ஆசிய மாசு நகரம் டாப் 10 பட்டியலில் இந்தியாவின் 8 நகரங்கள்…

புதுடெல்லி, உலக அளவில் தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் காற்று அதிக அளவில் மாசடைந்து வருகிறது. இதனால், மனிதர்களுக்கு நோய்கள் பல தாக்குவதுடன், அவர்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. உலக அளவில் காற்று தரம் பற்றி மதிப்பீடு செய்து காற்று மாசு பற்றி குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உதவிடவும் வகையில் 2007-ம் ஆண்டு உலக காற்று தர குறியீடு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த … Read more

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்து யுபி யோத்தா அணி வெற்றி

பெங்களூரு, 9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 31-31 என்ற புள்ளிகள் கணக்கில் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் யுபி யோத்தா- தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் யுபி யோத்தா அணி 41-24 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவுசெய்தது. … Read more

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி சேனலின் நிருபர் விபத்தில் சிக்கி பலி

கராச்சி, பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி சேனல் ஏ.ஆர்.ஒய். நியூஸ். இதில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நிருபராகவும் பணியாற்றியவர் அர்ஷத் ஷெரீப். எனினும், அவர் அதில் இருந்து விலகி விட்டார். அதன்பின்பு, துபாய்க்கு அவர் சென்றுள்ளார். ஒரு சில நாட்களுக்கு முன்பு, இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு அவர் சென்றார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்து உள்ளார். இதுபற்றி கென்ய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது … Read more

பட்டாசு தடை இருந்தும்… டெல்லியில் காற்று தர குறியீடு மோசம்

புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு இந்த ஆண்டு டெல்லி அரசு தடை விதித்து உள்ளது. இந்த தடையை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறை தண்டனையும் கூட விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு நடவடிக்கைகக்கு பின்னரும், டெல்லியில் உள்ள மக்கள் இன்று காலை எழுந்ததும், புகையும், பனியும் படர்ந்த காற்று மாசுபாட்டுடன் கூடிய நகரையே பார்க்கும் நிலை ஏற்பட்டு … Read more

சூப்பர் 12 சுற்று: வங்காளதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சு தேர்வு

ஹோபர்ட், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை (குரூப்2) எதிர்கொள்கிறது. ஹோபர்ட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்செய்துள்ளது. அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related Tags : சூப்பர் 12 சுற்று … Read more

140 எம்.பி.க்கள் ஆதரவு; இங்கிலாந்து பிரதமர் ஆவாரா ரிஷி சுனக்…?

லண்டன், இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் 5-ந்தேதி லிஸ் டிரஸ் பொறுப்பேற்று கொண்டார். அது முதல் டிரஸ்சுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டன. கடந்த 10 நாட்களில் இங்கிலாந்து அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. டிரஸ்சின் அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருந்த குவாசி வார்தெங் கடந்த 14-ந்தேதி நீக்கப்பட்டு, ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள், உள்துறை மந்திரியான இந்திய வம்சாவளி பெண் சுவெல்லா பிரேவர்மென் கடந்த 19-ந்தேதி இரவில் திடீரென பதவி … Read more

பாதுகாப்புப்படையினருடன் தீபாவளி கொண்டாட கார்கில் சென்றார் பிரதமர் மோடி…!

லடாக், நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, பிரதமர் மோடி ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 2014-ம் ஆண்டு சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016-ம் ஆண்டு இமாச்சலபிரதேச எல்லையிலும் பணியாற்றிய ராணுவ வீரர்களுடன் … Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசம்- நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்

ஹோபர்ட், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஹோபர்ட்டில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை (குரூப்2) எதிர்கொள்கிறது. முதல் சுற்றில் பெற்ற 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள நெதர்லாந்து அணி, சூப்பர்12 சுற்றிலும் ஒரு சில அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் முனைப்புடன் தயாராகியுள்ளது. இவ்விரு அணிகளும் சர்வதேச … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61.18 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 301 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

ஸ்ரீஹரிகோட்டா, வெற்றிகரமாக பறந்தது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்துள்ள பிரமாண்டமான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 (எல்.வி.எம்.3-எம்2), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று அதிகாலையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒன்வெப் இந்தியா-1 நிறுவனத்தின் 36 தகவல் தொடர்பு செயற்கைகோள்களை இந்த ராக்கெட் விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது. அந்தவகையில் இந்த வகை ராக்கெட்டின் முதல் வணிக பயணம் இதுவாகும். இந்த நிகழ்ச்சிக்குப்பின், … Read more