பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

சில்ஹெட், 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் நேற்று பகலில் நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை சந்தித்தது. காயம் காரணமாக கேப்டன் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.59 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 63 லட்சத்து 88 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

கர்நாடகாவில் 32-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி…!

கர்நாடகா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகத்தில் தற்போது நடந்து வருகிறது. இதற்கிடையே, ஒரு … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி வெற்றி

பெங்களூரு, 11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, சென்னை, மும்பை உள்பட 11 நகரங்களில் அரங்கேறுகிறது. இதில் பெங்களூரு கன்டீவாரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணியை எதிர்கொண்டது. இரு அணிகளும் சரிசமமாக மல்லுக்கட்டிய இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை பதம் பார்த்து போட்டியை வெற்றியுடன் … Read more

ரஷிய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் கொன்று குவிப்பு

மாஸ்கோ, உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன. அப்படி ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷியா சமீபத்தில் தன்னுடன் இணைத்து கொண்டது. இதனால் கோபமடைந்துள்ள உக்ரைன் ராணுவம் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டெடுக்க ரஷிய படைகளுடன் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. அந்த வகையில் கார்கீவ் பிராந்தியத்தில் ரஷிய படைகள் வசம் உள்ள குப்யான்ஸ்க் நகரை மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் … Read more

சிவசேனா கட்சி சின்னம் முடக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி

மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் முதல்-மந்திரி பதவி போட்டி காரணமாக தேர்தலுக்கு பிறகு கூட்டணி முறிந்தது. மேலும் கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சிவசேனா ஆட்சியை பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார். கடந்த ஜூன் மாதம் நடந்த அரசியல் சூறாவளியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சி … Read more

அஸ்தனா ஓபன் டென்னிஸ் – கிரீஸ் முன்னனி வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபஸ் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

அஸ்தனா, அஸ்தனா ஓபன் டென்னிஸ் தொடர் கசகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தனாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் கிரீஸ் முன்னனி வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபஸ் உடன் போலந்து வீரர் ஹர்காஸ் மோதினார். டை பிரேக்கரில் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் போராடி வென்ற சிட்சிபஸ், அடுத்த செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ஹர்காஸை வீழ்த்தினார். இதன் மூலம் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறிய சிட்சிபஸ், அங்கு ரஷிய … Read more

இலங்கை சிறையில் கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து கைதி உயிரிழப்பு

கொழும்பு, இலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அங்குணகொளபெலசவில் சிறைச்சாலை அமைந்திருக்கிறது.இங்கு, ஒரு கொலை வழக்கில் கடந்த 2001-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி இருந்தார்.அவருக்கான தூக்கு தண்டனை 25 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றப்பட்ட நிலையில் வருகிற 2028-ம் ஆண்டு விடுதலை செய்யப்படவிருந்தார். இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு, சிறையின் சமையலறையில் அவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.அப்போது ஒரு பாத்திரத்தை எடுக்க முயன்ற அவர், கால் தடுமாறி, கோழிக்குழம்பு கொதித்துக் கொண்டிருந்த ஒரு பெரிய பாத்திரத்தில் விழுந்தார். அதில் … Read more

மராட்டியம்: பஸ்-லாரி மோதல்; 11 பேர் பலி, 32 பேர் காயம்

நாசிக், மராட்டியத்தில் நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற பஸ் ஒன்று இன்று அதிகாலை 5 மணியளவில் லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பஸ் தீப்பிடித்து கொண்டது. தீ மளமளவென பஸ் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால், பஸ்சுக்குள் சிக்கி கொண்ட பயணிகள் வெளியே வர முடியாமல் பரிதவித்தனர். இந்த விபத்தில் மற்றும் தீயில் சிக்கி 11 பயணிகள் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஒரு … Read more

20 ஓவர் உலக கோப்பை; இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா இல்லாதது பெரிய இழப்பு – ரவி சாஸ்திரி

சென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சென்னையில் உள்ள தனியார் பள்ளியின் கிரிக்கெட் மைதான தொடக்க விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெறவில்லை. இது நிச்சயம் இந்தியாவுக்கு பெரிய இழப்பு தான். அதே சமயம் இவர்கள் இல்லாதது அணியில் புதிய … Read more