ரிஷப் பண்ட் அணியில் களம் காணுவது அவசியம் – இந்திய முன்னாள் வீரர்

புதுடெல்லி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்த ஒரு பேட்டியில், ‘அணியில் மிடில் வரிசையில் இடக்கை ஆட்டக்காரர்கள் இருப்பது மிகவும் முக்கியம். முதல் 6 வரிசையில் நம்மிடம் இடக்கை பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. நிச்சயம் எதிரணியில் 2-3 இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். அவர்களை சமாளிக்க இடக்கை பேட்ஸ்மேன் அவசியம். 2007, 2011, 2013-ம் ஆண்டுகளில் பார்த்தால் நமது அணியில் கவுதம் கம்பீர், யுவராஜ்சிங் மற்றும் நான் ஆகிய இடக்கை ஆட்டக்காரர்கள் முக்கிய பங்களிப்பு … Read more

உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி – அமெரிக்கா அறிவிப்பு!

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 8 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது. உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷியா இந்த வாரம் 84 ஏவுகணைகளை ஏவி தாக்குதல்களை … Read more

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விவகாரம்: தேர்தல் ஆணையர் விளக்கம்

புதுடெல்லி, தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றுவது தொடர்பான பரிந்துரைக்கு அரசியல் கட்சிகளின் பதிலுக்காக காத்திருப்பதாக தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார். இமாசல பிரதேச தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார், பின்னர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குறுதி வழங்க மறுக்கமுடியாத உரிமை உள்ளது. அதை எப்படி நிறைவேற்றுவார்கள் என்பதை அறிய வாக்காளர்களுக்கும் உரிமை உண்டு.எனவே … Read more

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இந்திய பெண்கள் அணி 2-வது தோல்வி

புவனேஷ்வர், 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) முதல்முறையாக இந்தியாவில் புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘ஏ’பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் மொராக்கோவுடன் நேற்றிரவு மோதியது. முதல் பாதியில் எதிராளியின் தாக்குதலை ஓரளவு சமாளித்த இந்திய இளம் வீராங்கனைகள் பிற்பாதியில் முழுமையாக ‘சரண்’ அடைந்தனர். பந்தை 62 சதவீதம் … Read more

இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கொழும்பு, இலங்கையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதில் மேற்கு மாகாணத்தில் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. அத்துடன் கண்டி, காலே, யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையில் கடந்த ஆண்டை விட 300 மடங்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் குறைவானோரே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு … Read more

என் வாழ்நாளில் இனிமேல் பா.ஜனதாவுடன் கைகோர்க்க மாட்டேன்; நிதிஷ்குமார்

பாட்னா, பீகார் மாநிலம் சமஷ்டிபூரில், அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் புதிய கட்டிடத்தை அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- வாஜ்பாய், அத்வானி, ஜோஷி போன்ற மாபெரும் தலைவர்களின் காலத்து பா.ஜனதாவில் இருந்து தற்போதைய பா.ஜனதா வேறுபட்டது. அந்த தலைவர்கள் என் மீது பாசமும், மரியாதையும் வைத்திருந்தனர். தற்போதைய தலைவர்களிடம் அதை பார்க்க முடியவில்லை. மேலும், சாமானியர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. நான் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி விட்டேன். என் வாழ்நாளில் … Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை

சிட்னி, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை 7 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்12 சுற்றில் விளையாட உள்ளன. … Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை

சிட்னி, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை 7 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்12 சுற்றில் விளையாட உள்ளன. … Read more

கனடாவில் காலிஸ்தான் ஓட்டெடுப்பு; இந்தியா கடும் எதிர்ப்பு

புதுடெல்லி, பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டுமென சீக்கிய பயங்கரவாதிகளின் காலிஸ்தான் அமைப்பு போராடி வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நீதிக்கான சீக்கியர்கள் என்ற அமைப்பு காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த நிலையில் இந்த அமைப்பு பஞ்சாப்பை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மாதம் 18-ந்தேதி பொது வாக்கெடுப்பு நடத்தியது. இதை இந்தியா வன்மையாக கண்டித்தது. இந்த நிலையில் 2-ம் கட்டமாக அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி … Read more

2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்து விடும்; நிர்மலா சீதாராமன்

வாஷிங்டன், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.அவர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 5ஜி சேவை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- பிரதமர் மோடி, குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்து விடும். 5ஜி சேவை இன்னும் பொதுமக்களை சென்றடையவில்லை. இந்தியாவில் … Read more