பஞ்சாப்பில் 10 நாட்களில் 17 பயங்கரவாதிகள் கைது; போலீசார் தகவல்

சண்டிகர், பஞ்சாப்பில் கனடா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகளை பற்றிய தகவலை சேகரித்து பயங்கரவாத ஒழிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதில், கடந்த 10 நாட்களில் 5 பயங்கரவாத கும்பலை போலீசார் கண்டறிந்து உள்ளனர். அவர்களில் கனடாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் லக்பீர் லண்டா மற்றும் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் ஹர்வீந்தர் ரிண்டா உள்ளிட்டோர் கூட்டாக இணைந்து நடத்தி வர கூடிய ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த … Read more

தொடரை வெல்வது யார்? – இந்தியா- தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

புதுடெல்லி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக … Read more

பாகிஸ்தானில் அவலம்: கூலி கேட்ட இந்து பெண்; குண்டர்களுடன் வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை

லாகூர், பாகிஸ்தான் நாட்டில் லாஹிண்டே பஞ்சாப் பகுதியில் பகவல்பூர் நகரில் சக் என்ற இடத்தில் வசித்து வருபவர் கங்காராம். இவரது மனைவி குசும் பாய். பண்ணை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் குசும் பாய், பண்ணை உரிமையாளரான முகமது அக்ரமிடம் சென்று வேலைக்கான கூலியை வாங்கி வருவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனால், அக்ரம் அவரை கடுமையாக அடித்து விரட்டி விட்டுள்ளார். இதன்பின்னர், அடுத்த நாள் காலையில் அக்ரம் மற்றும் … Read more

தன்னாட்சி அந்தஸ்தை பெறுவதற்கு, கல்லூரிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் – யுஜிசி அறிவிப்பு

புதுடெல்லி, தேசிய கல்விக்கொள்கையை பின்பற்றி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அதிக தன்னாட்சி அதிகாரத்தை வழங்க, பல்கலைக்கழக மானியக்குழு, கல்லூரிகளின் தன்னாட்சி வழிகாட்டுதல்களை திருத்தி அமைத்து உள்ளது. இதன்படி இனிமேல் தன்னாட்சி அந்தஸ்தை பெறுவதற்கு, கல்லூரிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கல்லூரிகள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்க வேண்டும், ‘நாக்’ அல்லது என்.பி.ஏ. கமிட்டியின் ‘ஏ’ சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்பன போன்ற சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ சான்றிதழை பெற்ற தன்னாட்சி கல்லூரிகள் 15 ஆண்டுகள் … Read more

நேஷனல் பேட்மிண்டன் போட்டி: புதுக்கோட்டை வாலிபர் தங்கம் வென்று சாதனை

புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா கிராமத்தை சேர்ந்தவர் ஜனகன் (வயது 27). மீனவர் சமுதாயத்தை சேர்ந்த இவர் கோவாவில் நடந்த நேஷனல் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்த்து உள்ளார். இந்த நிலையில் ஜனகன் நேற்று சொந்த ஊருக்கு திரும்பினார். அவரை கிராமத்தினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இவர் பல்வேறு பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கிராம மக்கள் … Read more

உக்ரைன் மீதான ரஷிய ஏவுகணைத் தாக்குதல் மிருகத்தனமானது- ஜோ பைடன் கண்டனம்

வாஷிங்டன், கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷியா, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறைந்தபட்சம் 5 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக கூறுப்படுகிறது. இது குறித்த வீடியே சமூக வளைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். … Read more

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 52% பேர் முன்பே அறிமுகம் ஆனவர்கள்; போலீசார் அறிக்கை

சிம்லா, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் பற்றி இமாசல பிரேதச போலீசார் வெளியிட்டு உள்ள ஆய்வு அறிக்கை ஒன்று அதிர்ச்சி தெரிவிக்கின்றது. 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டில் இதுவரை என கடந்த 3 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பற்றி பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக, 895 வழக்குகள் மாநிலத்தில் பதிவாகி உள்ளன. இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோர் பெருமளவில், பாதிக்கப்படுபவர்களுக்கு முன்பே நன்றாக தெரிந்த நபர்களாக உள்ளனர் என அறிக்கை தெரிவிக்கின்றது. … Read more

ஓசூர்: சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி வைத்தார் டோனி

ஓசூர், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் சென்னை துரைப்பாக்கம் மற்றும் சேலம் வாழப்பாடியில் கடந்த ஏப்ரல் மாதம் கிரிக்கெட் அகாடமிகள் தொடங்கப்பட்டு இளம் வீரர்கள் அங்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் அந்த அகாடமி மேலும் விரிவுப்படுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.எஸ்.டோனி குளோபல் பள்ளியில் உள்ள மைதானத்தில் சூப்பர் கிங்ஸ் அகாடமி அமைக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி சிறப்பு விருந்தினராக கலந்து … Read more

உக்ரைன் தலைநகரில் ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு: 10 பேர் பலி

கீவ், உக்ரைன் நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைப்பதாக கூறி போரை தொடங்கிய ரஷியா பின்னர் மின்உற்பத்தி நிலையங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் என தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. போர் தொடங்கிய சமயத்தில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷிய படைகள் முயற்சித்த நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்களின் கடுமையான எதிர்ப்பால் ரஷிய படைகள் அங்கிருந்து … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

கொல்கத்தா, 11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதலாவது லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகானுடன் கொல்கத்தாவில் இன்று (திங்கட்கிழமை) பலப்பரீட்சை நடத்துகிறது. கடந்த இரு சீசனில் ‘பிளே-ஆப்’ சுற்றை கூட எட்டாமல் சொதப்பிய சென்னை அணியில் இந்த முறை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அண்மையில் தூரந்த் கோப்பை … Read more