தேசிய விளையாட்டு போட்டி: பதக்கப்பட்டியலில் தமிழகம் 5-வது இடம்

ஆமதாபாத், 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், ராஜ்கோட் உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான கால்பந்து போட்டியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழக அணி, அசாமை எதிர்கொண்டது.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழகம் 5-1 என்ற கோல் கணக்கில் அசாமை துவம்சம் செய்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. தமிழக அணியில் சந்தியா 4 கோலும், மாளவிகா ஒரு கோலும் அடித்தனர். தேசிய விளையாட்டில் பெண்கள் கால்பந்தில் தமிழக … Read more

ரஷிய முன்னாள் அதிபரை தேடப்படும் பட்டியலில் வைத்த உக்ரைன்

கீவ், ரஷியாவின் முன்னாள் அதிபராக 2008 முதல் 2012-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டிமிட்ரி மெத்வதேவ். தற்போது ரஷிய பாதுகாப்பு துறையின் துணை தலைவராக அவர் இருந்து வருகிறார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தொகுத்து அளித்துள்ள தேடப்படும் நபர்களின் பட்டியல் ஒன்று வெளிவந்து உள்ளது. இதில் ஒருவராக, மெத்வதேவ் இருக்கிறார். உக்ரைன் நிலப்பரப்பின் ஒற்றுமையை வலுவிலுக்கவும் மற்றும் உக்ரைன் எல்லைகளில் அத்துமீறி நடந்து கொள்ளவும் … Read more

முலாயம் சிங் யாதவ் மறைவு: இன்று மாலை சொந்த கிராமத்தில் உடல் தகனம்

லக்னோ, உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். மாநிலத்தில் 3 முறை முதல்-மந்திரியா கவும் இருந்த அவர், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறை வால் அவதிப்பட்டு வந்தார். வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்ட அவர் கடந்த 2-ந்தேதி அரியானாவின் குருகிராமில் உள்ள மெதந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கவலைக்கிடமான முறையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோசமடைந்தது. எனவே உயிர் காக்கும் … Read more

16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் இன்று தொடக்கம்

புவனேஷ்வர், ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. முதலில் இந்த போட்டி கடந்த 2020-ம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக அப்போது ரத்து செய்யப்பட்ட … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.66 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 68 லட்சத்து 23 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

பஞ்சாப்பில் 10 நாட்களில் 17 பயங்கரவாதிகள் கைது; போலீசார் தகவல்

சண்டிகர், பஞ்சாப்பில் கனடா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகளை பற்றிய தகவலை சேகரித்து பயங்கரவாத ஒழிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதில், கடந்த 10 நாட்களில் 5 பயங்கரவாத கும்பலை போலீசார் கண்டறிந்து உள்ளனர். அவர்களில் கனடாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் லக்பீர் லண்டா மற்றும் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் ஹர்வீந்தர் ரிண்டா உள்ளிட்டோர் கூட்டாக இணைந்து நடத்தி வர கூடிய ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த … Read more

தொடரை வெல்வது யார்? – இந்தியா- தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

புதுடெல்லி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக … Read more

பாகிஸ்தானில் அவலம்: கூலி கேட்ட இந்து பெண்; குண்டர்களுடன் வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை

லாகூர், பாகிஸ்தான் நாட்டில் லாஹிண்டே பஞ்சாப் பகுதியில் பகவல்பூர் நகரில் சக் என்ற இடத்தில் வசித்து வருபவர் கங்காராம். இவரது மனைவி குசும் பாய். பண்ணை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் குசும் பாய், பண்ணை உரிமையாளரான முகமது அக்ரமிடம் சென்று வேலைக்கான கூலியை வாங்கி வருவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனால், அக்ரம் அவரை கடுமையாக அடித்து விரட்டி விட்டுள்ளார். இதன்பின்னர், அடுத்த நாள் காலையில் அக்ரம் மற்றும் … Read more

தன்னாட்சி அந்தஸ்தை பெறுவதற்கு, கல்லூரிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் – யுஜிசி அறிவிப்பு

புதுடெல்லி, தேசிய கல்விக்கொள்கையை பின்பற்றி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அதிக தன்னாட்சி அதிகாரத்தை வழங்க, பல்கலைக்கழக மானியக்குழு, கல்லூரிகளின் தன்னாட்சி வழிகாட்டுதல்களை திருத்தி அமைத்து உள்ளது. இதன்படி இனிமேல் தன்னாட்சி அந்தஸ்தை பெறுவதற்கு, கல்லூரிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கல்லூரிகள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்க வேண்டும், ‘நாக்’ அல்லது என்.பி.ஏ. கமிட்டியின் ‘ஏ’ சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்பன போன்ற சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ சான்றிதழை பெற்ற தன்னாட்சி கல்லூரிகள் 15 ஆண்டுகள் … Read more

நேஷனல் பேட்மிண்டன் போட்டி: புதுக்கோட்டை வாலிபர் தங்கம் வென்று சாதனை

புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா கிராமத்தை சேர்ந்தவர் ஜனகன் (வயது 27). மீனவர் சமுதாயத்தை சேர்ந்த இவர் கோவாவில் நடந்த நேஷனல் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்த்து உள்ளார். இந்த நிலையில் ஜனகன் நேற்று சொந்த ஊருக்கு திரும்பினார். அவரை கிராமத்தினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இவர் பல்வேறு பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கிராம மக்கள் … Read more