நோபல் பரிசு வென்ற ஸ்வாந்தே பாபோவை குளத்தில் தூக்கி வீசிய சக பணியாளர்கள்; வைரலான வீடியோ

பெர்லின், நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் மருத்துவ விருதுடன் தொடங்கியது. 2022-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாண்தே பாபோவிற்கு “அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய … Read more

இடுக்கி அருகே பயங்கரம்: இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை – நண்பர் கைது

பாலக்காடு: இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- இடுக்கி மாவட்டம் மறையூர் பெரிய குடிகை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். (வயது 27). இவருடைய நண்பர் சுரேஷ் (26). இவர்கள் இருவரும் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நின்று கொண்டு ரமேசும், சுரேசும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் அந்தப்பகுதியில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து … Read more

'ஒலிம்பிக் தகுதி சுற்றில் கவனம் செலுத்துகிறேன்' – இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து பேட்டி

சென்னை, முன்னாள் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவருமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆன்லைன் மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் மிகப்பெரிய போட்டியான தேசிய விளையாட்டில் பங்கேற்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட முடியாமல் போய் விட்டது, உண்மையிலேயே இந்த போட்டியை தவறவிட்டது வருத்தம் அளிக்கிறது. தற்போது காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஏறக்குறைய குணமடைந்து விட்டேன். நன்றாக இருப்பதாக … Read more

கிரீமியா பாலத்தில் குண்டுவெடிப்பு; பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவு

மாஸ்கோ, ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரின் ஒரு பகுதியாக ரஷியா மற்றும் கிரீமியாவுக்கு இடையேயான பகுதிகளை இணைக்கும் கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே கட்டப்பட்ட் முக்கிய பாலம் ஒன்று குண்டுவெடிப்பில் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து, அதன் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான உத்தரவை ரஷிய அதிபர் புதின் பிறப்பித்து உள்ளார். ரஷியா மற்றும் கிரீமியாவுக்கு இடையேயான கியாஸ் குழாய் இணைப்பு மற்றும் மின் இணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் மேம்படுத்தும்படி அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி, கெர்ச் ஜலசந்தி பகுதியில் … Read more

போலி இணையதளங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றி பணம் பறிப்பு நாடு முழுவதும் 12 பேர் கைது

புதுடெல்லி, தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியாக இணையதளங்கள், மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி, மக்களை ஏமாற்றி சிலர் பணம் பறிப்பதாக ஒரு முன்னணி நிறுவனத்தின் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் மேற்கொண்ட விசாரணையில், டெல்லி, பீகாரைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல வேறு சில நிறுவனங்கள் அளித்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட 3 நடவடிக்கைகளில், உத்தரபிரதேசம், டெல்லி, மும்பையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.வினியோக உரிமை தருவதாகவும், நிதிச் சேவை வழங்குவதாகவும் … Read more

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

சில்ஹெட், 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் நேற்று பகலில் நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை சந்தித்தது. காயம் காரணமாக கேப்டன் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.59 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 63 லட்சத்து 88 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

கர்நாடகாவில் 32-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி…!

கர்நாடகா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகத்தில் தற்போது நடந்து வருகிறது. இதற்கிடையே, ஒரு … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி வெற்றி

பெங்களூரு, 11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, சென்னை, மும்பை உள்பட 11 நகரங்களில் அரங்கேறுகிறது. இதில் பெங்களூரு கன்டீவாரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணியை எதிர்கொண்டது. இரு அணிகளும் சரிசமமாக மல்லுக்கட்டிய இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை பதம் பார்த்து போட்டியை வெற்றியுடன் … Read more

ரஷிய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் கொன்று குவிப்பு

மாஸ்கோ, உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன. அப்படி ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷியா சமீபத்தில் தன்னுடன் இணைத்து கொண்டது. இதனால் கோபமடைந்துள்ள உக்ரைன் ராணுவம் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டெடுக்க ரஷிய படைகளுடன் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. அந்த வகையில் கார்கீவ் பிராந்தியத்தில் ரஷிய படைகள் வசம் உள்ள குப்யான்ஸ்க் நகரை மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் … Read more