சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீரர் அபய் சிங் 'சாம்பியன்'

சென்னை, சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இந்திய தொடருக்கான சென்னை சுற்று சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 11-4, 11-3, 11-4 என்ற நேர்செட்டில் எகிப்தின் காலித் லாபிப்பை எளிதில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் எகிப்து வீராங்கனை கென்சி அய்மான் 11-7, 11-2, 11-6 என்ற நேர்செட்டில் இந்தியாவின் சுனைனா குருவில்லாவை வீழ்த்தி சாம்பியன் … Read more

உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதற்கான பொதுவாக்கெடுப்பு தொடங்கியது

கீவ், உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி முதல் ரஷியா போர் தொடுத்து வருகிறது.தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில் ரஷிய படைகள் கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் மீது கவனம் செலுத்த தொடங்கின. இதன் மூலம் கிழக்கு, தெற்கு உக்ரைனில் உள்ள பல பகுதிகள் ரஷிய வசம் வந்தன. இந்த நிலையில் ஏற்கனவே ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் தற்போது ரஷிய படைகளம் வசம் இருக்கும் … Read more

டெல்லியில் இளம் போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு 29, 30-ந்தேதிகளில் நடக்கிறது

புதுடெல்லி, இளம் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சைபர் கிரைம் மற்றும் டிரோன்கள் தொடர்பான 2 நாள் மாநாடு வருகிற 29-ந்தேதி டெல்லியில் தொடங்குகிறது. 30-ந்தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் போலீஸ் துறை தொடர்பான கண்காட்சியும் இடம் பெறுகிறது. இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 150 போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மத்திய ஆயுதப்படைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். ‘சைபர் கிரைம் மேலாண்மை, டிரோன்கள் மற்றும் டிரோன்கள் எதிர்ப்பு பணியில் … Read more

துல்லியமாக யார்க்கர் வீசிய பும்ரா: ஆட்டமிழந்துவிட்டு பாராட்டு தெரிவித்த ஆரோன் பின்ச்- வைரல் வீடியோ

நாக்பூர், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. ஆடுகளத்தில் ஈரப்பதம் காரணமாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 91 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் … Read more

ஜப்பானில் ஷின்ஜோ அபேவுக்கு நினைவு நிகழ்ச்சி நடத்த கடும் எதிர்ப்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம்

டோக்கியோ, ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்கிற பெருமைக்குரியவரான முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி தேர்தல் பிரசாரம் ஒன்றில் பங்கேற்றிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இது ஜப்பான் மட்டும் இன்றி ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் ஷின்ஜோ அபேயின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜப்பானில் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு வருகிற 27-ந்தேதி அரசு சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் … Read more

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீது மத்திய உள்துறைக்கு தகவல் கிடைத்ததால் நடவடிக்கை தேசியவாத காங்கிரஸ் கருத்து

மும்பை, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய உள்துறைக்கு ஏதாவது தகவல் கிடைத்து இருக்கும் என தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் கூறினார். மராட்டியம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் நேற்று பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ., போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் 106 பேர் கைது செய்யப்பட்டனர். மராட்டியத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு … Read more

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் முகுருஜா அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ, பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 4-6, 2-6 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள லிட்மிலா சாம்சோனோவாவிடம் (ரஷியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற கால்இறுதி ஆட்டங்களில் ரஷியாவின் வெரோனிகா குடெர்மிடோவா 6-7 (4-7), 7-6 (8-6), 6-1 என்ற செட் கணக்கில் … Read more

உக்ரைன் போரில் பங்கேற்பதை தவிர்க்க அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷிய ஆண்கள்

மாஸ்கோ, உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷியாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் இலக்கை அடையும் வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக கூறி வருகிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் ரஷியர்களை … Read more

மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டத்துக்கு கடலுக்கு அடியில் 7 கி.மீ. சுரங்கப்பாைத புதிய டெண்டர் விடப்பட்டது

புதுடெல்லி, மராட்டிய மாநிலம் மும்பைக்கும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரெயில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மராட்டியத்தில் முந்தைய சிவசேனா ஆட்சியின்போது, நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கத்தால் முட்டுக்கட்டை நிலவியது. ஆட்சி மாறிய பிறகு, இத்திட்டம் வேகம் எடுத்துள்ளது. பூமிக்கு அடியில் அமைய உள்ள மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் ரெயில் நிலையத்துக்கும், தானே மாவட்டம் ஷில்பாடா ரெயில் நிலையத்துக்கும் இடையே 21 கி.மீ. தூரத்துக்கு சுரங்க ரெயில் பாதை அமைக்க வேண்டி உள்ளது. இதில், … Read more

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

புதுக்கோட்டை காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டன. இதில் முதல் பரிசை திருமலைகுடி அணியினரும், 2-ம் பரிசை மேலத்தானியம் அணியினரும், 3-ம் பரிசை வையாபுரிப்பட்டி அணியினரும், 4-ம் பரிசை பொன்னமராவதி அணியினரும் தட்டி சென்றனர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் … Read more