நட்பான இந்தியாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள் – ரஷிய அதிபர் புதின்

சமர்கண்ட், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம் 8 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். அதன்படி, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் நரேந்திரமோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, நாளை (இன்று) தனது 72 வது … Read more

கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் சாவு

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 22 ஆயிரத்து 711 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 426 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 230 பேருக்கும், சிக்பள்ளாப்பூரில் 12 பேருக்கும், ஹாசனில் 19 பேருக்கும், கலபுரகி, குடகில் தலா 13 பேருக்கும், மைசூருவில் 28 பேருக்கும், ராமநகரில் 21 பேருக்கும், சிவமொக்காவில் 15 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கதக், கலபுரகி, மைசூரு, உத்தரகன்னடாவில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரே … Read more

டி20 உலக கோப்பையில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் – பார்தீவ் பட்டேல்

டி20 உலக கோப்பையில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்தீவ் பட்டேல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது:- ஆசிய கோப்பையில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கியது போல டி20 உலக கோப்பையிலும் அவர் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். அவர் தொடக்க வீரராக களம் இறங்குவதால் அணியில் சமநிலை வருகிறது. கோலி மற்றும் ரோகித் ஆகிய இருவரும் இரு … Read more

ராணி எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த 12 மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிரபல கால்பந்து வீரர்..!!

லண்டன், இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96-வது வயதில் கடந்த 8-ந் தேதி தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது மறைவு, இங்கிலாந்து மக்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ராணியின் உடல், அங்கிருந்து வான் வழியாகவும், சாலை வழியாகவும் லண்டனுக்கு எடுத்து வரப்பட்டது. அதையடுத்து வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில ராணியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராணியின் … Read more

இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் 69 சதவீதம் பேர் பாதிப்பு

புதுடெல்லி, பருவநிலை மாற்றம் உலகையே அச்சுறுத்தி வரும் மிகப்பெரும் சவாலாக மாறி இருக்கிறது. இந்த பருவநிலை மாற்றம் ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் தொடர்பாக உலக பொருளாதார மன்றம் 34 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தியது. இதில் 23,507 பேர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்த ஆய்வில் பாதிக்கு மேற்பட்டோர், அதாவது 56 சதவீதத்தினர் தாங்கள் வாழும் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்கனவே மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டதாக தெரிவித்து உள்ளனர். இதைப்போல 22 நாடுகளில் இருந்து பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் பருவநிலை … Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: 5 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை

துபாய், 16 அணிகள் இடையிலான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது. இந்த உலக கோப்பை போட்டியை பார்க்க மொத்தம் 82 நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் வாங்கியுள்ளனர். இன்னும் ஒரு சில ஆட்டங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் மட்டுமே இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் … Read more

எந்தவொரு வல்லரசு போட்டியிலும் இலங்கை பங்கேற்காது – ரணில் விக்ரமசிங்கே உறுதி

கொழும்பு, சீன உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ சமீபத்தில் இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இதற்கு இலங்கை அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் இலங்கையில் உள்ள இந்திய-சீன தூதரகங்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் எந்தவிதமான போரிலும் இலங்கை அங்கம் வகிக்காது என அந்த நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். தேசிய ராணுவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக … Read more

எம்.பி.க்களின் கடிதத்துக்கு அரசு அதிகாரிகள் உடனடியாக பதில் அனுப்ப வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், அனைத்து மத்திய அரசு துறைகளின் செயலாளர்களுக்கும், மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அங்கீகரிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆவர். ஜனநாயக அமைப்பில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தங்கள் பணி தொடர்பாக அவர்கள் அரசு அதிகாரிகளை நாடி தகவல் பெறவோ, யோசனை தெரிவிக்கவோ வேண்டி … Read more

மாநில கைப்பந்து போட்டி: இறுதிப்போட்டியில் போலீஸ்-எஸ்.ஆர்.எம்.

சென்னை, தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் 70-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தது. ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி 25-22, 20-25, 20-25, 25-22, 15-12 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம். அணி 25-18, 25-14, 25-23 என்ற நேர்செட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை சாய்த்து … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார்

தாஷ்கண்ட், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019 ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அதன் பிறகு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் … Read more