பிறப்பு சான்றிதழில் குழந்தைகளின் பெயரை பெற்றோரே சேர்க்கும் வசதி டெல்லி மாநகராட்சியில் அறிமுகம்

புதுடெல்லி, குழந்தைகளின் பிறப்பு உடனடியாக பதிவு செய்யப்படும்போது குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டு இருக்காது. பின்னர் பெயர் சூட்டியவுடன் அதை பிறப்பு பதிவாளரிடம் சொல்லி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெறும் வழக்கம் பல மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது. இதில் பொதுமக்களுக்கு ஆகும் காலவிரயங்களை தடுக்க டெல்லி மாநகராட்சி எளிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை குழந்தைகளின் பெற்றோரோ, பாதுகாவலரோ ஆன்லைனில் விண்ணப்பித்து உடனடியாக பெற்றுக் … Read more

தேசிய விளையாட்டு கோலாகல நிறைவு: சர்வீசஸ் 128 பதக்கங்கள் குவித்து முதலிடம் – தமிழக அணிக்கு 5-வது இடம்

ஆமதாபாத், 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், காந்திநகர், சூரத் உள்பட 6 நகரங்களில் கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் நீச்சல், தடகளம், ஆக்கி, கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், யோகாசனம் உள்பட 36 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 1,226 பதக்கங்களுக்கு 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். முதல்முறையாக இந்த போட்டியை … Read more

ரஷிய போருடன் காஷ்மீர் விவகாரம் ஒப்பீடு… ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

நியூயார்க், உக்ரைன் நாட்டின் டோனெட்ஸ்க், ஜபோரிஜ்ஜியா உள்ளிட்ட 4 பகுதிகளை ரஷியா தன்னுடன் இணைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐ.நா. பொது சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதுபற்றிய வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு 143 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்து விலகி இருந்தன. எனினும், உக்ரைனில் நடந்து வரும் போரில், பொதுமக்களின் உட்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்படுவது மற்றும் குடிமக்கள் உயிரிழப்பு … Read more

கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை நீக்கமா? நீடிக்குமா? – சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு…!

புதுடெல்லி, கர்நடாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அம்மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை என்றும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட … Read more

உலக கோப்பை: இந்திய அணியில் மாற்று வீரர்களாக முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர் சேர்ப்பு

புதுடெல்லி, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகுபகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அணியில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யார்? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய … Read more

ஸ்பெயினில் கொட்டித் தீர்த்த கனமழை – வீடுகள், வாகனங்கள் சேதம்

மேட்ரிட், ஸ்பெயின் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு காரணமாக வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. ஸ்பெயினில் உள்ள டோரெவிஜா நகரில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாகன ஓட்டிகள் பலர் சிக்கிக் கொண்டனர். அடுத்த சில தினங்களுக்கு ஸ்பெயினில் மழை தொடர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் … Read more

நாடு முழுவதும் ரூ.900 கோடி பணமுதலீட்டு மோசடி: 2 சீனர்கள் உள்பட 10 பேர் கைது

ஐதராபாத், நாட்டில் பல்வேறு இடங்களில் பணமுதலீடுகளில் மக்களை ஈடுபட செய்து, அவர்களை மோசடி செய்யும் கும்பலை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதனால், பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதன்படி, நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் பிற பகுதிகளில் உள்ள கால் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதுபற்றி ஐதராபாத் நகர காவல் ஆணையாளர் சி.வி. ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, போலியான முதலீட்டு நிறுவனங்களின் நெட்வொர்க் கண்டறியப்பட்டு உள்ளது. அந்நிறுவனங்கள் மொபைல் … Read more

பள்ளி அணிகளுக்கான கால்பந்து: ரெட் அணி வெற்றி

சென்னை, லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 13 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான கால்பந்து போட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று சிறுவர்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ரெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை லயன்சை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் ஒயிட் ஸ்பார்ட்டன்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் எவர் கிரீனையும், … Read more

அமெரிக்காவில் இந்திய மாணவரை குத்தி கொன்றது ஏன்? – கொரிய மாணவர் வாக்குமூலம்

வாஷிங்டன், அமெரிக்காவின் இன்டியானா பர்டூ பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இந்தியாவை சேர்ந்த வருண் மணீஷ் சேடா (வயது 20) என்ற மாணவர் டேட்டா சயின்ஸ் பிரிவில் பயின்று வந்தார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இவருடன் கொரியாவை சேர்ந்த மின் ஜிம்மி ஷா என்ற மாணவரும் தங்கியிருந்தார். இந்தநிலையில் கடந்த வாரம் இவர்கள் இருவரும் அறையில் இருந்தபோது மின் ஜிம்மி ஷா திடீரென வருண் மணீஷ் சேடாவை கத்தியால் குத்தி கொலை … Read more

கர்நாடகத்தில் 11-வது நாளாக ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார் ராகுல்காந்தி…!

பெங்களூரு, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு வந்தது. அங்கு 19 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது. கர்நாடகத்தில் சாம்ராஜ்நகர் மாட்டம் குண்டலுபேட்டையில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. இந்த பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு ஆகிய மாவட்டங்கள் வழியாக சித்ரதுர்கா … Read more