இன்று நள்ளிரவு விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜி.எஸ்.எல்.வி. மாா்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய … Read more

பயிற்சியின் போது பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத்தின் தலையை பதம் பார்த்த பந்து – ஆஸ்பத்திரியில் சிகிச்சை

மெல்போர்ன், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெல்போர்னில் மோதுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். கடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் டாப் வரிசை பேட்ஸ்மேன்களை பாகிஸ்தான் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி திணறடித்தார். அவரது பந்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொள்வதற்கு ஏற்ப கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியில் கவனம் செலுத்தினார். … Read more

கெர்சன் நகரில் 4 பேர் பலி; அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டு

கீவ், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரானது 8 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இந்த படையெடுப்பின் ஒரு பகுதியாக உக்ரைனின் 4 முக்கிய பகுதிகளை ரஷியா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதன்படி, டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜியா ஆகிய 4 பகுதிகளை கைப்பற்றிய ரஷியா அவற்றை தன்னுடன் இணைத்து கொண்டது. இதனை, ரஷிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது. … Read more

மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்?- சுப்ரீம் கோர்ட்டு வேதனை

புதுடெல்லி நாட்டில் முஸ்லிம்களை குறிவைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்கவும், அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவைச் சேர்ந்த ஷாகீன் அப்துல்லா தாக்கல் செய்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், வெறுப்பு பேச்சு வாடிக்கையாகிவிட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி. பர்வேஷ் வர்மா, முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என … Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

சிட்னி, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதும் முதல் ஆட்டத்திற்கு வருணபகவான் வழிவிடுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சூப்பர்12 சுற்று ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்றுடன் முதல் சுற்று நிறைவடைந்தது. முதல் சுற்று முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறி மற்ற 8 அணிகளுடன் இணைந்தன. சூப்பர்12 சுற்றில் 12 அணிகள் … Read more

பாகிஸ்தான்; உணவு பாதுகாப்பின்மை நெருக்கடியில் 16% சதவீத மக்கள்: உணவு மற்றும் வேளாண் அமைப்பு தகவல்

லாகூர், பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூனில் இருந்து பெய்து வரும் தொடர் கனமழை எதிரொலியாக பல்வேறு நகரங்களிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், விளைநிலங்கள், வீடுகள், கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களுக்கு இடம் பெயர்ந்தனர். அந்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்புக்கு பலியானார்கள். கால்நடைகளும் பரவலாக உயிரிழந்தன. இதுதவிர, தோல் நோய், மலேரியா உள்ளிட்ட பல்வேறு வியாதி தாக்குதலுக்கும் ஆளானார்கள். இதற்கு பருவகால மாற்றம் ஒரு காரணம் என கூறப்பட்டது. இந்த சூழலில், … Read more

இந்திய கரன்சிகளில் காந்திக்கு பதில் நேதாஜி படம் இடம் பெற வேண்டும்: இந்து மகாசபை வலியுறுத்தல்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் அகில பாரத இந்து மகாசபையின் மாநில செயல் தலைவர் சந்திரசூர் கோஸ்வாமி பத்திரிகையாளர்கள் சந்திப்பினை நடத்தினார். இதன்பின்னர் அவர் பேசும்போது, இந்திய விடுதலை போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பங்கு எந்த வகையிலும் மகாத்மா காந்திக்கு குறைந்ததில்லை. அதனால், இந்தியாவின் தலைசிறந்த சுதந்திர பேராட்ட வீரர் நேதாஜிக்கு கவுரவம் அளிக்கும் சிறந்த வழி, அவரது புகைப்படம் கரன்சி நோட்டுகளில் இடம்பெற செய்ய வேண்டும். காந்திஜியின் புகைப்படத்திற்கு பதிலாக நேதாஜியின் புகைப்படம் … Read more

பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து – பிரேசில் அணி தோல்வி

மும்பை, 7-வது பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் (17 வயதுக்குட்பட்டோர்) நவிமும்பையில் நேற்றிரவு நடந்த கால்இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது. அமெரிக்கா-நைஜீரியா இடையிலான இன்னொரு ஆட்டம் வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் நைஜீரியா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதியை எட்டியது. தினத்தந்தி Related Tags : பெண்கள் ஜூனியர் உலக … Read more

ஓமன் சலாலா துறைமுகத்துக்கு எலிசபெத் கப்பல் மூலம் 1,596 சுற்றுலா பயணிகள் வருகை பாரம்பரிய முறையில் வரவேற்பு

மஸ்கட், ஓமன் அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓமன் நாட்டில் தற்போது வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஓமன் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும் சுற்றுலா கப்பல் மூலமாகவும் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். சலாலா துறைமுகத்துக்கு 1,596 சுற்றுலா பயணிகள் எலிசபெத் கப்பல் மூலம் நேற்று வருகை புரிந்தனர். அந்த பயணிகளுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து அவர்கள் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டு … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,112 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 2,112 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,40,748 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 24,043- ஆக உள்ளது. . கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,87,748- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் … Read more