ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் சமநிலையானது – கசகஸ்தான் வெளியுறவு மந்திரி

அஸ்டானா(கசகஸ்தான்), ரஷியா – உக்ரைன் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தாலும், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், கசகஸ்தான் துணை வெளியுறவு மந்திரி ரோமன் வாசிலென்கோ, ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் சமநிலையானது என்று கூறினார். கசகஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு உறவு குறித்தும் அவர் பாராட்டினார். அவர் கூறியதாவது, “இந்த … Read more

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசின் ரிட் மனு – சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

புதுடெல்லி, நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. தற்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்து விரிவான புள்ளிவிவரங்கள் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த ரிட் மனு சுப்ரீம் … Read more

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- யு மும்பா அணிகள் இன்று மோதல்

பெங்களூரு, 9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்- யு மும்பா அணிகள் இரவு 7.30 மணியளவில் மோதுகின்றன. மேலும், அரியானா ஸ்டீலர்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன. இதனை தொடர்ந்து குஜராத் ஜெயன்ட்ஸ்-புனேரி பால்டன் அணிகள் இரவு 9.30 மணிக்கு மோதுகின்றன. தினத்தந்தி Related … Read more

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

வாஷிங்டன், அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர், அமெரிக்காவின் தெற்கு மாகாணமான வடக்கு கரோலினாவில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு கரோலினாவில் உள்ள ராலே நகரத்தில் நேற்று மாலை 5 மணியளவில் பொதுமக்களை நோக்கி ஒரு மர்மநபர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். பின் அங்கிருந்து அவர் தப்பிவிட்டார். எனினும் போலீசாரின் தீவிர நடவடிகையால், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் … Read more

மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர சோதனை

புதுடெல்லி, மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து அதிகாலை 3.20 மணியளவில் விமானம் டெல்லியில் தரையிறங்கியயவுடன், உடனடியாக அதிலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். அதன் பின், விமானம் சோதனை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த எஸ் யு 232 என்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக நேற்றிரவு 11.30 மணியளவில் மிரட்டல் வந்தது. உடனடியாக … Read more

ஷகீன் ஷா அப்ரிடியின் பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட வேண்டும்: சொல்கிறார் கவுதம் கம்பீர்

புதுடெல்லி, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் மோதும் போது அந்த அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடியின் பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்று இந்திய முன்னாள் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஷகீன் அப்ரிடியின் பந்துவீச்சை அடித்து நொறுக்க வேண்டும். அவரது பந்து வீச்சில் ஆட்டமிழந்து விடக்கூடாது என்ற நோக்குடன் தடுப்பாட்டத்தில் ஈடுபட கூடாது. அணி நல்ல நிலையை எட்ட அவரது பந்து வீச்சில் … Read more

பெல்கொரோட் பிராந்தியத்தில் உள்ள ரஷிய வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன் ஆயுதப்படை!

கீவ், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்கள் ஆகியும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது நேற்று ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உக்ரைன் விமானப்படை 25 ரஷிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கருங்கடலுக்கு அருகே கப்பல் கட்டும் மையம் மற்றும் துறைமுகம் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியதாகவும், மைகோலாயின் தெற்கு நகரம் கடுமையான குண்டு வீச்சு … Read more

கர்நாடகத்தில் 12-வது நாளாக ராகுல்காந்தி நடைபயணம்…!

பெங்களூரு, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். அந்த பாதயாத்திரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணித்து கேரளாவுக்கு சென்றது. அங்கு 19 நாட்கள் நடைபெற்ற பிறகு அந்த பாதயாத்திரை கடந்த மாதம் 30-ந் தேதி கர்நாடகத்திற்கு வந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டைக்கு வந்த ராகுல் காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் 35-வது நாள் மற்றும் கர்நாடகத்தில் 11-வது … Read more

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-தாய்லாந்து இன்று மோதல்

சில்ஹெட், 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. 7 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), பாகிஸ்தான் (10 புள்ளி), இலங்கை (8 புள்ளி), தாய்லாந்து (6 பு]ள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய அணிகள் வெளியேறின. இந்த தொடரில் இன்று (வியாழக்கிழமை) … Read more

வடகொரியா 2 தொலைதூர ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை; கொரிய ஊடகங்கள் தகவல்

பியாங்யாங், கொரிய எல்லை பகுதியில் அமெரிக்க கடற்படையுடன், தென்கொரியா நாட்டின் கடற்படை இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதனை வடகொரியா கடுமையாக எதிர்த்தது. மேலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா கடந்த 2 வாரங்களாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வடகொரியா கடந்த ஞாயிற்று கிழமை அடுத்தடுத்து 2 குறுகிய தொலைவு ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணைகளை சோதித்தது. இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங்-அன் மேற்பார்வையில் அந்நாடு தொலைதூரம் சென்று … Read more