மாநில வில்வித்தை போட்டி: சென்னை கல்லூரி மாணவர் 4 பதக்கம் வென்றார்

சென்னை, 15-வது மாநில வில்வித்தை போட்டி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.ஜானகி பெண்கள் கல்லூரியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான சீனியர் ரிகர்வ் பிரிவு உள்ளரங்க போட்டியில் சென்னை சோழிங்கநல்லூரியில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பி.சதீஷ் குமார் 300-க்கு 274 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதேபிரிவில் திறந்த வெளியில் நடந்த பந்தயத்தில் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். அத்துடன் அவர் ஜூனியர் ரிகர்வ் அணிகள் பிரிவிலும், கலப்பு அணிகள் பிரிவிலும் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். … Read more

மின் உற்பத்தி நிலையங்களை ரஷியா போர்க்களமாக மாற்றி வருகிறது – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

கீவ், உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷிய ராணுவம் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க ரஷியா டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருகின்றது. உக்ரைன் மின் நிலையங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை ரஷியா அழித்துள்ளது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,”எங்கள் நாட்டின் எரிசக்தி … Read more

உத்தரகாண்ட்: ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்தில் பிரதமர் மோடி வழிபாடு

கேதார்நாத், உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெள்ளத்தில் ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடம் சேதமடைந்தது. பின்னர், மறுசீரமைக்கப்பட்ட நினைவிடத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி ரூ. 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் இன்று காலை கேதார்நாத் கோயிலில் வழிபட்ட பிரதமர் மோடி ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்திற்கு சென்றார். அங்கு மறுசீரமைக்கப்பட்ட நினைவிடத்தை பார்வையிட்டு வழிபாடு … Read more

டுவிட்டர் நிறுவனத்தின் 75 சதவீத ஊழியர்களை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்?

வாஷிங்டன், டுவிட்டர் ஒப்பந்தம் விரைவில் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில், டுவிட்டரின் உரிமையாளர் ஆக உள்ள எலான் மஸ்க், பணியாளர்களின் எண்ணிகையை 75 சதவீதம் அளவிற்கு குறைக்கவும், மூன்று ஆண்டுகளில் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதன்படி, தற்போது சுமார் 7500 ஊழியர்கள் டுவிட்டரில் பணிபுரிந்து வரும் நிலையில், அந்த எண்ணிக்கை 2000 ஆக குறைக்கப்படும். இந்நிலையில், இது குறித்து, டுவிட்டர் நிறுவனத்தின் பொது ஆலோசகர் சீன் எட்ஜெட் தங்கள் நிறுவன … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சி.-கோவா அணிகள் இன்று மோதல்

சென்னை, ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கோவா அணிகள் மோதுகின்றன. 11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் ‘டாப்-6’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டும். இந்த தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,38,636 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 25,037- ஆக உள்ளதுகொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,84,646- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் … Read more

20 ஓவர் உலக கோப்பை: ஆஸ்திரேலிய வீரர் இங்லிஸ் காயத்தால் விலகல்

சிட்னி, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று இருந்த மாற்று விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் கோல்ப் விளையாடிய போது ஸ்டிக்கின் கைப்பிடி பகுதி உடைந்து அவரது வலது கையில் குத்தியதில் காயம் அடைந்தார். இதனால் அவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக பேட்டிங் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளார். தினத்தந்தி Related Tags : 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலிய … Read more

உக்ரைன் மீதான டிரோன் தாக்குதலுக்காக கிரிமியாவில் களமிறக்கப்பட்ட ஈரானிய நிபுணர்கள் – அமெரிக்கா

கீவ், உக்ரைன் மீது டிரோன் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவ நிபுணர்களை ரஷியா கிரிமியாவில் நிறுத்தியுள்ளது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈரான் கிரிமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர் என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். உக்ரைன் தலைநகரான கீவ் மீது ரஷியா கடந்த திங்களன்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன்கள் ரஷியாவால் அனுப்பப்பட்டது. ஆனால் ஈரானில் தயாரிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் … Read more

உத்தரகாண்ட் : கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று சென்றுள்ள பிரதமர் மோடி ரூ. 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார் . பின்னர், கேதார்நாத் ரோப் கார் திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். அதன் பிறகு ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்திற்கு செல்கிறார். மந்தகினி மற்றும் சரஸ்வதி அஸ்தபத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யும் அவர் , பத்ரிநாத் கோயிலில் தரிசனம் … Read more

20 ஓவர் உலக கோப்பை: அரைஇறுதி வாய்ப்பு யாருக்கு? – தெண்டுல்கர் ஆரூடம்

மும்பை, ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை எட்டும் அணிகள் எவை என்பது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். ‘இந்திய அணி உலக சாம்பியனாக வேண்டும் என்பதே எனது விருப்பம். அரைஇறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் முன்னேறும் என்பதே எனது கணிப்பு. அதே சமயம் நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா எதிர்பாராத வகையில் வியப்பூட்டும் அணிகள் ஆகும். ஆஸ்திரேலியாவில் தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை … Read more