சாண்ட்வீச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு

புதுடெல்லி, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்வீச் தீவில், அரசர் எட்வார்டு முனை பகுதியில் இருந்து 800 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.43 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் டுவிட்டரில் இன்று தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 139 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த தீவில் கோடை காலத்தில் பல … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 862 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 862 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,44,938 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 22,549- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் . கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,93,409- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது … Read more

இந்தியா – பாகிஸ்தான் 20 ஓவர் உலகக் கோப்பை; பாகிஸ்தான் ரசிகரிடம் மாஸ் காட்டிய சுந்தர் பிச்சை

சென்னை ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி நேற்று ஆடிய ஆட்டத்தில் கோலி தன்னுடைய திறமையான ஆட்டத்தை பதிவு செய்தார். நேற்று பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இதுகுறித்து டுவீட் செய்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, “தீபாவளி வாழ்த்துகள்! தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் … Read more

வங்காளதேசத்தில் 'சிட்ரங் புயல்' கரையை கடந்தது

டாக்கா, வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்துள்ளது. சிட்ரங் புயல் வங்காளதேசத்தில் கரையை கடந்துள்ளது.எதிர்பார்த்ததை விட வேகமாக, நேற்று நள்ளிரவே ‘சிட்ரங்’ புயல் கரையை கடந்தது.புயல் கரையை கடந்ததில் வங்காளதேசத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களும் 2,736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், காக்ஸ் பஜார் துணை … Read more

ரிஷி சுனக்கிற்கு மாமனாரான இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வாழ்த்து

புதுடெல்லி, இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த அவர், 42 வயதில் இங்கிலாந்தின் இளம்பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில், நிதி மந்திரியாக பதவி வகித்த அனுபவம் கொண்டவர். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக இந்த பதவியை அலங்கரிக்கிறார். ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து … Read more

டி20 உலகக் கோப்பையில் தோல்வியடைந்த பாகிஸ்தானை கிண்டலடித்து டுவிட்டரில் பதிவிட்ட சொமேட்டோ..!

இஸ்லாமாபாத், டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் நேற்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா கடைசி பந்தில் பரபரப்பான முறையில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இந்த போட்டியில், 6.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. அதன்பின்னர் பாண்டியா உடன் ஜோடி … Read more

மிக இளம் வயதில் பிரதமராக ரிஷி சுனக் – வாழ்த்து தெரிவித்த லிஸ் டிரஸ்

லண்டன், இங்கிலாந்து பிரதமராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு, கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கன்சர்வேட்டி கட்சி தலைவராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்படுவதாக, இங்கிலாந்தில் பிரதமர் தேர்தல் நடத்தும் “1922 குழு” என்ற அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இங்கிலாந்தை பொறுத்தவரை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பவரே, நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில், இங்கிலாந்தின் மிக இளம் வயது பிரதமராக 42 வயதேயான ரிஷி சுனக் தேர்வாகியுள்ளார். இந்நிலையில், லண்டனில் … Read more

16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சி சம்பவம்

அகர்தலா, திரிபுரா மாநிலம் உனாகோட்டி மாவட்டம் குமார்ஹட் பகுதியில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போலீசில் அளித்த புகாரில், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் பெண் தன் மகளை கடந்த 19-ம் தேதி உனாகோட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தன் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். … Read more

சூப்பர் 12 சுற்று: நெதர்லாந்துக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

ஹோபர்ட், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை (குரூப்2) எதிர்கொள்கிறது. ஹோபர்ட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்செய்தது. அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய நஜ்முல் ஹுசேன் 25 ரன்களும், … Read more

இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகல்…!

லண்டன், இங்கிலாந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம், மினி – பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கி உள்ளன. பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. … Read more