லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட்: பில்வாரா கிங்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா கேப்பிடல்ஸ் அணி சாம்பியன்

ஜெய்பூர், ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் நேற்று இரவு ஜெய்பூரில் நடைபெற்றது. இந்த இறுதி ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிடல்ஸ் அணியும், இர்பான் பதான் தலையிலான பில்வாரா கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. அந்த அணியில் … Read more

தென்கொரியாவை நோக்கி கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணை வீச்சு!

சியோல், வட கொரியா கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பான் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ஏவுகணையை ஏவியது.வடகொரியா பரிசோதித்த ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தது. 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வட கொரிய ஏவுகணை இதுவாகும். இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியது. வடகொரியாவுக்கு … Read more

டெல்லியில் உள்ள காந்திநகர் மார்க்கெட் ஜவுளி சந்தையில் பயங்கர தீ விபத்து..! ஏராளமான துணிகள் தீயில் எரிந்து நாசம்

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வடக்கு டெல்லியில் உள்ள காந்தி நகர் மார்க்கெட் துணி சந்தையில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டு மெல்ல அப்பகுதியில் உள்ள பிற கடைகளிலும் பரவியது. இதனால் சுற்றுப்புறம் முழுவதும் புகை மண்டலமாக பரவியதால், மக்கள் அவதிக்குள்ளாகினர்.எனினும், தகவல் கிடைத்ததும் 35 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் … Read more

2026-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் சேர்ப்பு – மல்யுத்தம், வில்வித்தை நீக்கம்

மெல்போர்ன், 1930-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் விளையாட்டு போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 22-வது காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடந்தது. அடுத்து 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் உள்பட 4 நகரங்களில் 2026-ம் ஆண்டு மார்ச் 17-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இடம் பெறும் விளையாட்டுகள் குறித்த விவரத்தை … Read more

ஈகுவடார் சிறையில் கலவரம் 15 கைதிகள் பலி

குய்ட்டோ, தென்அமெரிக்க நாடான ஈகுவடாரில் உள்ள சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் சிறைகளில் தொடர்ந்து அசாதாரண சூழல் நீடிக்கிறது. குறிப்பாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் ஈகுவடாரின் லடசுங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளில் இருதரப்பினருக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது சற்று நேரத்தில் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கைதிகள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அதை தொடர்ந்து … Read more

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற ஜேஸ்மின் லம்போரியா இந்திய ராணுவத்தில் சேர்ப்பு

புதுடெல்லி, இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டில் மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜேஸ்மின் லம்போரியா வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த நிலையில் இந்திய ராணுவம், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜேஸ்மின் லம்போரியா, இந்திய ராணுவத்தின் ‘மிஷன் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ராணுவக் காவல் படையில் ஹவில்தாராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா யூத் கேம்ஸ் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.42 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 41 லட்சத்து 3 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 32 பேர் பலி; திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது சோகம்

டோராடூன், உத்தரகாண்ட், லால்தாங் பகுதியில் இருந்து பவுரி மாவட்டத்தில் உள்ள பிரோன்கால் பகுதிக்கு நேற்று பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பிரோன்காலில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 50-க்கும் மேற்பட்டவர் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், மலைப்பாங்கான பகுதியில் இரவு 7.30 மணியளவில் பஸ் சென்றுகொண்டிருந்த போது சிம்ரி என்ற இடத்தில் உள்ள வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாடடை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த உள்ளூர் மக்கள்,போலீசார் மற்றும் மீட்புப்பணியினர் சம்பவ … Read more

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு அமீரகம் – மலேசியா அணிகள் இன்று மோதல்

சில்கெட், ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் 4 தொடர் ஒருநாள் போட்டி (50 ஓவர்) வடிவில் நடத்தப்பட்டது. 2012-ம் ஆண்டில் இருந்து இந்த போட்டி20 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த 20 ஓவர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த 113 ரன் இலக்கை வங்காளதேச அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்து ‘திரில்’ வெற்றியை ருசித்து முதல்முறையாக கோப்பையை … Read more

உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் நிதியுதவி: ஜெலன்ஸ்கியிடம் உறுதியளித்த ஜோ பைடன்

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷியா படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ரஷிய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் உக்ரைன்-ரஷியா போர் நிலவரம் குறித்து உக்ரைன் … Read more