ரிஷி சுனக்கிற்கு நல்லெண்ண அடிப்படையில் தீபாவளி இனிப்புகளை வழங்கிய அரசர் மூன்றாம் சார்லஸ்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் பலத்த ஆதரவுடன் ரிஷி சுனக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். 200 ஆண்டுகளில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, இளம் பிரதமர் என்ற பெருமையுடன் இந்த பதவியை அலங்கரிக்கிறார். அரசர் மூன்றாம் சார்லஸ் முறைப்படி புதிய கன்சர்வேடிவ் தலைவராக ரிஷி சுனக்கை நியமித்த பின்பு, அந்நிகழ்ச்சியில், சுனக்கிற்கு நல்லெண்ண அடிப்படையில் தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்துக்களால் 5 நாட்கள் கொண்டாடப்படும் ஒளியின் திருவிழா எனப்படும் … Read more

சூரிய கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது

திருப்பதி, இன்று மாலை 5.11 மணி முதல் மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி காலை 8.11 மணி முதல் இரவு 7.30 வரை 12 மணி நேரம் ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி இன்று காலை 8.11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. வி.ஐ.பி பிரேக் தரிசனம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை மற்றும் ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன. … Read more

இந்தியா-பாகிஸ்தான் போட்டி கற்பனை செய்ய முடியாதது: ஆஸ்திரேலிய வீரர் பேட்டி

மெல்போர்ன், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இது குறித்து மெல்போர்னில் பேசிய ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளதாவது: மெல்போர்னில் இதைவிட சிறப்பான கிரிக்கெட் போட்டி இதுவரை நடைபெற்றதில்லை .இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எப்போதுமே பார்க்க முடியாத நம்ப … Read more

சித்ரங் சூறாவளி: பலி 9 ஆக உயர்வு; 4 இந்திய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

டாக்கா, வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த சித்ரங் சூறாவளி புயலின் முன்பகுதி நேற்று மாலை, சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதியில் கரையை அடைந்தது. இதனை தொடர்ந்து, புயல் கரையை தொட்டதும் வலுவிழந்தது. இதன்பின்னர், சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதியில் நேற்றிரவு 9.30 மணி முதல் 11.30 மணிக்குள் சூறாவளி புயல் முழுமையாக கரையை கடந்து உள்ளது. சூறாவளி புயலால் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதன் வேகம் மணிக்கு 100 கி.மீ. … Read more

5 வருட காதல் 18 வெட்டுகள்…! ஏமாற்றியாதால் காதலி படுகொலை…!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பு அருகே உள்ள பானூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் விஷ்ணு பிரியா (23). இவர் தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த விஷ்ணு பிரியா படுக்கையறையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பானூர் போலீசார் விஷ்ணு பிரியாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் வீட்டிலிருந்து முகமூடி அணிந்த … Read more

டி 20 உலகக் கோப்பை; தென் ஆப்பிரிக்காவுக்கு ஏமாற்றம்; மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்று ஹோபர்ட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி தொடங்க தாமதம் ஆனது. பின்னர் போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி, 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்தது. இதனால் ஜிம்பாப்வே அணிக்கு 80 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மழை மீண்டும் குறுக்கிட்டதால் தென் ஆப்பிரிக்க … Read more

ரிஷி சுனக்கை, கிரிக்கெட் வீரர் நெஹ்ராவுடன் ஒப்பிட்டு மீம்ஸில் கலாய்த்த டுவிட்டர்வாசிகள்…

லண்டன், இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் (வயது 42) தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக இந்த பதவியை அலங்கரிக்கிறார். ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். சுனக்கிற்கு டுவிட்டர் வழியே வாழ்த்து கூறிய சிலர், அவருக்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவின் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளனர். நெஹ்ரா, ஏறக்குறைய தோற்றத்தில் ரிஷி சுனக்கை … Read more

தீபாவளி: டெல்லியில் தீ விபத்து தொடர்புடைய 201 சம்பவங்கள் பதிவு

புதுடெல்லி, இந்தியாவில் தீபாவளி பண்டிகை 2 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது. மக்கள் கோலங்களை இட்டும், புதிய ஆடைகளை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும், பலகாரங்களை உண்டும் பண்டிகையை கொண்டாடினார்கள். இதேபோன்று, உலகமெங்கிலும் வசித்து வரும் இந்தியர்களும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு இந்த ஆண்டு டெல்லி அரசு தடை விதித்து உள்ளது. ஒட்டுமொத்த … Read more

உலககோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா-இலங்கை இன்று மோதல்

பெர்த், உலககோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை கிரிக்கெட் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் … Read more

சாண்ட்வீச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு

புதுடெல்லி, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்வீச் தீவில், அரசர் எட்வார்டு முனை பகுதியில் இருந்து 800 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.43 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் டுவிட்டரில் இன்று தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 139 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த தீவில் கோடை காலத்தில் பல … Read more