இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் நியூசிலாந்து ஏ அணி 237 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

பெங்களூரு, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஏ அணி, பிரியங் பஞ்சல் தலைமயிலான இந்திய ஏ அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளது. முதல் 2 போட்டிகள் டிராவில் முடிந்த சூழலில் 3-வது டெஸ்ட் பெங்களூருவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட்-யின் சதத்தால் முதல் இன்னிங்சில் 293 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 107 … Read more

'ஹிஜாப் சரியாக அணியவில்லை' – போலீசார் தாக்கியதில் இளம் பெண் உயிரிழப்பு

தெஹ்ரான், இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான உடையான ஹிஜாப் அணிவது ஈரானில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது. இதனிடையே, அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி தனது குடும்பத்துடன் கடந்த செவ்வாய்கிழமை தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அதேவேளை, ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை … Read more

கர்நாடக பா.ஜனதா செயற்குழு கூட்டம் வருகிற 24-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது

பெங்களூரு: சட்டசபை ேதர்தல் கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2023) மே மாதம் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனால் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பா.ஜனதா கட்சி ஆயத்தமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்சி கூட்டங்களையும் பா.ஜனதா மேலிடம் நடத்தி வருகிறது. ெசயற்குழு கூட்டம் அதன்படி கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 11-ந் தேதி … Read more

நியூசிலாந்து-ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் – சஞ்சு சாம்சன் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

சென்னை, நியூசிலாந்து-ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து-ஏ அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய-ஏ அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரையில் இந்தத் தொடர் நடைபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான … Read more

சீனாவில் புதிதாக 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,083 பேருக்கு … Read more

கோலார் தங்கவயலில் 971 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதி

பெங்களூரு: பொருளாதார சுமை கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மந்திரியாக இருந்த உமேஷ்கட்டி, இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடரின் 5-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரத்தில் கோலார் தங்கவயல் தொகுதி உறுப்பினர் ரூபா கலா சசிதர் கேட்ட கேள்விக்கு … Read more

வெங்கடேஷ் ஐயர் தலையில் தாக்கிய பந்து.. மைதானத்திற்குள் விரைந்த ஆம்புலன்ஸ்- துலீப் கோப்பையில் பரபரப்பு

கோவை, துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் கோவையில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மத்திய மண்டல அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 257 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதை தொடர்ந்து இன்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில், மத்திய மண்டல அணி பேட்டிங்கில் தடுமாறியது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்கள் எடுத்திருந்த போது, … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

சமர்கண்ட், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம் 8 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். அதன்படி, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இதனிடையே, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் … Read more

கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் வெடிவைத்து ஆவணங்கள் எரிப்பு; முறைகேட்டை மறைக்க மர்மநபர்கள் சதியா?

பெங்களூரு: கிராம பஞ்சாயத்து அலுவலகம் துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா ஒய்.என்.ஒசக்கோட்டை அருகே பூதிபெட்டா கிராமம் உள்ளது. அந்த கிராமத்திலேயே பூதிபெட்டா கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் ஊழியர்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றிருந்தனர். இந்த நிலையில், நள்ளிரவில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் மா்ம பொருள் வெடித்து சிதறும் சத்தம் கேட்டது. உடனே கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ஓடிவந்தனர். தகவல் அறிந்ததும் பாவகடா போலீசார் விரைந்து … Read more

டி20 உலக கோப்பை தொடர்: தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு, 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் விளையாடும் அணிகளில் இருந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில், … Read more