தேசிய விளையாட்டு: சர்வீசஸ் வீரர்கள் குல்வீர், சுப்பிரமணியம் புதிய சாதனை…!

ஆமதாபாத், 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தடகளத்தில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சர்வீசஸ் வீரர் குல்வீர் சிங் 28 நிமிடம் 54.29 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு தேசிய விளையாட்டில் இந்த பிரிவில் ஜி.லட்சுமணன் 29 நிமிடம் 13.50 வினாடிகளில் பந்தய … Read more

மனித உரிமை மீறல் விவகாரம்: இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு

கொழும்பு, இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடந்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர். ரணில் விக்ரமசிங்கே அதிபர் ஆன நிலையில், அவரது ஆட்சியை எதிர்த்தும் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவமும், போலீசாரும் தாக்குதல் நடத்தும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், இலங்கையில் நடக்கும் இத்தகைய மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் தீர்மானத்தை ஜெனீவாவில் உள்ள ஐ.நா. … Read more

சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் கலைப்பு இல்லை – மத்திய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி, மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தை கலைத்து விட்டு அதனை, சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையுடன் இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு நேற்று தெளிவுபடுத்தியுள்ளது. பத்திரிகை தகவல் பணியகம் இதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி ஸ்மிரிதி இரானியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தினத்தந்தி Related Tags : Ministry of Minority Affairs Central Govt

கடைசி டி20 கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா

இந்தூர், தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வரிசையாக தோற்ற தென்ஆப்பிரிக்கா தொடரையும் இழந்து விட்டது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்றுநடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 106 ரன்களில் சுருட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்த இந்தியா கவுகாத்தியில் … Read more

இஸ்ரேல் படையால் பாலஸ்தீனர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

ஜெருசலேம், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் பலர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் பாலஸ்தீன பயங்கரவாதிகளை களையெடுப்பதாக கூறி மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி அதிரடி தேடுதல் வேட்டையை நடத்துகின்றனர். இதுபோன்ற தேடுதல் வேட்டைகளின்போது அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை … Read more

கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் இருக்கை அமைக்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு

திருவனந்தபுரம், கேரளாவில் சமீபத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள திருவனந்தபுரம் வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், திருவனந்தபுரம் தமிழ் சங்க பொதுச்செயலாளர் சு.முருகன், செயலாளர் சி.கண்ணன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- சங்க கால தமிழ் புலவர்களில் 50-க்கும் அதிகமானோர் சேர நாட்டைச் (தற்போதைய கேரளம்) சேர்ந்தவர்கள். சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகளும் சேர நாட்டினர் தான். எனவே, தமிழ் இலக்கியத்துக்கு பெரும் நன்கொடையாகிய சிலப்பதிகாரத்தை படைத்த இளங்கோவடிகளின் … Read more

டெல் அவிவ் ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் 'சாம்பியன்'

டெல் அவிவ், டெல் அவிவ் வாட்டர்ஜென் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி இஸ்ரேலில் நடந்தது. இதன் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், தற்போது தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் மரின் சிலிச்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 34 நிமிடமே தேவைப்பட்டது. … Read more

ஈராக்கில் துருக்கி ராணுவம் வான்தாக்குதல்: குர்திஸ் பயங்கரவாதிகள் 23 பேர் பலி

பாக்தாத், ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பல்வேறு நகரங்கள் குர்திஸ்தான் பிராந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பிராந்தியத்தை ஆட்சி செய்து வரும் பிகேகே எனப்படும் குா்திஸ்தான் தொழிலாளா் கட்சியை அண்டை நாடான துருக்கி பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அவர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஸ் பிராந்தியமான அசோஸ் பிராந்தியத்துக்குள் துருக்கி போர் விமானங்கள் நுழைந்து வான்தாக்குதல் நடத்தின. இதுபற்றி துருக்கி ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

பெங்களூருவில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

பெங்களூரு: பெங்களூருவில் பகுதி நேர வேலை தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக சீனா நிறுவனங்களுக்கு சொந்தமான 12 அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெங்களூருவில் உள்ள இளைஞர்களை குறிவைத்து, அவர்களிடம் பகுதி நேர வேலை தருவதாக கூறி, ஒரு செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறுகின்றனர். பின்னர், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை மற்றொரு முதலீட்டு செயலியில் அந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு தெற்கு மண்டல போலீஸ் நிலையம் ஒன்றில் புகார் அளிக்கப்பட்டது. … Read more

இந்த இரு வீரர்களை டெஸ்ட் அணியின் திட்டங்களில் சேர்க்க வேண்டும் – தினேஷ் கார்த்திக்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் தொடர் அக்டோபர் 6 முதல் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு பற்றி தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் டுவிட்டரில் கூறியதாவது:- ஒருநாள் அணியில் ரஜத் படிதாரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்புக்கு மிகவும் தகுதியானவர். முகேஷ் குமாருக்கும் வாழ்த்துகள். தற்போது சர்பராஸ் கான், இந்திரஜித் பாபாவை டெஸ்ட் அணியின் திட்டங்களில் சேர்க்க வேண்டும். அபாரமாகப் பங்களிப்புகளை, திறமையான … Read more