4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் – இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி, பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு செல்கிறார். அங்கு சென்ற பிரதமர் மோடி 4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் டெல்லி மற்றும் உனாவின் அம்ப் அன்தெளராவுக்கும் இடையே இயக்கப்பட உள்ளது. மேலும் அங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி-யை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஹரோலியில் ரூ.1900 கோடி செலவில் கட்டப்படவுள்ள மருந்துப் பூங்காவுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதனையடுத்து, சம்பாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் … Read more

ஐநாக்ஸ் திரையரங்குகளில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு – ஒப்பந்தம் கையெழுத்து

மும்பை, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன. இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி, தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள், ஐநாக்ஸ் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

அமெரிக்காவில் பல்வேறு நாடுகளின் நிதி மந்திரிகளுடன் மத்திய நிதி மந்திரி இருதரப்பு பேச்சுவார்த்தை

வாஷிங்டன், அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வாஷிங்டன் டி.சி. நகரில் அந்நாட்டு நிதி மந்திரி ஜேனட் எல்லன்னை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும், நடப்பு சர்வதேச பொதுபொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பரஸ்பர நலன்களுக்கான பிற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளது. இந்த சந்திப்பில், வருகிற நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ள இந்திய … Read more

பிறப்பு சான்றிதழில் குழந்தைகளின் பெயரை பெற்றோரே சேர்க்கும் வசதி டெல்லி மாநகராட்சியில் அறிமுகம்

புதுடெல்லி, குழந்தைகளின் பிறப்பு உடனடியாக பதிவு செய்யப்படும்போது குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டு இருக்காது. பின்னர் பெயர் சூட்டியவுடன் அதை பிறப்பு பதிவாளரிடம் சொல்லி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெறும் வழக்கம் பல மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது. இதில் பொதுமக்களுக்கு ஆகும் காலவிரயங்களை தடுக்க டெல்லி மாநகராட்சி எளிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை குழந்தைகளின் பெற்றோரோ, பாதுகாவலரோ ஆன்லைனில் விண்ணப்பித்து உடனடியாக பெற்றுக் … Read more

தேசிய விளையாட்டு கோலாகல நிறைவு: சர்வீசஸ் 128 பதக்கங்கள் குவித்து முதலிடம் – தமிழக அணிக்கு 5-வது இடம்

ஆமதாபாத், 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், காந்திநகர், சூரத் உள்பட 6 நகரங்களில் கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் நீச்சல், தடகளம், ஆக்கி, கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், யோகாசனம் உள்பட 36 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 1,226 பதக்கங்களுக்கு 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். முதல்முறையாக இந்த போட்டியை … Read more

ரஷிய போருடன் காஷ்மீர் விவகாரம் ஒப்பீடு… ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

நியூயார்க், உக்ரைன் நாட்டின் டோனெட்ஸ்க், ஜபோரிஜ்ஜியா உள்ளிட்ட 4 பகுதிகளை ரஷியா தன்னுடன் இணைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐ.நா. பொது சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதுபற்றிய வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு 143 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்து விலகி இருந்தன. எனினும், உக்ரைனில் நடந்து வரும் போரில், பொதுமக்களின் உட்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்படுவது மற்றும் குடிமக்கள் உயிரிழப்பு … Read more

கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை நீக்கமா? நீடிக்குமா? – சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு…!

புதுடெல்லி, கர்நடாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அம்மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை என்றும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட … Read more

உலக கோப்பை: இந்திய அணியில் மாற்று வீரர்களாக முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர் சேர்ப்பு

புதுடெல்லி, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகுபகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அணியில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யார்? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய … Read more

ஸ்பெயினில் கொட்டித் தீர்த்த கனமழை – வீடுகள், வாகனங்கள் சேதம்

மேட்ரிட், ஸ்பெயின் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு காரணமாக வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. ஸ்பெயினில் உள்ள டோரெவிஜா நகரில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாகன ஓட்டிகள் பலர் சிக்கிக் கொண்டனர். அடுத்த சில தினங்களுக்கு ஸ்பெயினில் மழை தொடர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் … Read more

நாடு முழுவதும் ரூ.900 கோடி பணமுதலீட்டு மோசடி: 2 சீனர்கள் உள்பட 10 பேர் கைது

ஐதராபாத், நாட்டில் பல்வேறு இடங்களில் பணமுதலீடுகளில் மக்களை ஈடுபட செய்து, அவர்களை மோசடி செய்யும் கும்பலை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதனால், பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதன்படி, நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் பிற பகுதிகளில் உள்ள கால் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதுபற்றி ஐதராபாத் நகர காவல் ஆணையாளர் சி.வி. ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, போலியான முதலீட்டு நிறுவனங்களின் நெட்வொர்க் கண்டறியப்பட்டு உள்ளது. அந்நிறுவனங்கள் மொபைல் … Read more