பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு? – இந்தியா-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

சில்ஹெட், 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரைஇறுதியில் தோற்றன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் … Read more

துருக்கியில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்து – 22 பேர் பலி

அங்காரா, துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள மாகாணம் பர்டின். இந்த மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்நிலையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் … Read more

குருகிராமில் மசூதிக்குள் புகுந்து அட்டூழியம்! தொழுகை நடத்தியவர்கள் மீது 200 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்!

புதுடெல்லி, குருகிராமில் உள்ள ஒரு மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை ஒரு கும்பல் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராமில், மீண்டும் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. போடகலா கிராமத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களை நாசக்கார கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மசூதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பெண்களைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுபேதார் நாசர் முகமது என்பவர் அளித்த புகாரின்படி, போரா கலன் … Read more

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கோப்பையை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு 164 ரன்கள் இலக்கு

கிற்ஸ்ட்சர்ச், முத்தரப்பு 20 ஓவர்க் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் கான்வே 14 ரன்னுக்கும், ஆலன் 12 ரன்னுக்கும் அவுட் ஆகினர். இதையடுத்து கேப்டன் வில்லியம்சன் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக ரன்களை குவிக்க ஆரம்பித்தது. இதில் பிலிப்ஸ் 29 ரன்னுக்கும், வில்லியம்சன் … Read more

கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2020-ல் இந்தியாவில் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர் – உலக வங்கி அறிக்கை

ஜெனீவா, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- சர்வதேச அளவில் கரோனா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொழிலக நடவடிக்கைகள் ஸ்தம்பித்து உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்தது. கரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2020-ல் மட்டும் உலகளவில் 7.1 கோடி பேர் மிக வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டனர். இதில், 79 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, கரோனா பேரிடரால் மட்டும் இந்தியாவில் 5.6 கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்கு ஆளாகினர். சர்வதேச தீவிர வறுமை … Read more

நாள்தோறும் இல்லம்தோறும் ஆயுர்வேதம் என்ற செய்தி இந்தியரின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் – மத்திய மந்திரி

பனாஜி, கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற உள்ள 9-வது உலக ஆயுர்வேத மாநாடு மற்றும் ஆரோக்கிய கண்காட்சியையொட்டி (8-11, டிசம்பர், 2022) நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ்துறை மந்திரி சர்பானந்த சோனாவால் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாள்தோறும் இல்லம்தோறும் ஆயுர்வேதம்” என்ற செய்தி ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இயற்கை பாதுகாக்கப்பட்டால் மட்டுமே மனிதர்களாகிய நாம், வாழமுடியும் என்று தெரிவித்தார். இயற்கையைப் பாதுகாப்பதில் மனித சமுதாயத்திற்கு மிகப் … Read more

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: இந்தியா வெற்றி கணக்கை தொடங்குமா?

புவனேஷ்வர், 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவில் புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது … Read more

சொந்தக்கட்சி எம்.பி.க்களிடம் இருந்து இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடி வரிகுறைப்பு திட்டங்கள் மறுபரிசீலனையா?

லண்டன், இங்கிலாந்தின் புதிய பிரதமராகி உள்ள பெண் தலைவர் லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டார். கடந்த 23-ந்தேதி வெளியான மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு (சுமார் ரூ.4.5 லட்சம் கோடி) வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன்வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது நிதிச்சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ், இந்த வரிகுறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவரது … Read more

கேரளாவில் மீண்டும் ஒரு நரபலி செய்ய முயற்சி: சிறுவர்-சிறுமிகளை பூஜைகளுக்கு பயன்படுத்திய பெண் சாமியார் கைது

பாலக்காடு, பத்தினம்திட்டா அருகே சிறுவர்-சிறுமிகளை பூஜைகளுக்கு பயன்படுத்திய பெண் சாமியார் கைது செய்யப்பட்டார். அந்த சிறுவர்-சிறுமிகளை நரபலி கொடுக்க முயன்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பத்தினம்திட்டா அருகே உள்ள மலையாளபுழா பகுதியில் வசந்தி அம்மா மடம் உள்ளது. இந்த மடத்தில் வசித்து வருபவர் ஷோபனா (வயது 52). சாமியார். இங்கு கடந்த பல வருடமாக மந்திரவாதங்கள் ஷோபனா தலைமையில் நடந்து வந்துள்ளது. இந்த மந்திரவாதம் செய்யும் போது ஷோபனாவுக்கு தெரிந்த சிறுவர்- சிறுமிகளை … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி-பெங்களூரு இன்று மோதல்

சென்னை, 11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் 8-வது … Read more