டென்பின் பவுலிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை சபீனா

பெங்களூரு: 31-வது தேசிய டென்பின் பவுலிங் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் தெலுங்கானா வீரர் நவீன் சித்தம் 483-457 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான கர்நாடகாவின் ஆகாஷ் அசோக்குமாரை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை சபீனா 273-261 என்ற கணக்கில் கர்நாடகாவின் ஜூடி ஆல்பனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார். தினத்தந்தி Related Tags : Sabina Tenpin Bowling சபீனா டென்பின் பவுலிங்

ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள்கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

லண்டன், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தினர். … Read more

கர்நாடக மேல்-சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டியை நியமிக்க முடிவு?

பெங்களூரு: கர்நாடகத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இநத கூட்டத்தொடரின் போது கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள மேல்-சபை தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தீர்மானித்துள்ளார். கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. இதன் காரணமாக பா.ஜனதாவை சேர்ந்த மேல்-சபை உறுப்பினர் ஒருவரே தலைவராகும் நிலை உள்ளது. இந்த நிலையில், கர்நாடக மேல்-சபை தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டிக்கு வழங்க பா.ஜனதா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனதாதளம் … Read more

பெண்கள் கால்பந்து போட்டி: அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

காத்மாண்டு: 6-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்த நடப்பு சாம்பியன் இந்திய அணி நேற்று நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-3 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்திடம் வீழ்ந்தது. லீக் சுற்று முடிவில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற வங்காளதேச அணி 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தும், இந்திய அணி … Read more

சிங்கப்பூரில் குளிர்பான பாட்டில் திருடிய இந்தியருக்கு சிறை

சிங்கப்பூர், சிங்கப்பூரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புக்கிட் மேரா நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 61 வயது முதியவர் ஜெஸ்விந்தர் சிங் தில்பரா சிங். கடந்த மாதம் 26-ந்தேதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெஸ்விந்தர் சிங், அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே இருந்த குளிர்சாதன பெட்டியின் கதவை உடைத்து, 3 சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.170) மதிப்புடைய 3 குளிர்பான பாட்டில்களை திருடி சென்றார். இது … Read more

கர்நாடகத்தில் போலீஸ் துறையில் 3-ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு; மந்திரி அரக ஞானேந்திரா அறிவிப்பு

பெங்களூரு: வாழ்வாதாரம் உலகம் முழுவதும் 3-ம் பாலினத்தவர் என்று கூறப்படும் திருநங்கைகளும், திருநம்பிகளும் வசித்து வருகிறார்கள். இதில் இந்தியாவில் மும்பை உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் திருநங்கைகள் தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் பல்வேறு இடங்களில் திருநங்கைகள் கேலி பொருளாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். மேலும் அவர்களை பலர் ஒதுக்கி வைக்கிறார்கள். இதனால் அவர்கள் தங்கள் குடும்பம், உறவினர்கள் என இந்த சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களிடம் இருந்து ஒதுங்கி தங்களைப் போன்றவர்களுடன் சேர்ந்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள். … Read more

கவுண்டி கிரிக்கெட்: இந்திய இளம் வீரரின் அசத்தல் பந்து வீச்சு

பர்மிங்காம்: கவுண்டி கிரிக்கெட் போட்டியில் வார்விக்‌ஷிர்-சோமெர்செட் அணிகள் இடையிலான ஆட்டம் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் வார்விக்‌ஷர் அணிக்காக அறிமுக வீரராக களம் கண்டுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 82 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தினத்தந்தி Related Tags : County cricket Mohammed Siraj கவுண்டி கிரிக்கெட் முகமது சிராஜ்

சீனாவில் புதிதாக 1,048 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,094 பேருக்கு … Read more

குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம்; வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் – தொழில் அதிபர் கைது

பெலகாவி: விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியை சேர்ந்தவர் சிவானந்தா. இவருக்கும் பெலகாவி மாவட்டம் அதானியை சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். தொழில் அதிபரான சிவானந்தாவுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் உண்டானது. இதனால் அவர்களுக்குள் கள்ளக்காதல் இருப்பதாக பிரீத்தி கருதினார். இதுதொடர்பாக சிவானந்தா, பிரீத்தி இடையே தகராறு உண்டானது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவானந்தாவிடம் கோபித்து கொண்டு பிரீத்தி … Read more

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் முன்னேற்றம்

புதுடெல்லி: பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்டர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத்மூனி முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீராங்கனைகள் மந்தனா 4-வது இடத்திலும், ஷபாலி வர்மா 6-வது இடத்திலும் தொடருகின்றனர். இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா 3 இடங்கள் அதிகரித்து 34-வது இடத்தையும், மற்றொரு இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் 4 இடம் உயர்ந்து 75-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பந்து வீச்சாளர்கள் … Read more