இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,141 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 2,141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,36,517 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 25,510- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் . கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,82,064- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது … Read more

உலக கோப்பை போட்டியில் இருந்து ரீஸ் டாப்லே, சமீரா விலகல்

பிரிஸ்பேன், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் நேரடியாக களம் காணும் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லே பயிற்சியின் போது இடது கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் அவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் பட்டியலில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் சேர்க்கப்படுகிறார். இதேபோல் இலங்கை அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா … Read more

இலங்கையை மோசமான நிலையில் இருந்து இந்தியா பாதுகாத்தது – எதிர்க்கட்சி தலைவர் பாராட்டு

கொழும்பு, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அன்றாட உணவு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையை கரம் கொடுத்து தாங்கி வருகின்றன. குறிப்பாக இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வழங்கி இருக்கிறது. இந்தியாவின் இந்த உதவியால் இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்தி … Read more

கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன் வரலாறு காணாத கனமழை பெய்ததால், பெங்களூரு நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், தற்போது பெங்களூருவில் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், மீண்டும் பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக பெங்களூருவில் தினமும் மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் … Read more

20 ஓவர் உலக கோப்பை: இலங்கை-நெதர்லாந்து இன்று மோதல்

கீலாங், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் சுற்றில் ஏ பிரிவில் இன்று கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, நெதர்லாந்தை கீலாங் ஸ்டேடியத்தில் (இந்திய நேரப்படி காலை 9.30 மணி) சந்திக்கிறது. ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ள இலங்கை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெற முடியும். 2 வெற்றியுடன் உள்ள நெதர்லாந்து ரன்ரேட்டில் பின்தங்கி இருப்பதால் அந்த … Read more

மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷியா தாக்குதல் – இருளில் மூழ்கிய உக்ரைன்!

கீவ், கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷியா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷியா நடத்திய தாக்குதலின் காரணமாக, கீவ் உள்ளிட்ட நகரங்கள் மின் தடையால் இருளில் மூழ்கியுள்ளன. ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் கீவ் உள்ளிட்ட நகரங்களில் மின் தடையும், தண்ணீர் … Read more

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வி.ஐ.பி கலாச்சாரம்: மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!

புதுடெல்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவ பராமரிப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து எளிதாக்க ஒரு மருத்துவ அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று புதிதாக நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனை ஏற்று, டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் எம் ஸ்ரீனிவாஸ், மக்களவை செயலகத்தின் இணைச் செயலாளர் ஒய்.எம்.காந்த்பாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 24 மணி நேரமும் எய்ம்ஸ் கட்டுப்பாட்டு அறையில், மருத்துவமனை நிர்வாகத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அதிகாரிகளாக இருப்பார்கள். அவர்கள், சிகிச்சைக்கு வரும் … Read more

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: தொடக்க சுற்றில் லக்‌ஷயா சென் வெற்றி

ஒடென்சி, டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் 21-16, 21-12 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகா ஜின்டிங்கை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-13, 22-20 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜாவ் ஜுன் பெங்கை விரட்டினார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் … Read more

மியான்மர் சிறையில் பயங்கர குண்டு வெடிப்பு: 8 பேர் பலி

நோபிடாவ், மியான்மரின் 2-வது மிகப்பெரிய நகரமான யாங்கூனில் அந்த நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த சிறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கைதிகள் ஆவர். இந்த சிறையில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், கைதிகள் மனிதாபிமான மற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை இந்த சிறையில் சில கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்கள் வந்திருந்தனர். அவர்கள் சிறையின் தபால் … Read more

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு – இடைக்கால தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 2 மாதத்துக்கு நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை 2 மாதத்திற்கு நீட்டித்து … Read more