இலங்கை சிறையில் கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து கைதி உயிரிழப்பு

கொழும்பு, இலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அங்குணகொளபெலசவில் சிறைச்சாலை அமைந்திருக்கிறது.இங்கு, ஒரு கொலை வழக்கில் கடந்த 2001-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி இருந்தார்.அவருக்கான தூக்கு தண்டனை 25 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றப்பட்ட நிலையில் வருகிற 2028-ம் ஆண்டு விடுதலை செய்யப்படவிருந்தார். இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு, சிறையின் சமையலறையில் அவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.அப்போது ஒரு பாத்திரத்தை எடுக்க முயன்ற அவர், கால் தடுமாறி, கோழிக்குழம்பு கொதித்துக் கொண்டிருந்த ஒரு பெரிய பாத்திரத்தில் விழுந்தார். அதில் … Read more

மராட்டியம்: பஸ்-லாரி மோதல்; 11 பேர் பலி, 32 பேர் காயம்

நாசிக், மராட்டியத்தில் நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற பஸ் ஒன்று இன்று அதிகாலை 5 மணியளவில் லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பஸ் தீப்பிடித்து கொண்டது. தீ மளமளவென பஸ் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால், பஸ்சுக்குள் சிக்கி கொண்ட பயணிகள் வெளியே வர முடியாமல் பரிதவித்தனர். இந்த விபத்தில் மற்றும் தீயில் சிக்கி 11 பயணிகள் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஒரு … Read more

20 ஓவர் உலக கோப்பை; இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா இல்லாதது பெரிய இழப்பு – ரவி சாஸ்திரி

சென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சென்னையில் உள்ள தனியார் பள்ளியின் கிரிக்கெட் மைதான தொடக்க விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெறவில்லை. இது நிச்சயம் இந்தியாவுக்கு பெரிய இழப்பு தான். அதே சமயம் இவர்கள் இல்லாதது அணியில் புதிய … Read more

இந்தியா விரும்பும் நாட்டில் இருந்து எண்ணெய்யை வாங்கும்: அமெரிக்காவில் மத்திய மந்திரி பேச்சு

வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி அந்நாட்டின் பெட்ரோலிய துறை மந்திரி ஜென்னிபர் கிரான்ஹோம் மற்றும் பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம், எரிபொருள் வாங்குவதில் ரஷியாவை சார்ந்து இருப்பதற்கு எதிராக இந்தியாவுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு புரி நேரடியான முறையில் அளித்த பதிலில், ரஷியாவிடம் … Read more

காஷ்மீரில் துப்பாக்கி தவறுதலாக வெடித்து ராணுவ வீரர் பலி

ஸ்ரீநகர், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சந்தர்மோகன் (வயது 28) என்ற ராணுவ வீரர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சோபோர் பகுதியில் சத்தூசா என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு வெளியே நேற்று முன்தினம் மாலை அவர் பணியில் இருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவரது துப்பாக்கி வெடித்தது. அதில் குண்டு பாய்ந்து ராணுவர் வீரர் சந்தர்மோகன் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தினத்தந்தி Related Tags : காஷ்மீர் துப்பாக்கி ராணுவ வீரர் … Read more

மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டி: கோத்தகிரி அணி வெற்றி

நீலகிரி கோத்தகிரி நீலகிரி மாவட்ட அளவிலான சி டிவிஷன் லீக் போட்டியில் எல்லநள்ளி அணியை வீழ்த்தி, கோத்தகிரி காட்டிமா கிரிக்கெட் அணி வெற்றிப் பெற்றது. 2-வது லீக் போட்டி நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் ஏ, பி மற்றும் சி டிவிஷன் என 3 டிவிஷனாக பிரிக்கப்பட்டு ஆண்டு தோறும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு டிவிஷனிலும் தலா 10 அணிகள் உறுப்பினர்களாக தங்களைப் பதிவு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு … Read more

கொரோனாவை கண்டுபிடிக்கும் செல்போன் 'செயலி' இலங்கை பேராசிரியர் உருவாக்கினார்

கொழும்பு, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை இணை பேராசிரியராக பணிபுரிபவர் இலங்கையைச் சேர்ந்த உடாந்த அபேவர்த்தனே. இவர் தனது குழுவினருடன் இணைந்து, கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார். அதன் அடிப்படையில் ‘ரெஸ்ஆப்’ என்ற செயலியை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியானது, கொரோனாவை மட்டுமின்றி ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற சுவாச வியாதிகளையும் கண்டுபிடித்துவிடும். இருமல், மூக்கில் நீர் … Read more

கர்நாடகாவில் 7-வது நாளாக நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி..!

கர்நாடகா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகத்தில் தற்போது நடந்து வருகிறது. நேற்று முன்தினம் … Read more

தேசிய விளையாட்டுப் போட்டி: தமிழகத்திற்கு நீச்சலில் இரு பதக்கம்

ஆமதாபாத், 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் உள்ள ஆமதாபாத், ராஜ்கோட் உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. பெண்களுக்கான நீச்சலில் 400 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் கர்நாடகாவின் ஹாஷிகா 4 நிமிடம் 32.17 வினாடிகளில் இலக்கை அடைந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். 14 வயதான ஹாஷிகா நடப்பு தொடரில் ருசித்த 6-வது தங்கம் இதுவாகும். அத்துடன் ஒரு வெண்கலமும் அவர் வென்று இருக்கிறார். இதேபோல் குஜராத் நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் 50 … Read more

அமெரிக்காவில் மருமகள் சுட்டு கொலை; இந்திய வம்சாவளி மாமனார் கைது

சான் ஜோஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் பகுதியில் வசித்து வந்தவர் குர்பிரீத் கவுர் தோசன்ஜ். இவரது மாமனாரான சீத்தல் சிங் தோசன்ஜ் என்பவர், தனது மருமகளை வால்மார்ட் கடையின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். இந்த வழக்கில் போலீசார் 74 வயதுடைய சீத்தல் சிங்கை கைது செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, கடைசியாக தனது மாமாவிடம் குர்பிரீத் சிங் தொலைபேசி வழியே பேசியுள்ளார். அதில், சீத்தல் சிங் தன்னை கொல்ல … Read more