உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.89 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 99 லட்சத்து 30 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

காங்கிரஸ் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போவது யார்?- இன்று வாக்குப்பதிவு

புதுடெல்லி, நாட்டின் பழமையான கட்சி என்ற பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சிக்கு வயது 137. இந்த நெடிய பயணத்தில், அந்த கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டிருப்பது இது 6-வது முறை ஆகும். இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை. 24 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குடும்பத்தைச் சேராத ஒருவர் இன்றைய தேர்தல் மூலம் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போகிறார். இன்றைய தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசி … Read more

20 ஓவர் உலக கோப்பை: பயிற்சி கிரிக்கெட்டில் இந்தியா- ஆஸ்திரேலியா இன்று மோதல்

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 10 நாட்களுக்கு முன்பே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்று விட்டது. நேரடியாக சூப்பர்12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணிக்கு இரண்டு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக) அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் … Read more

ஈரான் சிறையில் பயங்கர தீ விபத்து: 4 பேர் உடல் கருகி பலி

டெஹ்ரான், ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானின் புறநகர் பகுதியான எவின் என்கிற இடத்தில் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் பெரும்பாலும் அரசு எதிர்ப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்த சிறையில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறையில் கைதிகள் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது அங்குள்ள துணி கிடங்கில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. மளமளவென பற்றி எரிந்த தீ கண்இமைக்கும் நேரத்தில் சிறைச்சாலை முழுவதும் பரவியது. … Read more

இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பதால் பாதிப்பு – நிபுணர் சொல்கிறார்

ஜலந்தர், நமது நாட்டில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ உயிர்வேதியியல், உடற்கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் பாடப்புத்தகங்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று வெளியிட்டார். ஆனால் இந்தியில் மருத்துவ படிப்பு என்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளரும், நிபுணருமான டாக்டர் நரேஷ் புரோகித் கருத்து தெரிவித்துள்ளார். இந்தி எம்.பி.பி.எஸ். படிப்பினால் என்ன பாதகம் என்று அவர் … Read more

டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு

ஹோபர்ட், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதல் சுற்றில் ‘பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. வீரர்கள் விவரம்:- ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, மைகில் ஜோன்ஸ், மேதிவ் கிராஸ், ரிச்சி பிரிங்டன் (கேப்டன்), காலம் மெக்லியோட், கிரிஸ் கிரேவ்ஸ், மைகில் லீஸ்க், மார்க் வெட், ஜோஷ் டேவி, ஷைப்யான் ஷெரிப், பிரட் வீல். வெஸ்ட் இண்டீஸ்; கைல் மேயர்ஸ், இயன் … Read more

சீன கம்யூனிஸ்டு கட்சி மாநாடு தொடங்கியது: ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்படுவாரா?

பீஜிங், உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீனாவின் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்படுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சீன அதிபர் ஜின்பிங் சீனாவின் அரசியல், பொருளாதார ஆதிக்கம் கடந்த 10 ஆண்டுகளில் பன்மடங்காக அதிகரித்திருக்கிறது. இதற்கு முழுமுதற் காரணமானவர் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங். இவர் சீனாவின் அதிபராக கடந்த 2013-ம் ஆண்டு பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, நாட்டின் … Read more

அந்தேரி தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட வேண்டாம்- ராஜ் தாக்கரே கோரிக்கை

மும்பை, ராஜ் தாக்கரே ஆதரவு அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளராக முர்ஜி பட்டேல் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே … Read more

இன்றைய ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை சந்திக்கிறது வெஸ்ட் இண்டீஸ்

ஹோபர்ட், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் முதல் சுற்றில் ‘பி’ பிரிவில் இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் ஹோபர்ட்டில் நடக்கின்றன. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடக்கும் முதலாவது ஆட்டத்தில் நிகோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீசும், ரிச்சி பெரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்தும் மோதுகின்றன. 20 ஓவர் உலக கோப்பையை இரண்டு முறை வென்ற ஒரே அணியான வெஸ்ட் இண்டீஸ் தரவரிசையில் பின்தங்கியதால் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் வாய்ப்பை … Read more

உலகின் ஆபத்தான நாடு என ஜோ பைடன் விமர்சனம்: அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

இஸ்லாமாபாத், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற ஆளும் ஜனநாயக கட்சியின் பிரசார குழு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, “பாகிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று, ஏனெனில் அந்த நாடு எந்தவித ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை கொண்டுள்ளது” என கூறினார். பாகிஸ்தான் குறித்த ஜோ பைடனின் இந்த பேச்சு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஜோ பைடனின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் … Read more