டெல்லியில் பட்டாசு விற்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் – ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல்

புதுடெல்லி, டெல்லியில் பட்டாசு விற்கவும், வெடிப்பதற்கும் தடை விதித்து டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தனியார் விற்பனை நிறுவனத்தின் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில், ‘கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் பட்டாசுக்கு தடை விதிப்பதில், அதுவும் தலைநகரில் காற்றின் தரக்குறியீடு நல்ல நிலையில் இருக்கும்போது தடை விதித்ததில் எவ்வித அடிப்படையும் இல்லை, எனவே டெல்லி அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என … Read more

அடுத்த இரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடக்கிறது – ஐ.சி.சி. அறிவிப்பு

துபாய், முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. இதில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மகுடம் சூடியது. இந்த நிலையில் அடுத்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பையும் இங்கிலாந்துக்கே ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதன்படி 2023-ம் … Read more

உக்ரைன் போர் தொடர்பாக ரஷிய அதிபரிடம் பிரதமர் மோடி பேசியது சரியானது தான்- பிரான்ஸ் அதிபர் பாராட்டு

நியூயார்க், கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்ட அவர், போருக்கான நேரம் இதுவல்ல என்று வலியுறுத்தினார். மேலும் இது குறித்து ஏற்கனவே பலமுறை தொலைபேசி வாயிலாக பேசியதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த ரஷிய அதிபர் புதின், போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் … Read more

குண்டும், குழியுமான சாலையில் 'போட்டோ ஷூட்' நடத்திய மணப்பெண்

திருவனந்தபுரம், கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி கேரளாவில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், ஆம்புலன்சின் போக்குவரத்து அதிகமாகி இருப்பதாகவும் கருத்து கூறியிருந்தார். இந்தநிலையில் சாலைகளை சீரமைக்கக்கோரி பல்வேறு சமூக அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்தின. கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாகவே சாலைகள் மோசமாக இருப்பதாக அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் சாலைகளை சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சமூக அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சாலைகளின் அவலம் குறித்து … Read more

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: 3 இந்தியர்கள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

சென்னை, சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இந்திய தொடருக்கான சென்னை சுற்று சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சுனைனா குருவில்லா (சென்னை) 8-11, 11-8, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் எகிப்தின் ஹயா அலியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு இந்திய வீராங்கனை தன்வி கண்ணா 11-8, 11-9, 7-11, 11-5 என்ற செட் கணக்கில் … Read more

பிரான்சில் மின்சாரம், எரிவாயு விலை உயர்வுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு

பாரிஸ், பிரான்ஸ் நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு, அங்கு அடுத்த ஆண்டு முதல் எரிபொருள் விலை கட்டுப்பாடு விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கான வீட்டு கட்டணங்களுக்கு 15 சதவீதம் உச்ச வரம்பு விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதில் எரிவாயு கட்டணத்திற்கான உச்ச வரம்பு ஜனவரியில் இருந்தும், மின்சார கட்டணத்திற்கான உச்ச வரம்பு பிப்வரியிலும் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டிற்கு கிடைத்து வந்த … Read more

வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் வாங்கி விட்டு மோசடி: பிரபல கப்பல் கட்டுமான நிறுவன தலைவர் கைது

புதுடெல்லி, வங்கிகளில் ரூ.22 ஆயிரத்து 842 கோடி கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த வழக்கில் பிரபல கப்பல் கட்டுமான நிறுவனத்தின் தலைவரான ரிஷி கமலேஷ் அகர்வால் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை சி.பி.ஐ. மேற்கொண்டுள்ளது. வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி போன்றவர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பவர், குஜராத் மாநிலம், சூரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கப்பல் … Read more

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

கராச்சி, இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அலெக்ஸ் ஹாலெஸ் (53 ரன்), ஹாரி புரூக் (42 ரன்) வெற்றிக்கு உதவினர். 17 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று … Read more

செவ்வாய் கிரகத்தில் உப்பு கலந்த நீர்-தாங்கும் கனிமங்கள் – சீனாவின் ஆய்வில் தகவல்

பெய்ஜிங், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக சீனாவின் விண்வெளித்துறை டியான்வென்-1 என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலத்தின் ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தைச் சுற்றி தனது சுற்றுவட்டப் பாதையில் 780 நாட்களுக்கும் அதிகமாக பயணித்துள்ளது. அதே போல் இந்த விண்கலத்தின் ‘ரோவர்’ செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சுமார் 1,921 மீட்டர் தூரம் பயணித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,480 ஜி.பி. அளவிலான தரவுகளை இந்த விண்கலம் சேமித்துள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், செவ்வாய் கிரகத்தில் நீர் தாங்கும் கனிம … Read more

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையால் போக்குவரத்து பாதிப்பு: கேரள ஐகோர்ட்டில் வழக்கு

திருவனந்தபுரம், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது. 13-வது நாளான நேற்று கேரளாவின் சேர்தலா பகுதியில் இருந்து யாத்திரை தொடங்கியது. கொச்சி மாவட்டத்தில் இரவு முகாமிடப்பட்டது. இந்நிலையில், கேரள ஐகோர்ட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்திய ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ள அவர், கேரளாவில் சாலையின் பாதி பகுதியிலேயே யாத்திரை செல்ல அனுமதி வழங்கும்படி கேட்டுக் … Read more