'கேம் ஆப் திரோன்ஸ்' செர்சி லெனஸ்டருக்கு 3-வது திருமணம்

வாஷிங்டன், உலக அளவில் பிரபலமான வெப் சீரிஸ் கேம் ஆப் திரோன்ஸ். இந்த தொடர் தொலைக்காட்சி சேனலிலும் ஒளிபரப்பட்டது. பல கோடி பார்வையாளர்களை கொண்ட கேம் ஆப் திரோன்ஸ் தொடரின் முக்கிய கதாபாத்திரமான செர்சி லெனஸ்டராக நடிகை லினா ஹெட்டி நடித்துள்ளார். இதனிடையே, செர்லி லெனஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள லினாவுக்கு கடந்த 2007-ம் ஆண்டு இசையமைப்பாளர் பீட்டருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் இந்த தம்பதில் 2013ம் ஆண்டு பிரிந்தனர். இதனை தொடந்து 2018-ம் ஆண்டு டைரக்டர் டென் … Read more

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

புதுடெல்லி, டெல்லியில் பர்ஷ்கானா லஹோரி கேட் அருகில் உள்ள வால்மீகி மந்திர் அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது. முன்னதாக இரண்டு மாடிக் கட்டிடமாக இருந்த அது பாழடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அங்கு படுகாயங்களுடன் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து சம்பவத்தில் 4 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரை மீட்பு … Read more

கர்நாடகாவில் 33-வது நாளாக ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்கினார்…!

பெங்களூரு, தேச ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி பாதயாத்திரையை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாதயாத்திரை கேரளாவில் 19 நாட்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அதே மாதம் 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை சாம்ராஜ்பேட்டை மாவட்டம் குண்டலுப்பேட்டை வழியாக கர்நாடகத்திற்கு வந்தது. அங்கு ராகுல் காந்திக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நஞ்சன்கூடு, மைசூரு, மண்டியா வழியாக பாதயாத்திரை துமகூரு மாவட்டத்திற்கு … Read more

பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் மீண்டும் 'சாம்பியன்'

சுசூகா, இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 18-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சுசூகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. ஓடுபாதை 5.807 கிலோமீட்டர் தூரம் கொண்டது. அதை 53 முறை சுற்றி (மொத்த தூரம் 307.471 கிலோமீட்டர்) வர வேண்டும். இதை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை செலுத்தினர். ஆனால் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்பெயின் வீரர் கார்லஸ் செயின்சின் கார் … Read more

வெனிசுலாவில் நிலச்சரிவு: 22 பேர் பலி; 50 பேர் மாயம்

சான்டோஸ் மிச்செலினா, வெனிசுலா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சான்டோஸ் மிச்செலினா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் லாஸ் தெஜேரியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அவற்றின் 5 கால்வாய்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், அரகுவா என்ற மத்திய மாகாணத்தின் வடக்கே கனமழையால் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கி கொண்டனர். அவர்களில் 22 பேர் பலியானார்கள். 50 பேரை காணவில்லை. இதனை தொடர்ந்து, … Read more

அமுல் நிறுவனம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களை இணைக்கும் செயல்முறை தொடக்கம் – அமித்ஷா தகவல்

கவுகாத்தி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 3 நாள் பயணமாக கடந்த 7-ந் தேதி அசாம் மாநிலத்துக்கு சென்றார். அவர் கவுகாத்தியில் வடகிழக்கு கவுன்சிலின் 70-வது மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அமுல் மற்றும் 5 கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநில கூட்டுறவு சங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இயற்கை பொருட்களுக்கு சான்றிதழ் … Read more

"சரியான தருணத்தில் பனிப்பொழிவு இருந்தது மகிழ்ச்சி" – கேப்டன் ஷிகர் தவான்

ராஞ்சி, இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று பகல்-இரவு மோதலாக அரங்கேறியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் கேஷவ் மகராஜ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 279 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 45.5 ஓவர்கள் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.62 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 66 லட்சத்து 25 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது தாக்குதல்; ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு

காந்திநகர், குஜராத் மாநிலம் வன்ஸ்டா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த்குமார். இவர் அப்பகுதியில் பழங்குடியின சமூகத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், நவ்சாரி மாவட்டம் ஹர்ஜம் என்ற பகுதியில் எம்.எல்.ஏ. ஆனந்த்குமார் நேற்று இரவு தனது காரில் சென்றார். அப்போது, அவரது காரை இடைமறித்த மர்ம கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்றது. கும்பல் நடத்திய தாக்குதலில் ஆனந்த்குமார் முகத்தில் ரத்தக்காயம் ஏற்பட்டது. மேலும், அவர் பயணித்த கார் கண்ணாடியும் அந்த கும்பலால் உடைக்கப்பட்டது. இந்த தாக்குதல் … Read more

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி பதிலடி கொடுக்குமா?

ராஞ்சி, இந்தியா வந்துள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். ஏனெனில் … Read more