மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய கமிஷன் – மத்திய அரசு அமைத்தது

புதுடெல்லி, நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது. ஆனால், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு மாறியுள்ள தலித்துகளுக்கு எஸ்.சி. வகுப்பினருக்குரிய அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன. ஆனால் இந்த கோரிக்கையை பா.ஜ.க. எதிர்க்கிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், … Read more

புரோ கபடி லீக்: பரபரப்பான போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி

பெங்களூரு, புரோ கபடி லீக் தொடரில் 8 சீசன்கள் வெற்றிகரமாக நடந்த நிலையில், 9வது சீசன் இன்று தொடங்கியது. 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்த சீசனில் பார்வையாளர்களுக்கு மத்தியில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 12 அணிகள் கலந்து கொண்டு ஆடும் புரோ கபடி போட்டிகள் பெங்களூரு, புனே, ஹைதராபாத் நகரங்களில் நடத்தப்படுகின்றன. முதற்கட்ட போட்டிகள் பெங்களூருவில் நடக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் டபாங் டெல்லி மற்றும் யு மும்பா அணிகள் மோதின. … Read more

சிரியாவில் அமெரிக்கா வான்தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்கள் 3 பேர் பலி

டமாஸ்கஸ், சிரியாவின் பல்வேறு பகுதிகளில் ஐ. எஸ். பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. அவர்களை ஒடுக்க அமெரிக்க படைகளின் உதவியுடன் சிரியா ராணுவம் போராடி வருகிறது. இந்த நிலையில் சிரியாவின் வடகிழக்கு பகுதியில் துருக்கி நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காமிஷ்லி நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் ஒரே நேரத்தில் வான்வழியாகவும், தரைவழியாகவும் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர்களான அபு முவுத் அல் கஹ்தானி, அபு … Read more

ஆன்லைனில் படிப்பதற்காக மலை உச்சிக்கு சென்ற 3 மாணவர்கள் மின்னல் தாக்கி காயம்

கந்தமால், ஒடிசாவில் 3 மாணவர்கள் ஆன்லைனில் படிப்பதற்காக அருகிலுள்ள மலை உச்சிக்கு சென்றனர். அங்கு படித்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர். மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 185 கிமீ தொலைவில் உள்ள முண்டகம் கிராமத்தில் இணைய இணைப்பு இல்லாத காரணத்தால் மாணவர்கள் நேற்று பிற்பகல் ஆன்லைனில் படிப்பதற்காக மலை உச்சிக்கு சென்றனர். மலை உச்சிக்கு சென்றால் தான் இணைய இணைப்பு கிடைக்கும் என்பதால் அவர்கள் அங்கு சென்றனர். இந்த நிலையில் மாலையாகியும் மாணவர்கள் வீடு … Read more

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்

கிறிஸ்ட்சர்ச், முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்க வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளன. இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் இன்று தொடங்கும் அந்த முத்தரப்பு தொடரின் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இன்று கிறிஸ்ட்சர்ச்சில் மோதுகின்றன. ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் நடந்த … Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் – இந்தியா புறக்கணிப்பு!

ஜெனிவா, இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009-ல் நடந்த இறுதிக் கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது. ‘இது தொடர்பாக, இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என, ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2012 – 2014 ல், அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆட்சியின்போது, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், அந்த தீர்மானங்கள் இரண்டு முறை தோல்வி அடைந்தன. … Read more

பாலக்காடு அருகே பயங்கர விபத்து: ஊட்டிக்கு சுற்றுலா வந்த மாணவர்கள் உள்பட 9 பேர் சாவு

பாலக்காடு, இந்த கோர விபத்து குறித்த தகவல்கள், நெஞ்சை நொறுக்கு வதாக அமைந்துள்ளன. அவை வருமாறு:- ஊட்டிக்கு சுற்றுலா கேரள மாநிலம், எர்ணாகுளம் பள்ளுருத்தி பேசிலோஸ் வித்யநிகேதன்பள்ளிக்கூடத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 42 பேர், 5 ஆசிரியர்கள் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டிக்கு ஒரு தனியார் பஸ்சில் உல்லாச சுற்றுலா புறப்பட்டனர். பஸ்சை டிரைவர் ஜோமோன் ஓட்டினார். ஒரு உதவி டிரைவரும் உடன் இருந்தார். ஊட்டியை உற்சாகமாக வலம் … Read more

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் இன்று தொடக்கம்

பெங்களூரு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள புரோ கபடி லீக் 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மட்டும் கைவிடப்பட்ட இந்த போட்டி, கடந்த ஆண்டு பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கபடி ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 9-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் உள்ள கண்டீவாரா உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 26-ந் தேதி வரை … Read more

"எதிர்ப்பு குரல்கள் எரிமலையாக வெடித்து சிதறும்" – ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை பிரியங்கா சோப்ரா!

வாஷிங்டன், ஹிஜாப் அணியாத காரணத்தினால் ஈரானிய இளம் பெண் மஹ்சா அமினியை போலீசார் தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஈரானில் பெண்கள், தங்களது உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஈரான் பெண்களுக்கு ஆதரவாக நடிகை பிரியங்கா சோப்ரா களமிறங்கியுள்ளார். முன்னதாக ஜூலியட் பினோச் மற்றும் இசபெல் ஹப்பர்ட் உள்ளிட்ட முன்னணி பிரெஞ்சு நடிகைகள் தங்களது முடியை வெட்டி ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். பிரியங்கா சோப்ராவும் சமூக … Read more

ஒடிசா: நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகில் திடீர் தீ விபத்து – 10 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

புவனேஸ்வர், ஒடிசா கடற்கரையில் உள்ள நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகில் திடீரென தீப்பிடித்தது. படகில் இருந்த மீனவர்கள் 10 பேர் காயமின்றி உயிர் தப்பினர். ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள தாம்ரா பகுதியில் உள்ள தோசிங்கா கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென படகில் தீப்பிடித்தது. வீலர்ஸ் தீவு அருகே சென்றபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதைத் தொடர்ந்து, கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீப்பிடித்த படகில் இருந்த … Read more