபர்ட், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை (குரூப்2) எதிர்கொள்கிறது. ஹோபர்ட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்செய்தது. அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய நஜ்முல் ஹுசேன் 25 ரன்களும், … Read more

இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகல்…!

லண்டன், இங்கிலாந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம், மினி – பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கி உள்ளன. பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. … Read more

ஆசிய மாசு நகரம் டாப் 10 பட்டியலில் இந்தியாவின் 8 நகரங்கள்…

புதுடெல்லி, உலக அளவில் தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் காற்று அதிக அளவில் மாசடைந்து வருகிறது. இதனால், மனிதர்களுக்கு நோய்கள் பல தாக்குவதுடன், அவர்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. உலக அளவில் காற்று தரம் பற்றி மதிப்பீடு செய்து காற்று மாசு பற்றி குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உதவிடவும் வகையில் 2007-ம் ஆண்டு உலக காற்று தர குறியீடு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த … Read more

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்து யுபி யோத்தா அணி வெற்றி

பெங்களூரு, 9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 31-31 என்ற புள்ளிகள் கணக்கில் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் யுபி யோத்தா- தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் யுபி யோத்தா அணி 41-24 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவுசெய்தது. … Read more

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி சேனலின் நிருபர் விபத்தில் சிக்கி பலி

கராச்சி, பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி சேனல் ஏ.ஆர்.ஒய். நியூஸ். இதில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நிருபராகவும் பணியாற்றியவர் அர்ஷத் ஷெரீப். எனினும், அவர் அதில் இருந்து விலகி விட்டார். அதன்பின்பு, துபாய்க்கு அவர் சென்றுள்ளார். ஒரு சில நாட்களுக்கு முன்பு, இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு அவர் சென்றார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்து உள்ளார். இதுபற்றி கென்ய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது … Read more

பட்டாசு தடை இருந்தும்… டெல்லியில் காற்று தர குறியீடு மோசம்

புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு இந்த ஆண்டு டெல்லி அரசு தடை விதித்து உள்ளது. இந்த தடையை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறை தண்டனையும் கூட விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு நடவடிக்கைகக்கு பின்னரும், டெல்லியில் உள்ள மக்கள் இன்று காலை எழுந்ததும், புகையும், பனியும் படர்ந்த காற்று மாசுபாட்டுடன் கூடிய நகரையே பார்க்கும் நிலை ஏற்பட்டு … Read more

சூப்பர் 12 சுற்று: வங்காளதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சு தேர்வு

ஹோபர்ட், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை (குரூப்2) எதிர்கொள்கிறது. ஹோபர்ட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்செய்துள்ளது. அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related Tags : சூப்பர் 12 சுற்று … Read more

140 எம்.பி.க்கள் ஆதரவு; இங்கிலாந்து பிரதமர் ஆவாரா ரிஷி சுனக்…?

லண்டன், இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் 5-ந்தேதி லிஸ் டிரஸ் பொறுப்பேற்று கொண்டார். அது முதல் டிரஸ்சுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டன. கடந்த 10 நாட்களில் இங்கிலாந்து அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. டிரஸ்சின் அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருந்த குவாசி வார்தெங் கடந்த 14-ந்தேதி நீக்கப்பட்டு, ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள், உள்துறை மந்திரியான இந்திய வம்சாவளி பெண் சுவெல்லா பிரேவர்மென் கடந்த 19-ந்தேதி இரவில் திடீரென பதவி … Read more