உக்ரைனில் இருந்து சிறுத்தைகளை மீட்டு தர மத்திய அரசுக்கு ஆந்திர டாக்டர் கோரிக்கை

லண்டன், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எலும்பியல் மருத்துவரான கிரிகுமார் பாட்டீல் உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் டான்பாஸ் மாகாணத்தில் உள்ள செவரோடோனெட்ஸ்க்கி நகரில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை விலைக்கு வாங்கி வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார். இந்த சூழலில்தான் கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது. போர் காரணமாக உக்ரைனில் வசித்து … Read more

நீதிபதிகள் நியமனத்துக்கு எழுத்துமூலம் ஒப்புதல் கேட்பதா? – நீதிபதிகள் அதிருப்தி

புதுடெல்லி, ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளையும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளையும் நியமிப்பதில் ‘கொலிஜியம்’ என்ற அமைப்பு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியத்தில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.கே.கவுல், எஸ்.ஏ.நாசர், கே.எம்.ஜோசப் ஆகிய 5 பேர் இடம்பெற்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கு 4 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன், பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரவிசங்கர் … Read more

முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்

லக்னோ, பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து தென்ஆப்பிரிக்க அணி தொடரை இழந்தது. ஆனால் இந்தூரில் நடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் … Read more

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை புகார்: விசாரணைக்காக இன்று நேபாளம் திரும்புகிறார் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானே

காத்மாண்டு, நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார். இந்த நிலையில் தான் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நண்பர் … Read more

காஷ்மீரில் கழுத்தை அறுத்து டி.ஜி.பி. படுகொலை: நண்பர் வீட்டு வேலைக்காரர் கைது

ஜம்மு, காஷ்மீர் சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்தவர் ஹேமந்த்குமார் லோகியா. இவர், ஜம்மு புறநகர் பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவர் வீட்டில் சில நாட்களாக தங்கியிருந்தார். கடந்த திங்கட்கிழமையன்று இரவு உணவு உண்டபின் லோகியா படுக்கை அறைக்குச் சென்றார். அப்போது அந்த அறைக்குள் நுழைந்த வீட்டு வேலைக்காரர், ஒரு கூர்மையான ஆயுதத்தால் டி.ஜி.பி.யை கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேடிவந்த போலீசார், வயல்வெளியில் பதுங்கியிருந்த யாசிர் லோகர் என்ற … Read more

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட்: பில்வாரா கிங்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா கேப்பிடல்ஸ் அணி சாம்பியன்

ஜெய்பூர், ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் நேற்று இரவு ஜெய்பூரில் நடைபெற்றது. இந்த இறுதி ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிடல்ஸ் அணியும், இர்பான் பதான் தலையிலான பில்வாரா கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. அந்த அணியில் … Read more

தென்கொரியாவை நோக்கி கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணை வீச்சு!

சியோல், வட கொரியா கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பான் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ஏவுகணையை ஏவியது.வடகொரியா பரிசோதித்த ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தது. 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வட கொரிய ஏவுகணை இதுவாகும். இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியது. வடகொரியாவுக்கு … Read more

டெல்லியில் உள்ள காந்திநகர் மார்க்கெட் ஜவுளி சந்தையில் பயங்கர தீ விபத்து..! ஏராளமான துணிகள் தீயில் எரிந்து நாசம்

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வடக்கு டெல்லியில் உள்ள காந்தி நகர் மார்க்கெட் துணி சந்தையில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டு மெல்ல அப்பகுதியில் உள்ள பிற கடைகளிலும் பரவியது. இதனால் சுற்றுப்புறம் முழுவதும் புகை மண்டலமாக பரவியதால், மக்கள் அவதிக்குள்ளாகினர்.எனினும், தகவல் கிடைத்ததும் 35 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் … Read more

2026-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் சேர்ப்பு – மல்யுத்தம், வில்வித்தை நீக்கம்

மெல்போர்ன், 1930-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் விளையாட்டு போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 22-வது காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடந்தது. அடுத்து 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் உள்பட 4 நகரங்களில் 2026-ம் ஆண்டு மார்ச் 17-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இடம் பெறும் விளையாட்டுகள் குறித்த விவரத்தை … Read more

ஈகுவடார் சிறையில் கலவரம் 15 கைதிகள் பலி

குய்ட்டோ, தென்அமெரிக்க நாடான ஈகுவடாரில் உள்ள சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் சிறைகளில் தொடர்ந்து அசாதாரண சூழல் நீடிக்கிறது. குறிப்பாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் ஈகுவடாரின் லடசுங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளில் இருதரப்பினருக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது சற்று நேரத்தில் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கைதிகள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அதை தொடர்ந்து … Read more