ஆதார் எண்ணுடன் புதிய விவரங்களை சேர்க்க வேண்டும் ஆதார் முகமை அறிவுறுத்தல்

புதுடெல்லி, 10 ஆண்டுகளுக்கு முன் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை புதிய விவரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண்களை வழங்கும் அரசு முகமை (யு.ஐ.டிஏ.ஐ.) நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது. இதுவரை தற்போதைய விவரங்களை இணைக்காதவர்கள், தங்களின் அடையாள, இருப்பிடச் சான்றுகளை உரிய கட்டணம் செலுத்தி இணைத்து கொள்ளலாம். ‘மை ஆதார்’ இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள ஆதார் மையம் மூலமாகவோ … Read more

பல்கலைக்கழக கூடைப்பந்து: எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி முதலிடம்

சென்னை, சென்னை பல்கலைக்கழக மண்டல பெண்கள் கூடைப்பந்து போட்டி ஸ்ரீபவானி கலைக்கல்லூரியில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி அணியும், எஸ்.ஆர்.எம் கல்லூரி அணியும் மோதியது. இந்த போட்டியில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி அணி 33-7 என்ற புள்ளி கணக்கில் எஸ்.ஆர்.எம். கல்லூரியை எளிதில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. தினத்தந்தி Related Tags : பல்கலைக்கழகம் கூடைப்பந்து போட்டி University basketball tournament

கொரோனா பாதித்த நேபாள அதிபர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

காத்மண்டு, நேபாள அதிபராக உள்ள பித்யா தேவி பண்டாரி (வயது 61) உடல்நல குறைவால் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனையில் கடந்த 7-ந்தேதி சேர்க்கப்பட்டார். இதுபற்றி அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை காணப்படுகின்றன. இதனால், அவர் காத்மண்டுவில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். … Read more

முன்பதிவில்லா டிக்கெட் மூலம் இந்திய ரெயிவேக்கு வருவாய் 6 மடங்கு உயர்வு..!

புதுடெல்லி, கொரோனா நோய் பரவல் ஓய்ந்ததை அடுத்து நாட்டில் மக்கள் நடமாட்டம் சாதாரணமாகி உள்ளது. இதனால் பயணங்களும் அதிகரித்து உள்ளன. கொரோனாவுக்கு முன்பிருந்த இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது. இதனை ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து போன்றவை வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை மூலம் எடுத்துக்காட்டியுள்ளன. இந்திய ரெயில்வேக்கு கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் இந்த மாதம் 8-ந்தேதி வரை கிடைத்த வருவாய் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த காலக்கட்டத்தில் மொத்தம் சுமார் ரூ.33 … Read more

மாநில ஆக்கி போட்டி: எஸ்.ஆர்.எம். 'சாம்பியன்'

சென்னை, மாநில அளவிலான ஓபன் ஆக்கி போட்டி சேலத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் சென்னையை சேர்ந்த எஸ்.ஆர்.எம். அணியும், பிளாக் ஸ்டிக் கிளப் அணியும் மோதியது. இந்த போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி (சென்னை) 6-1 என்ற கோல் கணக்கில் பிளாக் ஸ்டிக் கிளப்பை (சேலம்) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எஸ்.ஆர்.எம். அணியை சேர்ந்த ரோஷன் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். தினத்தந்தி Related Tags : மாநில போட்டிகள் ஆக்கி State Tournaments hockey

இந்தியாவுக்கு வருகை தர அமெரிக்க நிதி மந்திரிக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு

வாஷிங்டன், அமெரிக்காவுக்கு 6 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வாஷிங்டன் டி.சி. நகரில் அந்நாட்டு நிதி மந்திரி ஜேனட் எல்லன்னை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும், நடப்பு சர்வதேச பொதுபொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பரஸ்பர நலன்களுக்கான பிற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளது. இந்த சந்திப்பில், வருகிற நவம்பரில் இந்தியாவில் நடைபெற … Read more

பி.சி.சி.ஐ. தலைவர் பதவி விவகாரம்: கட்சியில் சேராத கங்குலியை அவமதிக்க பா.ஜ.க. முயற்சி; திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொல்கத்தா, பி.சி.சி.ஐ.யின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இருந்து வருகிறார். இந்நிலையில், வருகிற 18-ந்தேதி மும்பையில் பி.சி.சி.ஐ.யின் ஆண்டு பொது கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட கூடும் என தகவல் வெளியானது. இதற்கேற்ப பின்னி நேற்று தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். பி.சி.சி.ஐ. செயலாளராக பதவி வகிக்கும் ஜெய்ஷா, 2-வது முறையாக தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்காக … Read more

பள்ளி அணிகளுக்கான கால்பந்து: ஸ்பார்ட்டன்ஸ் வெற்றி

சென்னை, லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான கால்பந்து போட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் சிறுவர்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஒயிட் ஸ்பார்ட்டன்ஸ் அணி 5-0 என்ற கோல் கணக்கில் மஞ்சள் டைகர்ஸ் அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மஞ்சள் … Read more

அமெரிக்க விமான நிலையத்தின் இணையதளங்களில் சைபர் தாக்குதல்

நியூயார்க், அட்லாண்டா, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ், செயின்ட் லூயிஸ் விமான நிலைய இணையங்கள் ஹேக் செய்யப்பட்டன. கிவ் நெட் எனப்படும் ரஷிய சார்பு ஹேக்கிய குழு, அமெரிக்க விமான நிலைய இணைய தளங்களில் ஊடுருவியதாக குற்றம் சாட்டியுள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமான சேவை, தகவல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை. விமான நிலைய இணைய தளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் உடனே செயல்பாட்டுக்கு வந்தன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. சைபர் தாக்குதல்களால் எந்த … Read more

வயநாடு வனப்பகுதியில் 142 ஆண்டுகளுக்கு பின் மண்ணுக்குள் இருந்து வந்த அதிசய பாம்பு

பாலக்காடு: வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே பெம்பரமலை பகுதி உள்ளது. இப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 1400 அடி உயரத்தில் உள்ளது. அங்கு தொழிலாளர்கள் சிலர் வனப்பகுதியில் மண்ணை தோண்டி கொண்டிருந்தனர். அப்போது மண்ணுக்குள் இருந்து பாம்பு ஒன்று வெளியே வந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மண்ணுக்குள் இருந்து வந்த தங்க கவசவாலன் என்ற அதிசய பாம்பு பிடிபட்டு உள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். … Read more