அமெரிக்காவில் இந்திய மாணவரை குத்தி கொன்றது ஏன்? – கொரிய மாணவர் வாக்குமூலம்

வாஷிங்டன், அமெரிக்காவின் இன்டியானா பர்டூ பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இந்தியாவை சேர்ந்த வருண் மணீஷ் சேடா (வயது 20) என்ற மாணவர் டேட்டா சயின்ஸ் பிரிவில் பயின்று வந்தார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இவருடன் கொரியாவை சேர்ந்த மின் ஜிம்மி ஷா என்ற மாணவரும் தங்கியிருந்தார். இந்தநிலையில் கடந்த வாரம் இவர்கள் இருவரும் அறையில் இருந்தபோது மின் ஜிம்மி ஷா திடீரென வருண் மணீஷ் சேடாவை கத்தியால் குத்தி கொலை … Read more

கர்நாடகத்தில் 11-வது நாளாக ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார் ராகுல்காந்தி…!

பெங்களூரு, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு வந்தது. அங்கு 19 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது. கர்நாடகத்தில் சாம்ராஜ்நகர் மாட்டம் குண்டலுபேட்டையில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. இந்த பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு ஆகிய மாவட்டங்கள் வழியாக சித்ரதுர்கா … Read more

குஜராத்தில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு போட்டி இன்று நிறைவடைகிறது..!

ஆமதாபாத், 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், ராஜ்கோட், சூரத் உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த டிரையத்லான்( நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் ஆகிய 3 பந்தயங்கள் அடங்கிய போட்டி) கலப்பு தொடர் பிரிவில் ஆகாஷ் பெருமாள்சாமி, வாமன், ஆர்த்தி, கீர்த்தி ஆகியோர் அடங்கிய தமிழக அணி 1 மணி 59 நிமிடங்களில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. குஜராத் வெள்ளிப்பதக்கமும், மணிப்பூர் வெண்கலப்பதக்கமும் பெற்றது. அறிமுக போட்டியான … Read more

துபாயில் முதன்முறையாக பறந்த சீனாவின் பறக்கும் கார்

துபாய், சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த மின்சார கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளது. இதன்படி எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல கூடிய பறக்கும் கார் ஒன்று, முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றது. ஒரு மூலைக்கு இரண்டு என மொத்தம் நான்கு மூலைகளிலும் எட்டு மின்சார … Read more

ஆதார் எண்ணுடன் புதிய விவரங்களை சேர்க்க வேண்டும் ஆதார் முகமை அறிவுறுத்தல்

புதுடெல்லி, 10 ஆண்டுகளுக்கு முன் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை புதிய விவரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண்களை வழங்கும் அரசு முகமை (யு.ஐ.டிஏ.ஐ.) நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது. இதுவரை தற்போதைய விவரங்களை இணைக்காதவர்கள், தங்களின் அடையாள, இருப்பிடச் சான்றுகளை உரிய கட்டணம் செலுத்தி இணைத்து கொள்ளலாம். ‘மை ஆதார்’ இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள ஆதார் மையம் மூலமாகவோ … Read more

பல்கலைக்கழக கூடைப்பந்து: எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி முதலிடம்

சென்னை, சென்னை பல்கலைக்கழக மண்டல பெண்கள் கூடைப்பந்து போட்டி ஸ்ரீபவானி கலைக்கல்லூரியில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி அணியும், எஸ்.ஆர்.எம் கல்லூரி அணியும் மோதியது. இந்த போட்டியில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி அணி 33-7 என்ற புள்ளி கணக்கில் எஸ்.ஆர்.எம். கல்லூரியை எளிதில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. தினத்தந்தி Related Tags : பல்கலைக்கழகம் கூடைப்பந்து போட்டி University basketball tournament

கொரோனா பாதித்த நேபாள அதிபர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

காத்மண்டு, நேபாள அதிபராக உள்ள பித்யா தேவி பண்டாரி (வயது 61) உடல்நல குறைவால் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனையில் கடந்த 7-ந்தேதி சேர்க்கப்பட்டார். இதுபற்றி அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை காணப்படுகின்றன. இதனால், அவர் காத்மண்டுவில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். … Read more

முன்பதிவில்லா டிக்கெட் மூலம் இந்திய ரெயிவேக்கு வருவாய் 6 மடங்கு உயர்வு..!

புதுடெல்லி, கொரோனா நோய் பரவல் ஓய்ந்ததை அடுத்து நாட்டில் மக்கள் நடமாட்டம் சாதாரணமாகி உள்ளது. இதனால் பயணங்களும் அதிகரித்து உள்ளன. கொரோனாவுக்கு முன்பிருந்த இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது. இதனை ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து போன்றவை வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை மூலம் எடுத்துக்காட்டியுள்ளன. இந்திய ரெயில்வேக்கு கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் இந்த மாதம் 8-ந்தேதி வரை கிடைத்த வருவாய் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த காலக்கட்டத்தில் மொத்தம் சுமார் ரூ.33 … Read more

மாநில ஆக்கி போட்டி: எஸ்.ஆர்.எம். 'சாம்பியன்'

சென்னை, மாநில அளவிலான ஓபன் ஆக்கி போட்டி சேலத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் சென்னையை சேர்ந்த எஸ்.ஆர்.எம். அணியும், பிளாக் ஸ்டிக் கிளப் அணியும் மோதியது. இந்த போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி (சென்னை) 6-1 என்ற கோல் கணக்கில் பிளாக் ஸ்டிக் கிளப்பை (சேலம்) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எஸ்.ஆர்.எம். அணியை சேர்ந்த ரோஷன் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். தினத்தந்தி Related Tags : மாநில போட்டிகள் ஆக்கி State Tournaments hockey

இந்தியாவுக்கு வருகை தர அமெரிக்க நிதி மந்திரிக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு

வாஷிங்டன், அமெரிக்காவுக்கு 6 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வாஷிங்டன் டி.சி. நகரில் அந்நாட்டு நிதி மந்திரி ஜேனட் எல்லன்னை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும், நடப்பு சர்வதேச பொதுபொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பரஸ்பர நலன்களுக்கான பிற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளது. இந்த சந்திப்பில், வருகிற நவம்பரில் இந்தியாவில் நடைபெற … Read more