கடும் பொருளாதார நெருக்கடி: லெபனானில் வங்கிகள் காலவரையின்றி மூடல்

பெய்ரூட், மேற்காசிய நாடான லெபனான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வாங்க முடியாமல் அல்லாடுகின்றனர். லெபனான் பவுண்ட் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, பணவீக்கம் உயர்ந்ததையடுத்து 2019-ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் இருந்து டாலர்களை திரும்பப்பெறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முடக்கப்பட்ட சேமிப்புகளை மீண்டும் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வாடிக்கையாளர்கள் வங்கிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வந்தது. ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படும் … Read more

'2-ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆ.ராசா தன்னிச்சையாக செயல்பட்டார் – டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதம்

புதுடெல்லி, 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ, மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி விடுதலை செய்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ, மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த … Read more

பாபர் அசாம், ரிஸ்வான் அதிரடி: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி…!!

கராச்சி, இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 7 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கராச்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மொயின் அலி பேட்டிங்கைத் … Read more

ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 31 பேர் பலி – அதிர்ச்சி தகவல்

டெஹ்ரான், ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாஷா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அவர் கடந்த 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் … Read more

தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு போட புதிய விதி – தேர்தல் கமிஷன் பரிந்துரை

புதுடெல்லி, சட்டசபை, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணியில் ஈடுபடுகிற அரசு பணியாளர்கள், ராணுவ வீரர்கள், போலீசார் உள்ளிட்டோர் தபால் ஓட்டு போடும் நடைமுறை உள்ளது. தேர்தல் பணிக்காக அவர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறபோது தபால் ஓட்டுக்கான படிவம்-12 பி வழங்கப்படுகிறது. அதை அவர்கள் நிரப்பி வழங்குகிறபோது, பயிற்சி வகுப்பு முடிகிறபோது வாக்குச்சீட்டு வழங்கப்படும். அவர்கள் ஓட்டை பதிவு செய்து, தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் சேர்க்கலாம். அல்லது தொகுதி தேர்தல் அலுவலருக்கு தபாலில் … Read more

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா கால் இறுதிக்கு தகுதி

டோக்கியோ, பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கிரீசின் தேஸ்பினா பாபாமிக்கேலை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவரும், போட்டித்தரநிலையில் முதலிடம் பெற்றவருமான ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா 3-6, 2-6 என்ற … Read more

ஆஸ்திரேலியாவில் கொத்து, கொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

கான்பெர்ரா, ஆஸ்திரேலியா நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் நேற்று 200-க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஒரே நேரத்தில் கொத்து, கொத்தாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவற்றில் பாதிக்கும் அதிகமான திமிங்கலங்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே அவற்றை மீட்டு மீண்டும் கடலுக்குள் விடுவதற்கான முயற்சிகளில் கடற்படையினரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். எனினும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ள இடம் சிக்கலான பகுதியாக இருப்பதால் மீட்பு குழுக்களால் உடனடியாக … Read more

சூரியசக்தி தகடுகள் தயாரிக்க ரூ.19 ஆயிரம் கோடியில் திட்டம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லி, பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், சூரியசக்தி தகடுகள் உற்பத்திக்கு ரூ.19 ஆயிரத்து 500 கோடிக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் ஆண்டுக்கு 65 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சூரியசக்தி தகடுகள் நிறுவப்படும். மேலும், இத்துறையில் ரூ.94 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்துறையில் சுமார் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அத்துடன், சூரியசக்தி தகடுகளை வெளிநாடுகளில் இருந்து … Read more

208 ரன்கள் குவித்தும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; இந்திய கேப்டன் ரோகித் சர்மா புலம்பல்

மொகாலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா 208 ரன்கள் குவித்தும் தோற்றதற்கு மோசமான பந்து வீச்சு, பீல்டிங்கே காரணம் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இந்திய அணி தோல்வி மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. … Read more

கத்தாரில் நடைபெற உள்ள 2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

தோகா, 2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை நடத்த கத்தார் வேகமாக தயாராகி வருவதாக பிபா உலகக்கோப்பை போட்டிக்கான உச்சிக்குழு பொதுச்செயலாளர் ஹசன் அல் தவாடி கூறியுள்ளார். மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் முதல் முறையாக பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. மொத்தம் 8 விளையாட்டு அரங்கங்களில் 64 போட்டிகள் நடைபெற உள்ளன. … Read more