வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

பெலகாவி: பெலகாவி அருகே காகதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உலிகனூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ரேணுகா(வயது 22). இவருக்கும், உக்கேரியை சேர்ந்த தர்மப்பா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ரேணுகா 3 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் திருமணத்தின் போது தர்மப்பாவுக்கு 50 கிராம் நகைகள் தருவதாக கூறிய ரேணுகாவின் குடும்பத்தினர் 20 கிராம் நகைகள் மட்டுமே கொடுத்ததாக தெரிகிறது. இதனால் தர்மப்பா, ரேணுகாவை வரதட்சணை கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் … Read more

பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான தடகள போட்டி

சேலம் பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார குறுமைய அளவிலான தடகள போட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய ஒன்றியங்களில் இருந்து 46-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து 6 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், போல் வால்ட், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், தடை … Read more

இந்தியாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை – இலங்கை தொடங்கியது

கொழும்பு, பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பெருமளவில் கடன் வழங்கி இருக்கின்றன. அதேநேரம் சர்வதேச நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு அந்த நாடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் வெளிநாடுகளிடம் இருந்து பெற்றுள்ள கடன்களை மறுசீரமைத்தால் மட்டுமே இலங்கைக்கு சர்வதேச நிதியத்தின் கடன் உதவி கிடைக்கும். எனவே இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. இதற்காக லசார்டு என்ற வெளிநாட்டு … Read more

அரசு பஸ் மோதி தந்தை-மகன் பலி

ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா வண்டலி ஓசூர் பகுதியில் மோட்டார் சைக்கிளும், அரசு பஸ்சும் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வண்டலி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(வயது 35), அவரது மகன் அமரேஷ்(11) ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். போலீஸ் விசாரணையில், ரமேஷ் தனது மகனுடன் தோட்டத்திற்கு சென்று திரும்பிய போது, ஹட்டியில் இருந்து தேவதுர்கா நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதும், இதில் … Read more

மாநில கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி

சென்னை, தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் 70-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 49 அணிகளும் பங்கேற்றுள்ளன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்படுகிறது. இதில் நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம். அணி 23-25, 25-21, 27-25 என்ற செட் கணக்கில் போராடி இந்தியன் வங்கியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் … Read more

கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்- உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா, உலக அளவில் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட கொரோனா தொற்று வழக்குகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்துமாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், “தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நாம் இதைவிட ஒருபோதும் சிறந்த நிலையில் இருந்ததில்லை. கொரோனா முற்றிலும் முடியவில்லை. ஆனால் அதன் முடிவு நமக்கு எட்டும் தூரத்தில் … Read more

துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை

உடுப்பி: உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா துர்கா கிராமம் டெல்லாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் ஹெக்டே(வயது 63). விவசாயியான இவர் தனது வங்கியில் கடன் வாங்கி தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். ஆனால் வனவிலங்குகள் அவரது விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாஸ்கர், வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது என்று கருதி அவதி அடைந்தார். மேலும் பதற்றத்துக்கு ஆளான அவர் நேற்று வீட்டில் இருந்த … Read more

பெண்கள் டி20 கிரிக்கெட்: ஸ்ம்ரிதி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி புதிய சாதனை

லண்டன், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று நடந்த இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மந்தனா மற்றும் ஷபாலி வர்மா இருவரும் பவர்பிளேயில் 55 ரன்களை குவித்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். நட்சத்திர வீராங்கனை … Read more

வேகமாகப் பரவும் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்- பிஏ.4.6 மாறுபாடு பற்றிய புதிய தகவல்..!!

லண்டன், கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடி வந்தது. தொற்று நோய் பரவல் முடிவுக்கு வரப்போகிறது என்று தோன்றும்போது, ​​வைரஸின் புதிய மாறுபாடு வெளிப்பட்டு, கவலைகளை தொடரச் செய்கிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸின் ஒமைக்ரான் பிஏ.4.6 துணை மாறுபாடு அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை பிஏ.4.6 துணை மாறுபாடு தற்போது இங்கிலாந்தில் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து … Read more

ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து பெங்களூரு மாநகராட்சி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த கனமழை, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெல்லந்தூர், சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகள் நீரில் தத்தளித்தன. குடியிருப்பு மற்றும் சாலைகளை வெள்ளம் சூழ்வதற்கு ராஜகால்வாய்கள் ஆக்கிரமிப்பு முக்கிய காரணம் என கூறப்பட்டது. இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி சார்பில் ராஜ கால்வாய் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி அலோக் ஆராதே, பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதில் ஏரிகள் … Read more